தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

raavi-14239-ஹுமைத் பின் ஸியாத்

A- A+

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

ஹுமைத் பின் ஸியாத்-ஹுமைத் பின் ஸக்ர்-ஹுமைத் பின் அபுல்முகாரிக்

இறப்பு: 189

தரம்:


இயற்பெயர்: ஹுமைத்

தந்தை பெயர்: ஸியாத்

பட்டப் பெயர், குறிப்புப் பெயர்: அபூஸக்ர், அபூமவ்தூத்

ஊர் பெயர்: எகிப்த், மதீனா

பிறப்பு: ஹிஜ்ரி-,

இறப்பு: ஹிஜ்ரி-189.

கால கட்டம்: 8.


பெயர் விளக்கம்

ஹுமைத் பின் ஸியாத், ஹுமைத் பின் ஸக்ர் என்ற பெயரில் கூறப்படுவோர் இருவரா? ஒருவரா?

  • அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
    இறப்பு ஹிஜ்ரி 365
    வயது: 88
    ஆகியோரின் நூல்களைப் பார்க்கும் போது ஹுமைத் பின் ஸியாத் என்பவரையும், ஹுமைத் பின் ஸக்ர் என்பவரையும் இவர்கள் இருவர் என முடிவு செய்துள்ளனர் எனத் தெரிகிறது.
  • புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    அவர்கள், ஹுமைத் பின் ஸியாத் பற்றிய குறிப்பில் இவர் பெயரை அறிவிப்பாளர்களில் சிலர் ஹுமைத் பின் ஸக்ர் என்று கூறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
  • இவ்வாறே இப்னு அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 240
    இறப்பு ஹிஜ்ரி 327
    வயது: 87
    அப்துல்லாஹ் பின் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    ஆகியோர் இந்த இரண்டு பெயர்கள் உள்ளவரை ஒருவராக குறிப்பிட்டுள்ளனர்.
  • அப்துல்லாஹ் பின் அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    ஆகியோர் இவரின் பெயரை ஹாதிம் பின் இஸ்மாயீல் தான் ஹுமைத் பின் ஸக்ர் என்று தவறாக கூறியதாக குறிப்பிட்டுள்ளனர்.

அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம், நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
இமாம், இப்னு அதீ

الضعفاء الكبير للعقيلي (1/ 270):
333 -‌‌ حُمَيْدُ بْنُ صَخْرٍ مَدِينِيٌّ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عِيسَى قَالَ: حَدَّثَنَا حَمْدَانُ بْنُ عَلِيٍّ الْوَرَّاقُ قَالَ: ‌سُئِلَ ‌أَحْمَدُ ‌بْنُ ‌حَنْبَلٍ ‌عَنْ ‌حُمَيْدِ ‌بْنِ ‌صَخْرٍ فَقَالَ: ضَعِيفٌ

ஹுமைத் பின் ஸக்ர் என்பவர் பற்றி அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம் அவர்களிடம் கேட்கப்பட்டபோது அதற்கவர், அவர் பலவீனமானவர் என்று கூறினார்.

(நூல்: அள்ளுஅஃபாஉல் கபீர்-உகைலீ-1/270)


الضعفاء والمتروكون للنسائي (ص: 33)
143 – حميد بن صَخْر يروي عَنهُ حَاتِم بن إِسْمَاعِيل لَيْسَ بِالْقَوِيّ

ஹாதிம் பின் இஸ்மாயீல் யாரிடமிருந்து அறிவிப்பாரோ அந்த ஹுமைத் பின் ஸக்ர் பலமானவர் அல்ல என்று நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
இமாம் கூறியுள்ளார்.

(நூல்: அள்ளுஅஃபாஉ வல்மத்ரூகூன்-1/33)


الكامل في ضعفاء الرجال (3/ 79):
‌‌439- حميد بن صخر.
سمعتُ ابن حماد يقول حميد بن صخر ‌يروي ‌عنه ‌حاتم ‌بن ‌إسماعيل ‌ضعيف ‌قاله ‌أحمد ‌بن ‌شُعَيب ‌النسائي.

ஹாதிம் பின் இஸ்மாயீல் யாரிடமிருந்து அறிவிப்பாரோ அந்த ஹுமைத் பின் ஸக்ர் பலவீனமானவர் என்று அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
ஆகியோர் கூறியதாக இப்னு ஹம்மாத் அறிவித்துள்ள தகவலை இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
குறிப்பிட்டுள்ளார்.

