தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Nasaayi-3140

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

நன்மையையும், புகழையும் எதிர்ப்பார்த்து அறப்போர் செய்தவர்.

அபூஉமாமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! (அல்லாஹ்விடம்) கூலியையும், (மக்களிடம்) புகழையும் எதிர்ப்பார்த்து அறப்போர் செய்பவரைப் பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?; அவருக்கு என்ன கிடைக்கும்? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவருக்கு ஒன்றும் கிடைக்காது” என்று பதிலளித்தார்கள்.

அவர் இதையே திரும்ப திரும்ப மூன்று தடவை கேட்டார். அப்போதும் நபி (ஸல்) அவர்கள், “அவருக்கு ஒன்றும் கிடைக்காது” என்று பதிலளித்துவிட்டு, “அல்லாஹ்விற்காக கலப்பற்ற முறையில் மனத்தூய்மையுடனும், அவனது திருப்தி மட்டும் எதிர்ப்பார்த்து செய்யப்படும் நல்லறத்தைத் தவிர வேறு எதனையும் அல்லாஹ் ஏற்க மாட்டான்” என்று கூறினார்கள்.

(நஸாயி: 3140)

مَنْ غَزَا يَلْتَمِسُ الْأَجْرَ وَالذِّكْرَ

أَخْبَرَنَا عِيسَى بْنُ هِلَالٍ الْحِمْصِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حِمْيَرٍ، قَالَ: حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ سَلَّامٍ، عَنْ عِكْرِمَةَ بْنِ عَمَّارٍ، عَنْ شَدَّادٍ أَبِي عَمَّارٍ، عَنْ أَبِي أُمَامَةَ الْبَاهِلِيِّ، قَالَ

جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: أَرَأَيْتَ رَجُلًا غَزَا يَلْتَمِسُ الْأَجْرَ وَالذِّكْرَ، مَالَهُ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا شَيْءَ لَهُ» فَأَعَادَهَا ثَلَاثَ مَرَّاتٍ، يَقُولُ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا شَيْءَ لَهُ» ثُمَّ قَالَ: «إِنَّ اللَّهَ لَا يَقْبَلُ مِنَ الْعَمَلِ إِلَّا مَا كَانَ لَهُ خَالِصًا، وَابْتُغِيَ بِهِ وَجْهُهُ»


Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-3089.
Nasaayi-Shamila-3140.
Nasaayi-Alamiah-3089.
Nasaayi-JawamiulKalim-3106.




إسناده حسن

  • 1 . இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-28713-இக்ரிமா பின் அம்மார் பின் உக்பா அவர்கள் பற்றி வகீஃ, இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 80
    இமாம், யஃகூப் பின் ஷைபா பிறப்பு ஹிஜ்ரி 182
    இறப்பு ஹிஜ்ரி 262
    வயது: 80
    போன்றோர் பலமானவர் என்று கூறியுள்ளனர்.
  • யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
    இறப்பு ஹிஜ்ரி 168 / 198
    ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
    அல்கத்தான் அவர்கள், இவர் பலமானவர் என்றாலும் இவர் யஹ்யா பின் அபூகஸீர் வழியாக அறிவிப்பது பலவீனமானது; குளறுபடியானது என்று கூறியுள்ளார். இந்தக் கருத்தையே இவருக்கு பின்னால் வந்த புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அபூதாவூத்,பிறப்பு ஹிஜ்ரி 202
    இறப்பு ஹிஜ்ரி 275
    வயது: 73
    நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    ஹாகிம்,பிறப்பு ஹிஜ்ரி 321
    இறப்பு ஹிஜ்ரி 405
    வயது: 84
    தஹபீ,பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    போன்றோர் கூறியுள்ளனர்.
  • இமாம் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    அவர்களும் இவ்வாறே கூறியுள்ளார். மேலும் இவர் இயாஸ் பின் ஸலமா வழியாக அறிவிக்கும் செய்திகள் பரவாயில்லை. மற்றவர்கள் வழியாக அறிவிக்கும் செய்திகளில் குளறுபடி உள்ளது என்று கூறியுள்ளார்.
  • அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அவர்கள், இவர் சில செய்திகளில் சிறிது தவறிழைத்துள்ளார்; தத்லீஸ் செய்துள்ளார் என்று கூறியுள்ளார்.
  • இப்னுல் கத்தான் அவர்களும் இவர் தத்லீஸ் செய்துள்ளார். என்றாலும் இவரிடம் நூல் இல்லை என்பதால் மனனமாக அறிவிப்பார். எனவே இவர் தத்லீஸ் செய்திருந்தாலும் அது பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதல்ல. ஆனால் யஹ்யா பின் அபூகஸீர் வழியாக அறிவிப்பதில் அதிகம் தவறு உள்ளது என்று கூறியுள்ளார்.
  • இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
    இறப்பு ஹிஜ்ரி 365
    வயது: 88
    அவர்கள் இவரின் சில ஹதீஸ்களை குறிப்பிட்டு விட்டு, இவரிடமிருந்து பலமானவர்கள் அறிவித்தால் அது சரியானவை என்று கூறியுள்ளார்.

