குர்ஆனுடன் (அதை உணர்ந்து) வாழ்ந்தவரிடம் (அவர் சொர்க்கத்திற்குச் செல்லும்போது) “ஓதுக; (சொர்க்கப் படிநிலைகளில்) உயருக; ஏனெனில், நீர் ஓதி முடிக்கும் இறுதி வசனத்திற்கு அருகில்தான் நீர் தங்கப் போகுமிடம் அமைந்துள்ளது” என்று கூறப்படும் என்று அபூஹுரைரா (ரலி) அவர்களோ அல்லது அபூஸயீத் (ரலி) அவர்களோ கூறினார்கள்.
அறிவிப்பவர்: அல்அஃமஷ் (ரஹ்)
(முஸ்னது அஹ்மத்: 10087)حَدَّثَنَا وَكِيعٌ، قَالَ: حَدَّثَنَا الْأَعْمَشُ، عَنِ أَبِي صَالِحٍ، عَنِ أَبِي هُرَيْرَةَ، أَوْ عَنِ أَبِي سَعِيدٍ – شَكَّ الْأَعْمَشُ – قَالَ:
يُقَالُ لِصَاحِبِ الْقُرْآنِ يَوْمَ الْقِيَامَةِ: اقْرَهْ وَارْقَهْ، فَإِنَّ مَنْزِلَتَكَ عِنْدَ آخِرِ آيَةٍ تَقْرَؤُهَا
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-10087.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-.
1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) அல்லது அபூஸயீத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- அபூஸாலிஹ்-ஸம்மான் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) அல்லது அபூஸயீத் (ரலி)
பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-30055 , அஹ்மத்-10087 ,
- ஷைபான் —> ஃபிராஸ் —> அதிய்யா —> அபூஸயீத் (ரலி)
பார்க்க: அஹ்மத்-11360 , இப்னு மாஜா-3780 , முஸ்னத் அபீ யஃலா-1094 , 1338 ,
2 . அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அபூதாவூத்-1464 .
3 . இப்ராஹீம் அத்தைமீ (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: ஸுனன் ஸயீத்-11 ,
இதன் அறிவிப்பாளர்தொடர் பலவீனமானது…
4 . அபூஸாலிஹ்-ஸம்மான் (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: ஸுனன் ஸயீத்-13 ,
இதன் அறிவிப்பாளர்தொடர் பலவீனமானது…
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: திர்மிதீ-2915 ,
சமீப விமர்சனங்கள்