பாடம்:
வழிக்கேட்டை விட்டு (அல்லாஹ்விடம்) பாதுகாப்பு கேட்பது.
உம்மு ஸலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தமது வீட்டை விட்டு வெளியே செல்லும் போது, “பி(B]ஸ்மில்லாஹி ரப்பி(B] அவூது பி(B](க்)க மின் அன் அஸில்ல அவ் அழில்ல அவ் அள்ளிம அவ் உள்லம அவ் அஜ்ஹல அவ் யுஜ்ஹல அலய்ய” என்ற பிரார்த்தனையைக் கூறும் வழமையுள்ளவர்களாக இருந்தார்கள்.
(பொருள்: அல்லாஹ்வின் பெயரால் (வெளியேறுகிறேன்.) என் இறைவா! நான் பிறரை சறுகச் செய்யாமலும், வழிக்கெடுக்காமலும்; அநீதி இழைக்காமலும், அநீதி இழைக்கப்படாமலும்; மூடனாகாமலும், (பிறரை) மூடராக்காமலும் இருக்க உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்).
(நஸாயி: 5486)الِاسْتِعَاذَةُ مِنَ الضَّلَالِ
أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ قُدَامَةَ، قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ الشَّعْبِيِّ، عَنْ أُمِّ سَلَمَةَ،
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا خَرَجَ مِنْ بَيْتِهِ قَالَ: «بِسْمِ اللَّهِ، رَبِّ أَعُوذُ بِكَ مِنْ أَنْ أَزِلَّ أَوْ أَضِلَّ، أَوْ أَظْلِمَ أَوْ أُظْلَمَ، أَوْ أَجْهَلَ أَوْ يُجْهَلَ عَلَيَّ»
Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-5391.
Nasaayi-Shamila-5486.
Nasaayi-Alamiah-5391.
Nasaayi-JawamiulKalim-5419.
இந்த ஹதிஸில் இடம்பெறக்கூடிய அறிவிப்பாளர் ஷஃபி அவர்கள் உம்மு ஸலமா(ரலி) அவர்களிடத்தில் இந்த ஹதீஸை நேரடியாக கேட்கவில்லை என்ற விமர்சனத்தின் அடிப்படையில் ளயீப் என்று ஒரு ஸலஃப் இமாம் கூறுகிறார். இது சரியா?
அஸ்ஸலாமு அலைக்கும்.
இது விசயத்தில் இரு வகையான கருத்துக்கள் உள்ளன. இவற்றில் எது சரி என்பதற்கு தகுந்த சான்றுகள் தேவை. பார்க்க: அபூதாவூத்-5094 .
ஜஸாகல்லாஹு கைரன்