தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Nasaayi-778

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

அநியாயக்கார தலைவர்களுடன் சேர்ந்து தொழுதல்.

அபுல்ஆலியா அல்பர்ராஃ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை பஸராவின் ஆளுநராக இருந்த) ஸியாத், தொழுகையை (உரிய நேரத்தில்) தொழாமல் தாமதப்படுத்தினார். அப்போது அப்துல்லாஹ் பின் ஸாமித் (ரஹ்) அவர்கள் என்னிடம் வந்தார். (அவரை வரவேற்று) அவருக்காக நாற்காலியை போட அதில் அவர்கள் அமர்ந்தார். அப்போது நான் அவர்களிடம், ஸியாத் செய்தது பற்றி கேட்டேன். அப்போது அவர்கள் (கோபத்துடன்) தமது உதட்டைக் கடித்துக்கொண்டு என் தொடையில் ஓர் அடி அடித்து விட்டு கூறியதாவது: அபுல்ஆலியாவே! நீங்கள் என்னிடம் கேட்டதைப் போன்று நான் (என் தந்தையின் உடன்பிறந்த சகோதரர்) அபூதர் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அவர்கள், நான் உமது தொடையில் அடித்ததைப் போன்றே என் தொடையில் அடித்து விட்டு, அப்துல்லாஹ் பின் ஸாமித் அவர்களே! நீங்கள் என்னிடம் கேட்டதைப் போன்றே நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு, நான் உமது தொடையில் அடித்ததைப் போன்று என் தொடையில் நபி (ஸல்) அவர்கள் அடித்து விட்டு, “தொழுகையை அதன் உரிய நேரத்தில் (தனியாக) தொழுதுக் கொள்ளுங்கள். பிறகு (தாமதப்படுத்தும்) அவர்களுடன் நீங்கள் தொழுகையை அடைந்துக் கொண்டால் அப்போதும் அவர்களுடன் இணைந்து தொழுதுக் கொள்ளுங்கள். (ஆனால் அந்த நேரத்தில்) நான் தொழுது விட்டேன். ஆகவே தொழமாட்டேன் என்று கூறாதீர்கள்” என்று சொன்னார்கள் என்று கூறினார்கள்.

(நஸாயி: 778)

الصَّلَاةُ مَعَ أَئِمَّةِ الْجَوْرِ

أَخْبَرَنَا زِيَادُ بْنُ أَيُّوبَ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ قَالَ: حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ أَبِي الْعَالِيَةِ الْبَرَاءِ قَالَ:

أَخَّرَ زِيَادٌ الصَّلَاةَ فَأَتَانِي ابْنُ صَامِتٍ فَأَلْقَيْتُ لَهُ كُرْسِيًّا فَجَلَسَ عَلَيْهِ، فَذَكَرْتُ لَهُ صُنْعَ زِيَادٍ فَعَضَّ عَلَى شَفَتَيْهِ وَضَرَبَ عَلَى فَخِذِي وَقَالَ: إِنِّي سَأَلْتُ أَبَا ذَرٍّ كَمَا سَأَلْتَنِي فَضَرَبَ فَخِذِي كَمَا ضَرَبْتُ فَخِذَكَ وَقَالَ: إِنِّي سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَمَا سَأَلْتَنِي فَضَرَبَ فَخِذِي كَمَا ضَرَبْتُ فَخِذَكَ فَقَالَ عَلَيْهِ الصَّلَاة وَالسَّلَامُ: ” صَلِّ الصَّلَاةَ لِوَقْتِهَا، فَإِنْ أَدْرَكْتَ مَعَهُمْ فَصَلِّ وَلَا تَقُلْ: إِنِّي صَلَّيْتُ فَلَا أُصَلِّي


Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-.
Nasaayi-Shamila-778.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-770.




மேலும் பார்க்க: முஸ்லிம்-1140 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.