(நூல்: அல்காமிலு ஃபீ ளுஅஃபாஇர் ரிஜால்-3/79)


الكامل في ضعفاء الرجال (3/ 79-80):
‌‌439- حميد بن صخر.
سمعتُ ابن حماد يقول حميد بن صخر يروي عنه حاتم بن إسماعيل ضعيف قاله أحمد بن شُعَيب النسائي …
قال الشيخ: ولحاتم بْنُ إِسْمَاعِيلَ عَنْ حُمَيْدِ بْنِ صخر أحاديث غير ما ذكرته وفي بعض هذه الأحاديث عن المقبري ويزيد الرقاشي ما، لَا يُتَابَعُ عَليه.

ஹுமைத் பின் ஸக்ர் என்பவர் பற்றிய குறிப்பில் இவரிடமிருந்து ஹாதிம் பின் இஸ்மாயீல் அறிவித்துள்ளார். இவரை அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
ஆகியோர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர். இவர் ஸயீத் அல்மக்புரீ, யஸீத் அர்ரகாஷீ ஆகியோரிடமிருந்து சில செய்திகளை அறிவித்துள்ளார். அவற்றில் சிலவை இவர் மட்டுமே தனித்து அறிவிக்கும் செய்திகள் என்று இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
அவர்கள் கூறியுள்ளார்.

(நூல்: அல்காமிலு ஃபீ ளுஅஃபாஇர் ரிஜால்-3/79,80)


الكامل في ضعفاء الرجال (3/ 69-70):
… قال ابنُ عَدِي، وأَبُو صخر هذا حميد بن زياد له أحاديث صالحة روى عنه بن لَهِيعَة نسخة.
حَدَّثَنَاهُ الحسن بن مُحَمد المدني، عَن يَحْيى بن بُكَير عنه وروى عنه بن وهب بنسخة أطول من نسخة بن لَهِيعَة.
حَدَّثَنَا إبراهيم بن عَمْرو بن ثور الزوقي عن أحمد بن صالح عنه وروى عنه حيوة أحاديث، وَهو عندي صالح الحديث، وإِنَّما أنكرت عليه هذين الحديثين المؤمن مؤالف وفي القدرية اللذين ذكرتهما وسائر حديثه أرجو ان يكون مستقيما.

இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
அவர்கள், அபூஸக்ர்-ஹுமைத் பின் ஸியாத் என்பவர் பற்றிய குறிப்பில் இவரிடமிருந்து இப்னு லஹீஆ, இப்னு வஹ்ப் ஆகியோர் அதிகம் அறிவித்துள்ளனர். மேலும் இவரிடமிருந்து ஹைவா பின் ஷுரைஹ் அவர்களும் அறிவித்துள்ளார்.

இவர் என்னுடைய பார்வையில் சுமாரானவர் ஆவார். இவர் அறிவித்துள்ள கத்ரிய்யா கொள்கையுடையோர் பற்றி அறிவிக்கும் செய்தியும், ஒரு இறைநம்பிக்கையாளர் பிறருடன் பழகக்கூடியவராக இருக்கவேண்டும் என்ற செய்தியும் மறுக்கப்படுகிறது. மற்ற செய்திகள் சரியாக இருக்கும் என்று நான் ஆதரவு வைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

(நூல்: அல்காமிலு ஃபீ ளுஅஃபாஇர் ரிஜால்-3/69,70)


இருபெயர்களும் ஒருவரையே குறிப்பிடுகிறது என்ற கருத்தில் உள்ளவர்கள்:

புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம்

التاريخ الكبير للبخاري (2/ 350 ت المعلمي اليماني):
‌‌2712 – حميد بْن زياد أَبُو صخر الخراط المديني مولى بني
هاشم سَمِعَ نافعا ومُحَمَّد بْن كعب وعمار الدهني وابن قسيط وَقَالَ بعضهم: حماد سَمِعَ منه ابْن وهب وحيوة بْن شريح وَقَالَ بعضهم: حميد بن صخر.

ஹுமைத் பின் ஸியாத்-அபுஸ்ஸக்ர்-அல்கர்ராத் என்பவர் மதீனாவைச் சேர்ந்தவர். மேலும் இவர் ஹாஷிம் குலத்தாரின் அடிமையாவார். இவர் நாஃபிஃ, முஹம்மத் பின் கஅப், அம்மார் அத்துஹ்னீ, இப்னு குஸைத் (யஸீத் பின் அப்துல்லாஹ்) ஆகியோரிடம் ஹதீஸ்களை கேட்டுள்ளார். (இவரின் பெயரை சிலர் ஹம்மாத் பின் ஸியாத் என்று கூறியுள்ளனர்)

இவரிடமிருந்து இப்னு வஹ்ப், ஹைய்வா பின் ஷுரைஹ் ஆகியோர் ஹதீஸ்களை கேட்டுள்ளனர். சிலர் இவரின் பெயரை ஹுமைத் பின் ஸக்ர் (என்றும்)  கூறியுள்ளனர்.

