Search Results for: ஹம்மாத் பின் ஸலமா

Abu-Dawood-1464

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

பாடம்:

குர்ஆனை நிறுத்தி நிதானமாக ஓதுவது விரும்பத்தக்கது.

1464.  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

குர்ஆனுடன் (அதை உணர்ந்து) வாழ்ந்தவரிடம் (அவர் சொர்க்கத்திற்குச் செல்லும்போது) “ஓதுக; (சொர்க்கப் படிநிலைகளில்) உயருக; உலகில் நீர் நிறுத்தி நிதானமாக ஓதிக்கொண்டிருந்ததைப் போன்று (இங்கும்) ஓதுக! ஏனெனில், நீர் ஓதி முடிக்கும் இறுதி வசனத்திற்கு அருகில்தான் நீர் தங்கப் போகுமிடம் அமைந்துள்ளது” என்று கூறப்படும்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


يُقَالُ لِصَاحِبِ الْقُرْآنِ: اقْرَأْ، وَارْتَقِ، وَرَتِّلْ كَمَا كُنْتَ تُرَتِّلُ فِي الدُّنْيَا، فَإِنَّ مَنْزِلَكَ عِنْدَ آخِرِ آيَةٍ تَقْرَؤُهَا


Abi-Yala-4867

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

4867. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்கள் இல்லங்களிலும் சில தொழுகைகளைத் தொழுங்கள்!

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


«اجْعَلُوا مِنْ صَلَاتِكُمْ فِي بُيُوتِكُمْ»


Alilal-Ibn-Abi-Hatim-759

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

759. அப்துர்ரஹ்மான் பின் முஹம்மத் (இப்னு அபூஹாதிம்) கூறுகிறார்:

ரவ்ஹு பின் உபாதா அவர்கள், ஹம்மாத் பின் ஸலமா —> முஹம்மது பின் அம்ர் —> அபூஸலமா —> அபூஹுரைரா (ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவிக்கும் “உங்களில் ஒருவர் (நோன்பு வைக்க ஸஹர் உணவு உண்ணும் போது) தமது கையில் உணவுத் தட்டு வைத்திருக்கும் நிலையில் தொழுகை அறிவிப்பை செவியுற்றால் அதிலிருந்து தமது தேவைக்கேற்ப உண்டு முடிக்கும்வரை பாத்திரத்தை கீழே வைக்க வேண்டாம்” என்ற செய்தி பற்றியும்,

ஹம்மாத் பின் ஸலமா —> அம்மார் பின் அபூஅம்மார் —> அபூஹுரைரா (ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் மேற்கண்ட செய்தியுடன் “தொழுகை அறிவிப்பாளர் ஃபஜ்ர் உதயமாகும் போது பாங்கு கூறுவார்” என்று அறிவிக்கும் செய்தி பற்றியும் எனது தந்தை அபூஹாதிம் அவர்களிடம் கேட்டேன்.

அதற்கவர்கள், “இந்த இரண்டு செய்திகளும் சரியானவை அல்ல; அம்மார் பின் அபூஅம்மார் அறிவிக்கும் செய்தி அபூஹுரைரா (ரலி) அவர்களின் கூற்று என்பதே உண்மையாகும். அம்மார் பலமானவர் ஆவார். (முஹம்மது பின் அம்ர் இடம்பெறும்) மற்றொரு செய்தி சரியானதல்ல” என்று பதிலளித்தார்கள்.

 


إِذا سمِع أحدُكُمُ النِّداء ، والإِناءُ على يدِهِ فلا يضعهُ حتّى يقضِي حاجتهُ مِنهُ.

قُلتُ لأبِي : وروى روحٌ أيضًا عن حمّادٍ ، عن عمّارِ بنِ أبِي عمّارٍ ، عن أبِي هُريرة ، عنِ النّبِيِّ صلى الله عليه وسلم مِثلهُ ، وزاد فِيهِ : وكان المُؤذِّنُ يُؤذِّنُ إِذا بزغ الفجرُ.
قال أبِي : هذينِ الحدِيثينِ ليسا بِصحِيحينِ : أمّا حدِيثُ عمار ، فعن أبِي هُريرة موقُوفٌ وعمّارٌ ثِقةٌ. والحدِيثُ الآخرُ ليس بِصحِيحٍ.


