பாடம்:
குர்ஆனை நிறுத்தி நிதானமாக ஓதுவது விரும்பத்தக்கது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
குர்ஆனுடன் (அதை உணர்ந்து) வாழ்ந்தவரிடம் (அவர் சொர்க்கத்திற்குச் செல்லும்போது) “ஓதுக; (சொர்க்கப் படிநிலைகளில்) உயருக; உலகில் நீர் நிறுத்தி நிதானமாக ஓதிக்கொண்டிருந்ததைப் போன்று (இங்கும்) ஓதுக! ஏனெனில், நீர் ஓதி முடிக்கும் இறுதி வசனத்திற்கு அருகில்தான் நீர் தங்கப் போகுமிடம் அமைந்துள்ளது” என்று கூறப்படும்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
(அபூதாவூத்: 1464)بَابُ اسْتِحْبَابِ التَّرْتِيلِ فِي الْقِرَاءَةِ
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، حَدَّثَنِي عَاصِمُ بْنُ بَهْدَلَةَ، عَنْ زِرٍّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
يُقَالُ لِصَاحِبِ الْقُرْآنِ: اقْرَأْ، وَارْتَقِ، وَرَتِّلْ كَمَا كُنْتَ تُرَتِّلُ فِي الدُّنْيَا، فَإِنَّ مَنْزِلَكَ عِنْدَ آخِرِ آيَةٍ تَقْرَؤُهَا
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-1464.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-20386-ஆஸிம் பின் பஹ்தலா-ஆஸிம் பின் அபுன் நஜூத் அவர்களை, புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
இருவரும் வேறு அறிவிப்பாளருடன் இணைத்து, துணை ஆதாரமாகக் கூறியுள்ளனர். இவரின் செய்திகளை தனியாக பதிவு செய்யவில்லை.
(பார்க்க: புகாரி-4976 , 4977 , முஸ்லிம்-2175)
- இவர் குர்ஆனை ஓதும் முறைகளையும், குறிப்பிட்ட இடங்களில் எந்த எழுத்துக்களை வைத்து ஓத வேண்டும் என்பதையும் நன்கு அறிந்தவர் என அபூஇஸ்ஹாக் அஸ்ஸபீஈ, இமாம் அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இஜ்லீ,பிறப்பு ஹிஜ்ரி 181
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 80
ஹாகிம்,பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)போன்றோர் கூறியுள்ளனர். (இவரிடமிருந்து ஹஃப்ஸ் அவர்கள் அறிவிக்கும் ஓதும்முறைப்படியே நாம் குர்ஆனை ஓதிவருகிறோம்.) - இப்னு ஸஃத்,பிறப்பு ஹிஜ்ரி 168
இறப்பு ஹிஜ்ரி 230
வயது: 62
இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர். அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இஜ்லீ,பிறப்பு ஹிஜ்ரி 181
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 80
அபூஸுர்ஆ போன்றோர் இவரை பலமானவர் என்று கூறியுள்ளனர். இவர் பலமானவர் என்றாலும் இவரின் செய்தியில் குளறுபடி உள்ளது என யஃகூப் பின் ஸுஃப்யான் பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 83
அவர்கள் கூறியுள்ளார். - நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
அவர்கள், இவர் சுமாரானவர் என்று கூறியுள்ளார். - ஷுஃ-பா, இஸ்மாயீல் பின் உலய்யா, அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
பஸ்ஸார், உகைலீ,பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 322
தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
போன்றோர் இவர் நினைவாற்றலில் குறையுள்ளவர் என்று கூறியுள்ளனர். - ஹம்மாத் பின் ஸலமா அவர்கள், இவர் கடைசி வருடத்தில் மூளை குழம்பிவிட்டார் என்று கூறியுள்ளார். இப்னு ஸஃத் பிறப்பு ஹிஜ்ரி 168
இறப்பு ஹிஜ்ரி 230
வயது: 62
அவர்கள், இவர் கடைசிகாலம் வரை பலமானவராக இருந்தார் என்று கூறியுள்ளார்.
(நூல்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-1887, தஹ்தீபுல் கமால்-3002, இக்மாலு தஹ்தீபில் கமால்-2619, தஹ்தீபுத் தஹ்தீப்-2/250, அத்தபகாத்…)
- இவரைப் பற்றி தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்கள், கிராஅத்தில் இவரை ஆதாரமாக ஏற்கப்படும். ஹதீஸ் விசயத்தில் இவர் ஹஸன் தரம் என்று கூறியுள்ளார்.
(நூல்: தாரீகுல் இஸ்லாம்-3/435)
- இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள், இவரைப் பற்றி ஸதூகுன் லஹூ அவ்ஹாம்-இவர் நம்பகமானவர் என்றாலும் சில இடங்களில் தவறாக அறிவித்துள்ளார் என்று 12 வகையினரில் 5வது வகையினரில் கூறியுள்ளார்.
(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-3071)
இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்களின் இந்த தீர்ப்பின் படி இவர் அறிவிக்கும் செய்திகளைப் போன்று மற்றவர்கள் அறிவித்திருந்தால் அது ஏற்கப்படும். இவர் தனித்து அறிவித்திருந்தால் அது பலவீனமாகும்.