(நூல்: தாரீகுல் கபீர்-2712)


அப்துல்லாஹ் பின் அஹ்மத்

العلل ومعرفة الرجال لأحمد رواية ابنه عبد الله (3/ 320):
قَالَ أَبِي أَبُو صَخْرٍ هَذَا أَظُنُّهُ حُمَيْدَ بْنَ زِيَادٍ الْمَدِينِيَّ رَوَى عَنْهُ حَاتِمٌ وَابْنُ وَهْبٍ قَالَ أَبُو عبد الرَّحْمَن ‌حَاتِم ‌يخطىء ‌فِي ‌اسْمِهِ يَقُولُ حُمَيْدُ بْنُ صَخْرٍ وَإِنَّمَا هُوَ حُمَيْدُ بْنُ زِيَادٍ أَبُو صَخْرٍ

மேலும் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம் அவர்கள் அபூஸக்ர் என்பவர் ஹுமைத் பின் ஸியாத் என்று நான் கருதுகிறேன். இவரிடமிருந்து ஹாதிம் பின் இஸ்மாயீல், அப்துல்லாஹ் பின் வஹ்ப் ஆகியோர் அறிவித்துள்ளனர் என்று கூறியதாக அப்துல்லாஹ் பின் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
கூறியுள்ளார். ஹாதிம் பின் இஸ்மாயீல் தான் இவரின் பெயரை தவறாக ஹுமைத் பின் ஸக்ர் என்று கூறியுள்ளார் என அப்துல்லாஹ் பின் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

(நூல்: அல்இலல் வ மஃரிஃபதிர் ரிஜால்-3/320)


இப்னு ஹிப்பான்

الثقات لابن حبان (6/ 188 – 189):
حميد بن زِيَاد أَبُو صَخْر الْخَرَّاط من أهل الْمَدِينَة مولى بنى هَاشم يروي عَن نَافِع وَمُحَمّد بن كَعْب روى عَنهُ حَيْوَة بن شُرَيْح وَهُوَ الَّذِي يروي عَنهُ حَاتِم بن إِسْمَاعِيل وَيَقُول حميد بن صَخْر وَإِنَّمَا هُوَ حميد بن زِيَاد أَبُو صَخْر لَا حميد بن صَخْر

ஹுமைத் பின் ஸியாத்-அபுஸ்ஸக்ர்-அல்கர்ராத் என்பவர் மதீனாவைச் சேர்ந்தவர். மேலும் இவர் ஹாஷிம் குலத்தாரின் அடிமையாவார். இவர் நாஃபிஃ, முஹம்மத் பின் கஅப் ஆகியோரிடம் ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.

இவரிடமிருந்து ஹைய்வா பின் ஷுரைஹ் ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.

ஹுமைத் பின் ஸியாதிடமிருந்து அறிவிக்கும் ஹாதிம் பின் இஸ்மாயீல் இவரது பெயரை ஹுமைத் பின் ஸக்ர் என்று கூறுகிறார். ஆனால் இவர் ஹுமைத் பின் ஸியாத் தான். ஹுமைத் பின் ஸக்ர் அல்ல என்று இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
கூறியுள்ளார்.

(நூல்: அஸ்ஸிகாத்-6/188, 189)


சிலர் இவரை ஹம்மாத் பின் ஸியாத் என்றும் கூறியுள்ளனர். இதுவும் தவறாகும்.

நவவீ பிறப்பு ஹிஜ்ரி 631
இறப்பு ஹிஜ்ரி 676
வயது: 45
இமாம்

شرح النووي على مسلم (3/ 117):
قوله (حدثنا بن وَهْبٍ عَنْ أَبِي صَخْرٍ) هُوَ أَبُو صَخْرٍ مِنْ غَيْرِ هَاءٍ فِي آخِرِهِ وَاسْمُهُ حُمَيْدُ بْنُ زِيَادٍ وَقِيلَ حُمَيْدُ بْنُ صَخْرٍ ‌وَقِيلَ ‌حَمَّادُ ‌بْنُ ‌زِيَادٍ وَيُقَالُ لَهُ أَبُو الصَّخْرِ الْخَرَّاطُ صَاحِبُ الْعَبَاءِ الْمَدَنِيُّ سَكَنَ مِصْرَ

அபூஸக்ர் என்பவரின் இயற்பெயர் ஹுமைத் பின் ஸியாத் ஆகும். சிலர் மூலம் இவரை ஹுமைத் பின் ஸக்ர் என்றும் ஹம்மாத் பின் ஸியாத் என்றும் கூறப்பட்டுள்ளது. (இது தவறாகும்). மேலும் இவருக்கு அபுஸ்ஸக்ர், கர்ராத், நீளஆடை உடையவர் என்றும் பட்டப்பெயர் கூறப்படுகிறது. இவர் மதீனாவைச் சேர்ந்தவர். இறுதியில் எகிப்தில் குடிபெயர்ந்தார்.