Kubra-Bayhaqi-8020

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

8020. ஹதீஸ் எண்-8019 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.

ரவ்ஹு பின் உபாதாவிடமிருந்து அறிவிக்கும் முஹம்மது பின் அஹ்மத் அர்ரியாஹீ என்பவர் மேற்கண்ட செய்தியுடன் “அப்போது தொழுகை அறிவிப்பாளர்கள் ஃபஜ்ர் உதயமாகும் போது பாங்கு கூறுவார்கள்” என்ற கூடுதலான வாசகத்தை அறிவித்துள்ளார்.

ஹம்மாத் பின் ஸலமாவிடமிருந்து அறிவிக்கும் மற்றவர்களும் இவ்வாறே அறிவித்துள்ளனர்.

பைஹகீ இமாம் கூறுகிறார்:

மேற்கண்ட செய்திகளை சரியானவை என்று ஏற்றுக் கொண்டாலும் அதிகமான கல்வியாளர்கள், “தொழுகை அறிவிப்பாளர் ஃபஜ்ர் உதயமாகுவதற்குச் சற்று முன்பே பாங்கு கூறுவார் என்பதால் அப்போது தண்ணீர் குடித்துக் கொள்வது ஃபஜ்ர் உதயமாகுவதற்கு முன்பே அமைந்துவிடும்” என்று இந்தச் செய்திகளுக்கு விளக்கமளிக்கின்றனர்.

“அப்போது தொழுகை அறிவிப்பாளர்கள் ஃபஜ்ர் உதயமாகும் போது பாங்கு கூறுவார்கள்” என்ற வாசகம் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் அறிவிப்பாளர்கள் கூறிய வாசகமாக இருக்க வாய்ப்புள்ளது. இதன்படி இது அறிவிப்பாளர்தொடர் இடைமுறிந்த செய்தியாகிவிடும். அல்லது இந்த வாசகம் இரண்டாவது பாங்கைப் பற்றிக் கூறுவதாக எடுத்துக் கொள்ளலாம்.

“உங்களில் ஒருவர் (நோன்பு வைக்க ஸஹர் உணவு உண்ணும் போது)

مِثْلَهُ ,

قَالَ الرِّيَاحِيُّ فِي رِوَايَتِهِ وَزَادَ فِيهِ: وَكَانَ الْمُؤَذِّنُونَ يُؤَذِّنُونَ إِذَا بَزَغَ الْفَجْرُ.

وَكَذَلِكَ رَوَاهُ غَيْرُهُ عَنْ حَمَّادٍ،


Hakim-729

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

729. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் (நோன்பு வைக்க ஸஹர் உணவு உண்ணும் போது) தமது கையில் உணவுத் தட்டு வைத்திருக்கும் நிலையில் தொழுகை அறிவிப்பை செவியுற்றால் அதிலிருந்து தமது தேவைக்கேற்ப உண்டு முடிக்கும்வரை பாத்திரத்தை கீழே வைக்க வேண்டாம்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

ஹாகிம் இமாம் கூறுகிறார்:

அபூபக்ர் பின் இஸ்ஹாக் அவர்கள், இந்த செய்தியை ஹம்மாத் பின் ஸலமா —> அம்மார் பின் அபூஅம்மார் —> அபூஹுரைரா (ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரிலும் அறிவித்துள்ளார்.

மேற்கண்ட செய்தி முஸ்லிம் இமாமின் நிபந்தனைப்படி உள்ள செய்தியாகும். புகாரீ, முஸ்லிம் ஆகியோர் இதைப் பதிவு செய்யவில்லை.


«إِذَا سَمِعَ أَحَدُكُمُ النِّدَاءَ وَالْإِنَاءُ عَلَى يَدِهِ فَلَا يَضَعُهُ حَتَّى يَقْضِيَ حَاجَتَهُ مِنْهُ»

وَفِي حَدِيثِ أَبِي بَكْرِ بْنِ إِسْحَاقَ، قَالَ: وَحَدَّثَنَا حَمَّادٌ، عَنْ عَمَّارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ بِمِثْلِهِ.


Daraqutni-2182

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

ஸஹர் நேரம்.