ஷுஐப் அர்னாவூத் அவர்கள், இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்களின் இந்த விமர்சனம் சரியானதல்ல. இவரைப் பற்றி பல அறிஞர்கள் பலமானவர்கள் என்று கூறியுள்ளனர். இவரிடம் ஹதீஸை அறிவிப்பதில் சிறிய தவறே ஏற்பட்டுள்ளது. எனவே இவர் ஹஸன் தரம் என்று கூறியுள்ளார்.
(நூல்: தஹ்ரீரு தக்ரீபித் தஹ்தீப்-3054)
அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள் இவரின் செய்திகளை ஹஸன் தரம் என்றே முடிவு செய்கிறார்.
- தற்கால ஹதீஸ்கலை அறிஞர் அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான் ஸஃத் அவர்களின் கருத்து:
இவரின் ஹதீஸ்களை மூன்று வகைகளாக பிரிக்கலாம்.
1 . இவரின் ஆசிரியர்களில் இவருக்கு மிக நெருக்கமான ஆசிரியர்கள் வழியாக இவர் அறிவிக்கும் செய்திகள்.
அந்த அறிவிப்பாளர்தொடரில் வேறு விமர்சனம் இல்லாதபோது அவை பலமானவை; ஹஸன் தரத்தில் அமைந்தவை-சரியானவை. (உதாரணமாக: ஸிர்ரு பின் ஹுபைஷ், அபூவாயில் போன்ற ஆசிரியர்கள்).
2 . மற்றவர்கள் வழியாக அறிவிக்கும் செய்திகளில் வேறு பலமான அறிவிப்பாளர்களுக்கு மாற்றமில்லாமல் வரும் செய்தியாக இருந்து இவரிடம் தவறு ஏற்படவில்லையென்றால் அதுவும் ஹஸன் தரத்தில் உள்ள செய்தி-சரியானவை.
3 . இவர் அபூஸாலிஹ்-தக்வான்-ஸம்மான் வழியாக அறிவிக்கும் செய்திகள்.
இவைகளில் தான் அதிகம் தவறுகள் உள்ளன; அவைகள் ஆய்வுக்குரிய செய்திகள். இந்தக் கருத்தை ஆரம்பகால ஹதீஸ்கலை அறிஞர்கள் கூறவில்லையென்றாலும் உண்மை அது தான்.
(நூல்: அல்இமாம் ஆஸிம் இன்தல் முஹத்திஸீன், பக்கம்: 37)
- என்றாலும் ஹம்மாத் பின் ஸலமா அவர்கள், இவர் காலையில் ஸிர்ரு வழியாகவும், மாலையில் அபூவாயில் வழியாகவும் அறிவிப்பார் என்று விமர்சித்திருப்பதையும், இவர் ஸிர்ருவிடமிருந்தும், அபூவாயிலிடமிருந்தும் மாறி மாறி அறிவிப்பார் என்ற இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 80
இமாம் அவர்களின் கூற்றையும் இப்னு ரஜப் அவர்கள் பதிவு செய்து இவர் ஸிர்ரு, அபூவாயிலிடமிருந்து அறிவிக்கும் செய்திகள் குளறுபடியானவை என்று கூறியுள்ளார்.
(நூல்: ஷரஹு இலலித் திர்மிதீ-2/788).
- ஹம்மாத் பின் ஸலமா அவர்களின் இந்த விமர்சனம் குறை அல்ல. காரணம் ஆஸிம் அவர்கள் ஸிர்ரு, அபூவாயில் இருவரிடமும் அடிக்கடி ஹதீஸை கேட்பவராக இருந்துள்ளார். அதனால் இவர் இந்த இருவரிடமிருந்து அதிகமான ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
இவரின் ஹதீஸ்களை ஆய்வு செய்த சில அறிஞர்கள் இவரிடம் ஏற்பட்ட தவறுகளை மூன்று வகையாக பிரித்துள்ளனர்.
1 . ஸிர்ரு, அபூவாயில் வழியாக மாறி மாறி அறிவித்திருப்பது.
2 . பலவீனமானவர்கள், அறியப்படாதவர்கள் வழியாக ஹதீஸ்களை அறிவித்திருப்பது.
3 . அறிவிப்பாளர்தொடர் இடைமுறிந்த (முன்கதிஃ, முர்ஸல் கஃபீ) செய்திகளை அறிவித்திருப்பது.
மூன்று தவறுகளில் முதல் தவறு என்பது அது தவறல்ல. மற்ற இரண்டு தவறுகள் உள்ள செய்திகள் பலவீனமானவைகளாகும்.
- இதன் அறிவிப்பாளர்தொடர் ஹஸன் தரம்.
2 . இந்தக் கருத்தில் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- ஆஸிம் பின் பஹ்தலா —> ஸிர்ரு பின் ஹுபைஷ் —> அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, அஹ்மத்-6799 , அபூதாவூத்-1464 , திர்மிதீ-2914 , குப்ரா நஸாயீ-, இப்னு ஹிப்பான்-, அல்முஃஜமுல் கபீர்-, ஹாகிம்-, குப்ரா பைஹகீ-,
மேலும் பார்க்க: அஹ்மத்-10087 .
சமீப விமர்சனங்கள்