தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Nasaayi-589

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களுடன், மதீனாவில் எட்டு ரக்அத் (கொண்ட லுஹர், அஸர் ஆகிய தொழுகை)களை ஒரே நேரத்தில் தொழுதிருக்கிறேன்; ஏழு ரக்அத் (கொண்ட மஃக்ரிப், இஷா ஆகிய தொழுகை)களை ஒரே நேரத்தில் தொழுதிருக்கிறேன்.

அதில் லுஹர் தொழுகையைத் தாமதப்படுத்தி அஸரின் ஆரம்ப நேரத்திலும், மஃக்ரிப் தொழுகையைத் தாமதப்படுத்தி இஷாவின் ஆரம்ப நேரத்திலும் தொழுகை நடத்தினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் ஸைத் (ரஹ்)

(நஸாயி: 589)

الْوَقْتُ الَّذِي يَجْمَعُ فِيهِ الْمُقِيمُ

أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، عَنْ جَابِرِ بْنِ زَيْدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ:

«صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْمَدِينَةِ ثَمَانِيًا جَمِيعًا وَسَبْعًا جَمِيعًا،

أَخَّرَ الظُّهْرَ وَعَجَّلَ الْعَصْرَ، وَأَخَّرَ الْمَغْرِبَ وَعَجَّلَ الْعِشَاء»


Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-.
Nasaayi-Shamila-589.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-585.




  • இந்த செய்தியின் இரண்டாவது பகுதி முத்ரஜ் ஆகும். இது ஜாபிர் பின் ஸைத் (அபுஷ்ஷஅஸா) அவர்களின் சொல்லாகும்.

மேலும் பார்க்க : புகாரி-543 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.