2182. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் (நோன்பு வைக்க ஸஹர் உணவு உண்ணும் போது) தமது கையில் உணவுத் தட்டு வைத்திருக்கும் நிலையில் தொழுகை அறிவிப்பை செவியுற்றால் அதிலிருந்து தமது தேவைக்கேற்ப உண்டு முடிக்கும்வரை பாத்திரத்தை கீழே வைக்க வேண்டாம்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

தாரகுத்னீ இமாம் கூறுகிறார்:

இந்தச் செய்தியை (ஹம்மாத் பின் ஸலமாவிடமிருந்து அறிவிக்கும் அப்துல்அஃலா என்பவர் நபியின் கூற்றாக அறிவித்திருப்பதைப் போன்றே) ரவ்ஹு பின் உபாதாவும் நபியின் கூற்றாக அறிவித்துள்ளார் என அபூதாவூத் இமாம் கூறினார்.


«إِذَا سَمِعَ أَحَدُكُمُ النِّدَاءَ وَالْإِنَاءُ عَلَى يَدِهِ فَلَا يَضَعْهُ حَتَّى يَقْضِيَ حَاجَتَهُ مِنْهُ».


Abu-Dawood-2350

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

ஒருவர் தனது கையில் உணவுத் தட்டு வைத்திருக்கும் போது தொழுகை அறிவிப்பை செவியுற்றால் (என்ன செய்வது?)

2350. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் (நோன்பு வைக்க ஸஹர் உணவு உண்ணும் போது) தமது கையில் உணவுத் தட்டு வைத்திருக்கும் நிலையில் தொழுகை அறிவிப்பை செவியுற்றால் அதிலிருந்து தமது தேவைக்கேற்ப உண்டு முடிக்கும்வரை பாத்திரத்தை கீழே வைக்க வேண்டாம்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

 


«إِذَا سَمِعَ أَحَدُكُمُ النِّدَاءَ وَالْإِنَاءُ عَلَى يَدِهِ، فَلَا يَضَعْهُ حَتَّى يَقْضِيَ حَاجَتَهُ مِنْهُ»


Abu-Dawood-1114

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்: 236

(கூட்டுத் தொழுகையில் இருக்கும் போது) உளூ முறிந்தவர், (தொழுகையிலிருந்து வெளியேற) இமாமிடம் எவ்வாறு அனுமதி பெறவேண்டும்?

1114. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(இமாமுடன் தொழும் போது) உங்களில் ஒருவருக்கு உளூ முறிந்து விட்டால் அவர், மூக்கைப் பிடித்துக் கொண்டு தொழுகையிலிருந்து வெளியேறி விடட்டும்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

அபூதாவூத் இமாம் கூறுகிறார்:

இந்த செய்தியை ஹிஷாம் பின் உர்வா அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஹம்மாத் பின் ஸலமா அவர்களும், அபூஉஸாமா அவர்களும் உர்வாவிற்கும், நபி (ஸல்) அவர்களுக்கும் இடையில் ஆயிஷா (ரலி) அவர்களைக் கூறவில்லை. (முர்ஸலாக அறிவித்துள்ளனர்)


«إِذَا أَحْدَثَ أَحَدُكُمْ فِي صَلَاتِهِ فَلْيَأْخُذْ بِأَنْفِهِ، ثُمَّ لِيَنْصَرِفْ»

قَالَ أَبُو دَاوُدَ: رَوَاهُ حَمَّادُ بْنُ سَلَمَةَ، وَأَبُو أُسَامَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، لَمْ يَذْكُرَا عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا


Musnad-Ahmad-3949

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3949. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரு மனிதர் குறித்து மதிப்பும், உயர்வும் மிக்க நம்முடைய இறைவன் வியப்படைகிறான். (அதில் முதலாமவர்:) தனது படுக்கை, போர்வை, மனைவி, மக்களின் அரவணைப்பு அத்தனையையும் உதறிவிட்டு அதிகாலையில் தொழுகைக்காக எழும் மனிதர். மேலும் இவரைப் பற்றி அவன், தனது வானவர்களிடம் கூறுகிறான்: “என்னுடைய வானவர்களே! எனது இந்த அடியானைப் பாருங்கள் ! படுக்கை, போர்வை, மனைவி, மக்கள் அத்தனையையும் உதறி விட்டு அதிகாலையில் எழுந்து விட்டான். (எதற்காக?) என்னிடமிருந்து கிடைக்கும் அருள் மீது ஆசை வைத்து; என்னிடமிருந்து கிடைக்கும் தண்டனையைப் பயந்து (இவ்வாறு நடந்துக் கொள்கிறான்)