(நூல்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-7/10, அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-6/478, தஹ்தீபுல் கமால்-20/256, இக்மாலு தஹ்தீபில் கமால்-9/258, தஹ்தீபுத் தஹ்தீப்-3/132..)

  • 2 . மேலும் இதில் வரும் ராவீ-38711-முஹம்மது பின் ஹிம்யர் என்பவர் பற்றி இப்னுமயீன், துஹைம் பிறப்பு ஹிஜ்ரி 170
    இறப்பு ஹிஜ்ரி 245
    வயது: 75
    போன்றோர் பலமானவர் என்று கூறியுள்ளனர். இமாம் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    அவர்கள், இவரைப் பற்றி நான் நல்லதையே அறிந்துள்ளேன் என்று கூறியுள்ளார். நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    போன்றோர் இவர் விசயத்தில் பிரச்சனை இல்லை-சுமாரானவர் என்று கூறியுள்ளனர்.
  • யஃகூப் பின் ஸுஃப்யான் பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 83
    அவர்கள், இவர் பலமானவர் அல்ல என்று கூறியதாக இப்னுல் ஜவ்ஸீ பிறப்பு ஹிஜ்ரி 508/510
    இறப்பு ஹிஜ்ரி 597
    கூறியுள்ளார். மேலும் அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அவர்கள், இவரின் செய்திகளை எழுதிக்கொள்ளலாம்; ஆனால் ஆதாரமாக ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று கூறியுள்ளார்.

(நூல்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-1315, அல்காஷிஃப்-4/102, தஹ்தீபுத் தஹ்தீப்-3/549 )

(யஃகூப் பின் ஸுஃப்யான்,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 83
அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
போன்றோர் இவர் பலவீனமானவர் என்பதற்கு காரணத்தைக் கூறவில்லை)

இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க: குப்ரா நஸாயீ-4333 , நஸாயீ-3140 , அல்முஃஜமுல் கபீர்-7628 , அல்முஃஜமுல் அவ்ஸத்-1112 ,

இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-2516 ,

5 comments on Nasaayi-3140

  1. Idhil ikrimah bin ammar mudallisaagaa ullar
    இதில் இக்ரிமா பின் அம்மார் முதல்லிஸாக உள்ளார்.

    1. Ivar shaddad bin ammar rindu vera hadisgal hadasni enraa arvitta karanataal.indaa hadis sahihana adasthai adaikirathu
      இவர் ஷத்தாத் பின் அம்மாரிடமிருந்து வேற ஹதீஸ்களில் ஹத்தஸனீ என்று அறிவித்த காரணத்தால் இந்த ஹதீஸ் ஸஹீஹ் அந்தஸ்தை அடைகின்றது.

        1. அஸ்ஸலாமு அலைக்கும்.

          ஜஸாகல்லாஹு கைரா.மேற்கண்ட ஹதீஸ்பற்றி கூடுதல் தகவல் சேர்க்கப்பட்டுள்ளது.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.