தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Nasaayi-68

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்: 54

பூனை (வாய் வைத்து) எச்சில்பட்ட தண்ணீர்.

கப்ஷா பின்த் கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

என்னிடம் (என் மாமனார்) அபூகத்தாதா (ரலி) அவர்கள்வந்தார்கள். அவர்களுக்கு அங்கத்தூய்மை செய்யத் தண்ணீர் ஊற்றினேன். அப்போது, ஒரு பூனை வந்து அதில் (வாய் வைத்துக்) குடித்தது. அது குடித்துமுடிக்கும் வரை பாத்திரத்தை அதற்காக அபூகத்தாதா (ரலி) அவர்கள் சரித்துப் பிடித்தார்கள். நான் (வியப்புடன்) அவர்களைப் பார்த்தேன்.

அப்போது அவர்கள், “என் சகோதரரின் மகளே! (அங்கத்தூய்மை செய்யும் தண்ணீரைப் பூனை குடிப்பதைக் கண்டு) நீ வியப்படைகிறாயா?” என்று என்னிடம் கேட்டார்கள். அதற்கு நான், ‘ஆம்’ என்றேன். அப்போது அவர்கள், “திண்ணமாக, பூனை அசுத்தமான பிராணியன்று. அது உங்களையே சுற்றி சுற்றி வரக்கூடிய பிராணிகளில் ஒன்றாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என (அபூகத்தாதா-ரலி அவர்கள்) கூறினார்கள்.

(நஸாயி: 68)

سُؤْرُ الْهِرَّةِ

أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ حُمَيْدَةَ بِنْتِ عُبَيْدِ بْنِ رِفَاعَةَ، عَنْ كَبْشَةَ بِنْتِ كَعْبِ بْنِ مَالِكٍ،

أَنَّ أَبَا قَتَادَةَ دَخَلَ عَلَيْهَا – ثُمَّ ذَكَرَتْ كَلِمَةً مَعْنَاهَا – فَسَكَبْتُ لَهُ وَضُوءًا، فَجَاءَتْ هِرَّةٌ فَشَرِبَتْ مِنْهُ، فَأَصْغَى لَهَا الْإِنَاءَ حَتَّى شَرِبَتْ. قَالَتْ كَبْشَةُ: فَرَآنِي أَنْظُرُ إِلَيْهِ فَقَالَ: أَتَعْجَبِينَ يَا ابْنَةَ أَخِي؟ فَقُلْتُ: نَعَمْ. قَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّهَا لَيْسَتْ بِنَجَسٍ، إِنَّمَا هِيَ مِنَ الطَّوَّافِينَ عَلَيْكُمْ وَالطَّوَّافَاتِ»


Nasaayi-Tamil-68.
Nasaayi-TamilMisc-68.
Nasaayi-Shamila-68.
Nasaayi-Alamiah-67.
Nasaayi-JawamiulKalim-67.




மேலும் பார்க்க: அபூதாவூத்-75 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.