(அதில் இரண்டாவது மனிதர்:) அல்லாஹ்வின் பாதையில் போரிடும் மனிதர். தன் அணியினர் தோல்வியடையும் சமயம், தான் வெருண்டோடுவது பற்றியும் அதனால் தனக்கு உண்டாகும் பாதகத்தையும், (வெருண்டு ஓடாமல்) முன்னேறி செல்வதால் தனக்கு கிடைக்கும் நன்மை பற்றியும் அறிந்து முன்னேறி சென்று சண்டையில் இரத்தம் ஓட்டப்பட்டு கொல்லப்பட்டவர். மேலும் இவரைப் பற்றி அவன், தனது வானவர்களிடம் கூறுகிறான்: “என்னுடைய வானவர்களே! எனது இந்த அடியானைப் பாருங்கள் ! (போரில் வெருண்டோடாமல்) முன்னேறி செல்கிறான். (எதற்காக?) என்னிடமிருந்து கிடைக்கும் அருள் மீது ஆசை வைத்து; என்னிடமிருந்து கிடைக்கும்

عَجِبَ رَبُّنَا عَزَّ وَجَلَّ مِنْ رَجُلَيْنِ: رَجُلٍ ثَارَ عَنْ وِطَائِهِ وَلِحَافِهِ، مِنْ بَيْنِ أَهْلِهِ وَحَيِّهِ إِلَى صَلَاتِهِ، فَيَقُولُ رَبُّنَا: أَيَا مَلَائِكَتِي، انْظُرُوا إِلَى عَبْدِي، ثَارَ مِنْ فِرَاشِهِ وَوِطَائِهِ، وَمِنْ بَيْنِ حَيِّهِ وَأَهْلِهِ إِلَى صَلَاتِهِ، رَغْبَةً فِيمَا عِنْدِي، وَشَفَقَةً مِمَّا عِنْدِي، وَرَجُلٍ غَزَا فِي سَبِيلِ اللَّهِ عَزَّ وَجَلَّ، فَانْهَزَمُوا، فَعَلِمَ مَا عَلَيْهِ مِنَ الْفِرَارِ، وَمَا لَهُ فِي الرُّجُوعِ، فَرَجَعَ حَتَّى أُهْرِيقَ دَمُهُ، رَغْبَةً فِيمَا عِنْدِي، وَشَفَقَةً مِمَّا عِنْدِي، فَيَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ لِمَلَائِكَتِهِ: انْظُرُوا إِلَى عَبْدِي، رَجَعَ رَغْبَةً فِيمَا عِنْدِي، وَرَهْبَةً مِمَّا عِنْدِي، حَتَّى أُهَرِيقَ دَمُهُ


Almujam-Alkabir-8967

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

8967. வலீமா விருந்தை முதல்நாள் கொடுப்பது கடமையாகும்; இரண்டாவது நாள் கொடுப்பது சிறப்பானதாகும் (அல்லது-உபரியானதாகும்); மூன்றாவது நாள் கொடுப்பது முகஸ்துதியும், விளம்பரமும் ஆகும்.

யார் விளம்பரத்திற்காக செய்கிறாரோ (அவர் உள்நோக்கம்) பற்றி அல்லாஹ் (மறுமை நாளில்) விளம்பரப்படுத்துவான் என்று இப்னு மஸ்வூது (ரலி) கூறினார்.

அறிவிப்பவர்: அபூஅப்துர்ரஹ்மான்-அப்துல்லாஹ் பின் ஹபீப் (ரஹ்)


«الْوَلِيمَةُ أَوَّلُ يَوْمٍ حَقٌّ، وَالثَّانِي فَضْلٌ، وَالثَّالِثُ رِيَاءٌ وَسُمْعَةٌ، وَمَنْ يُسَمِّعْ يُسَمِّعِ اللهُ بِهِ»


Next Page » « Previous Page