தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Nasaayi-4719

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அன்ஸாரிகளுள் ஒருவரான சஹ்ல் பின் அபூஹஸ்மா (ரலி) அவர்கள் தமக்கு அறிவித்ததாக புஷைர் பின் யசார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

தம்முடைய சமுதாயத்திலிருந்து சிலர் கைபருக்குச் சென்றார்கள். அவர்கள் அதில் (பேரீச்சந் தோப்புக்குள்) தனித்தனியே பிரிந்து விட்டனர். பின்னர் அவர்களுள் ஒருவர் கொல்லப்பட்டுவிட்டதைக் கண்டார்கள். பிறகு அவர்களுக்கு அருகில் இருந்தவர்களிடம், “நீங்கள்தாம் எங்களின் தோழரைக் கொன்றுவிட்டீர்கள்” என்று கூறினர். அதற்கு அவர்கள், “நாங்கள் அவரைக் கொல்லவில்லை. கொன்றவரையும் எங்களுக்குத் தெரியாது” என்று கூறினார்கள்.

எனவே அவர்கள் அல்லாஹ்வின் நபி (ஸல்) அவர்களிடம் சென்றார்கள். “அல்லாஹ்வின் நபியே! நாங்கள் கைபருக்குச் சென்றோம். எங்களுள் ஒருவர் கொலை செய்யப்பட்டதைக் கண்டோம்” என்று கூறினார்கள். அச்சமயத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “வயதில் மூத்தவர் முதலில் பேசட்டும்” என்று கூறினார்கள். அதன்பின் அவர்களிடம், “கொன்றவனுக்கு எதிராக ஏதேனும் ஆதாரத்தைக் கொண்டுவருகின்றீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “எங்களிடம் எந்த ஆதாரமும் இல்லை” என்று கூறினார்கள்.

(அப்படியானால்) உங்களுக்காக (யூதர்களாகிய) அவர்கள் சத்தியம் செய்யட்டுமா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “யூதர்களின் சத்தியத்தை நாங்கள் ஏற்கமாட் டோம்” என்று கூறினார்கள். அவருக்கான இழப்பீட்டுத்தொகை வீணாகிப்போவதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விரும்பவில்லை. ஆகவே ஸதகாவின் (தர்ம) ஒட்டகங்களிலிருந்து நூறு ஒட்டகங்களைக் கொடுத்தார்கள்.

(மேற்கண்ட இந்தச் செய்தியின் கருத்துக்கு மாற்றமாக அம்ர் பின் ஷுஐப் (ரஹ்) அவர்கள் அறிவித்துள்ளார். பார்க்க: நஸாயீ-4720)

(நஸாயி: 4719)

أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ: حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُبَيْدٍ الطَّائِيُّ، عَنْ بُشَيْرِ بْنِ يَسَارٍ، زَعَمَ أَنَّ رَجُلًا مِنَ الْأَنْصَارِ يُقَالُ لَهُ: سَهْلُ بْنُ أَبِي حَثْمَةَ أَخْبَرَهُ،

أَنَّ نَفَرًا مِنْ قَوْمِهِ انْطَلَقُوا إِلَى خَيْبَرَ، فَتَفَرَّقُوا فِيهَا فَوَجَدُوا أَحَدَهُمْ قَتِيلًا، فَقَالُوا لِلَّذِينَ وَجَدُوهُ عِنْدَهُمْ: قَتَلْتُمْ صَاحِبَنَا. قَالُوا: مَا قَتَلْنَاهُ، وَلَا عَلِمْنَا قَاتِلًا. فَانْطَلَقُوا إِلَى نَبِيِّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالُوا: يَا نَبِيَّ اللَّهِ، انْطَلَقْنَا إِلَى خَيْبَرَ فَوَجَدْنَا أَحَدَنَا قَتِيلًا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْكُبْرَ الْكُبْرَ» فَقَالَ لَهُمْ: «تَأْتُونَ بِالْبَيِّنَةِ عَلَى مَنْ قَتَلَ؟». قَالُوا: مَا لَنَا بَيِّنَةٌ. قَالَ: «فَيَحْلِفُونَ لَكُمْ». قَالُوا: لَا نَرْضَى بِأَيْمَانِ الْيَهُودِ، وَكَرِهَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَبْطُلَ دَمُهُ فَوَدَاهُ مِائَةً مِنْ إِبِلِ الصَّدَقَةِ

«خَالَفَهُمْ عَمْرُو بْنُ شُعَيْبٍ»


Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-.
Nasaayi-Shamila-4719.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-.




மேலும் பார்க்க: புகாரி-7192 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.