பாடம்:
தவறவிட்ட தொழுகைகளுக்காக பாங்கு சொல்வது.
அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அகழ்ப்போர் சமயத்தில் நாங்கள் லுஹர் தொழுகையைத் தொழ முடியாதவாறு இணைவைப்பாளர்கள் எங்களை போரில் ஈடுபட செய்துவிட்டனர். போர் சூரியன் மறையும் வரை நீடித்தது. போர் குறித்த (கடுமையான) கட்டளைகள் இறங்குவதற்கு முன்பு இது நடந்தது.
பிறகு, “நம்பிக்கை கொண்டோருக்காக போரிட அல்லாஹ் போதுமானவன்” (அல்குர்ஆன்: 33:25) எனும் வசனத்தை அல்லாஹ் இறக்கினான்.
எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிலால் (ரலி) அவர்களுக்கு (தவறவிட்ட தொழுகைக்காக இகாமத் கூறுமாறு) கட்டளையிட்டார்கள். பிலால் (ரலி) அவர்கள் லுஹர் தொழுகைக்கு இகாமத் சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள் அதை அதன் நேரத்தில் தொழுவது போலவே தொழுதார்கள். பின்னர் அஸர் தொழுகைக்கு இகாமத் சொன்னார்கள். அதையும் அதன் நேரத்தில் தொழுவது போலவே தொழுதார்கள். பின்னர் மஃக்ரிப் தொழுகைக்கு பாங்கு சொன்னார்கள். அதையும் அதன் நேரத்தில் தொழுவது போலவே தொழுதார்கள்.
(நஸாயி: 661)الْأَذَانُ لِلْفَائِتِ مِنَ الصَّلَوَاتِ
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ قَالَ: حَدَّثَنَا يَحْيَى قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ قَالَ: حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي سَعِيدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِيهِ قَالَ:
شَغَلَنَا الْمُشْرِكُونَ يَوْمَ الْخَنْدَقِ عَنْ صَلَاةِ الظُّهْرِ حَتَّى غَرَبَتِ الشَّمْسُ، وَذَلِكَ قَبْلَ أَنْ يَنْزِلَ فِي الْقِتَالِ مَا نَزَلَ، فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ: {وَكَفَى اللَّهُ الْمُؤْمِنِينَ الْقِتَالَ} [الأحزاب: 25] «فَأَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِلَالًا فَأَقَامَ لِصَلَاةِ الظُّهْرِ فَصَلَّاهَا كَمَا كَانَ يُصَلِّيهَا لِوَقْتِهَا، ثُمَّ أَقَامَ لِلْعَصْرِ فَصَلَّاهَا كَمَا كَانَ يُصَلِّيهَا فِي وَقْتِهَا، ثُمَّ أَذَّنَ لِلْمَغْرِبِ فَصَلَّاهَا كَمَا كَانَ يُصَلِّيهَا فِي وَقْتِهَا»
Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-655.
Nasaayi-Shamila-661.
Nasaayi-Alamiah-655.
Nasaayi-JawamiulKalim-655.
சமீப விமர்சனங்கள்