(நூல்: ஷரஹ்முஸ்_லிம்-3/117)


இப்னு அப்துல்ஹாதீ

الصارم المنكي في الرد على السبكي (ص190):
… وقال البخاري في تاريخه: حميد بن زياد أبو صخر الخراط المديني مولى بني هاشم سمع نافع، ومحمد بن كعب وعماراً الدهني، وأبن قسيط،وقال: بعضهم حماد سمع منه ابن وهب وحيوة بن شريح، وقال بعضهم: حميد بن صخر، وقال أبو مسعود الدمشقي: حميد بن صخر أبو مودود الخراط، ويقال: إنهما إثنان، والصحيح أنه واحد وهو حميد بن زياد أبو صخر

இப்னு அப்துல்ஹாதீ அவர்களும், புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாமின் குறிப்பை மேற்கோள் காட்டி இருபெயர்களும் ஒருவரையே குறிப்பிடுகிறது என்று கூறியுள்ளார்.

(நூல்: அஸ்ஸாரிம்-1/190)


இவரை சிலர் பாராட்டியுள்ளனர். சிலர் விமர்சித்துள்ளனர்.

இப்னு மயீன்

تاريخ ابن معين – رواية الدارمي (ص95):
260 – وَسَأَلته عَن ‌حميد ‌بن ‌زِيَاد الْخَرَّاط فَقَالَ لَيْسَ بِهِ بَأْس


الجرح والتعديل لابن أبي حاتم (3/ 222)
حدثنا عبد الرحمن قال ذكره أبي عن إسحاق بن منصور [عن يحيى بن معين – 3] أنه قال: أبو صخر [حميد بن – 3] زياد ضعيف.


الجرح والتعديل لابن أبي حاتم (3/ 222)
حدثنا عبد الرحمن انا يعقوب ابن إسحاق [الهروي – 4] فيما كتب إلي قال نا عثمان بن سعيد [الدارمي – 4] قال سألت يحيى بن معين عن حميد الخراط فقال: ثقة ليس به بأس.


تهذيب الكمال في أسماء الرجال (7/ 368):
وَقَال أَحْمَد بْن سعد بْن أَبي مريم (3) ، عَن يحيى بن مَعِين: أَبُو صخر حميد بن زياد الخراط ضعيف الحديث.


உஸ்மான் பின் ஸயீத் அத்தாரிமீ அவர்கள், இவரை இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
அவர்கள் பலமானவர் என்று கூறியதாக அறிவித்துள்ளார்.

இஸ்ஹாக் பின் மன்ஸூர், இப்னு அபூமர்யம் ஆகியோர் இவரை பலவீனமானவர் என்று இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
அவர்கள் கூறியதாக அறிவித்துள்ளனர்.

(நூல்கள்: தாரீகு இப்னு மயீன்-1/95, அல்ஜர்ஹு வத்தஃதீல்-3/222, தஹ்தீபுல் கமால்-7/368, தஹ்தீபுத் தஹ்தீப்-1/495)


அஹ்மத்

 


இஜ்லீ

அபூஹாதிம்

நஸாயீ

உகைலீ

இப்னு ஹிப்பான்


 


தாரகுத்னீ

இப்னு ஷாஹீன்

தஹபீ

இப்னு ஹஜர்


இவர் பற்றி நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
இமாம் … பலவீனமானவர் என்று கூறியுள்ளார். மற்ற பெரும்பாலான அறிஞர்களில் சிலர் இவரை பலமானவர் என்றும், சிலர் சுமாரானவர் என்றும் கூறியுள்ளனர். இவர் இடம்பெற்ற சில செய்திகளை முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
இமாம் பதிவு செய்துள்ளார்.

சில ஹதீஸ்கள் விசயத்தில் இவரிடம் ஏற்பட்ட தவறினால் இவர் விமர்சிக்கப்பட்டுள்ளார் என்றும், இவர் அறிவிக்கும் … செய்தியை நான் மறுக்கிறேன் என்றும் இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
அவர்கள் கூறியுள்ளார்.

இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள், இவர் நம்பகமானவர்; சிறிது தவறிழைப்பவர் என்று கூறியுள்ளார்.

(நூல்கள்: தஹ்தீபுத் தஹ்தீப்-1/495, தக்ரீபுத் தஹ்தீப்-1/274)


இவரைப் பற்றிய ஆய்வில் இவர் தவறாக அறிவித்துள்ள செய்திகள் பலவீனமானவை. மேலும் இவர் தனித்து அறிவிக்கும் செய்திகள் ஆய்வுக்குரியவையாகும்.


 



கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.