பாடம்:
அநாதைகளின் சொத்துக்களை (அநியாயமாக) உண்பதை விட்டு விலகியிருப்பது.
“அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களைத் தவிருங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், “அல்லாஹ்வின் தூதர் அவர்களே! அவை எவை?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள்,
1 . “அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதும்,
2 . கஞ்சத்தனம் செய்வதும்,
3 . நியாயமின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிரைக் கொல்வதும்,
4 . வட்டியை உண்பதும்,
5 . அனாதைகளின் செல்வத்தை உண்பதும்,
6 . போரின்போது புறமுதுகிட்டு ஓடுவதும்,
7 . கற்புள்ள அப்பாவிகளான இறைநம்பிக்கை கொண்ட பெண்களின் மீது அவதூறு கூறுவதும் தான் (அந்தப் பெரும் பாவங்கள்)” என்று (பதில்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(நஸாயி: 3671)اجْتِنَابُ أَكْلِ مَالِ الْيَتِيمِ
أَخْبَرَنَا الرَّبِيعُ بْنُ سُلَيْمَانَ، قَالَ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ بِلَالٍ، عَنْ ثَوْرِ بْنِ زَيْدٍ، عَنْ أَبِي الْغَيْثِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«اجْتَنِبُوا السَّبْعَ الْمُوبِقَاتِ» قِيلَ: يَا رَسُولَ اللَّهِ، مَا هِيَ؟ قَالَ: «الشِّرْكُ بِاللَّهِ، وَالشُّحُّ، وَقَتْلُ النَّفْسِ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالْحَقِّ، وَأَكْلُ الرِّبَا، وَأَكْلُ مَالِ الْيَتِيمِ، وَالتَّوَلِّي يَوْمَ الزَّحْفِ، وَقَذْفُ الْمُحْصَنَاتِ الْغَافِلَاتِ الْمُؤْمِنَاتِ»
Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-.
Nasaayi-Shamila-3671.
Nasaayi-Alamiah-3611.
Nasaayi-JawamiulKalim-3630.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
இமாம்
2 . ரபீஉ பின் ஸுலைமான்
3 . அப்துல்லாஹ் பின் வஹ்ப்
4 . ஸுலைமான் பின் பிலால்
5 . ஸவ்ர் பின் ஸைத்
6 . ஸாலிம் அல்அதவீ-அபுல் ஃகைஸ்
7 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
இந்தச் செய்தியில் கஞ்சத்தனம் செய்வதும் பெரும்பாவங்களில் அடங்கும் என்று இடம்பெற்றுள்ளது. அப்துல்லாஹ் பின் வஹ்ப் அவர்களிடமிருந்து அறிவிக்கும் ரபீஉ பின் ஸுலைமான் அவர்கள் மட்டுமே இவ்வாறு அறிவித்துள்ளார்.
அப்துல்லாஹ் பின் வஹ்ப் அவர்களின் முக்கிய மாணவரான ஹாரூன் பின் ஸயீத் அவர்களும், அப்துல்லாஹ் பின் வஹ்ப் அவர்களின் ஆசிரியரிடமிருந்து அறிவிக்கும் அப்துல்அஸீஸ் அவர்களும் “சூனியம் செய்வது” என்று அறிவித்துள்ளனர். எனவே இந்த வார்த்தைதான் சரியானதாகும்.
(பார்க்க: புகாரி: 2766 , முஸ்லிம்-145)
மேலும் பார்க்க: புகாரி-2766 .
சமீப விமர்சனங்கள்