12561. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
முஃமின் – இறை நம்பிக்கையாளர் யாரெனில் (தங்கள் உயிர்கள் மற்றும் உடமைகள் விஷயத்தில்) மக்கள் யார் விஷயத்தில் அச்சமற்று இருக்கிறார்களோ அவரே ஆவார்.
முஸ்லிம் யாரெனில் எவருடைய நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் மற்ற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறார்களோ அவரே ஆவார்.
எவர் பாவங்களிலிருந்து விலகிக்கொண்டாரோ அவரே முஹாஜிர் (துறந்தவர்) ஆவார்.
என் உயிர் யார் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! எவருடைய நாசவேலைகளில் இருந்து அவருடைய அண்டைவீட்டார்க்குப் பாதுகாப்பு உணர்வு ஏற்படவில்லையோ அந்த அடியார் சொர்க்கத்தில் நுழையமாட்டார்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
«الْمُؤْمِنُ مَنْ أَمِنَهُ النَّاسُ، وَالْمُسْلِمُ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ، وَالْمُهَاجِرُ مَنْ هَجَرَ السُّوءَ، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَا يَدْخُلُ الْجَنَّةَ عَبْدٌ لَا يَأْمَنُ جَارُهُ بَوَائِقَهُ»
சமீப விமர்சனங்கள்