ஷரீக் பின் அப்துல்லாஹ் பின் ஹாரிஸ் – شريك بن عبد الله بن الحارث
ஹி-95 – 178 சுமார் 83 வயது.
தரம்: …
இயற்பெயர்: ஷரீக் (அல்காழீ)
தந்தை பெயர்: அப்துல்லாஹ் பின் ஹாரிஸ்
குறிப்புப் பெயர்: அபூஅப்தில்லாஹ், வாஸித் நகர நீதிபதி
ஊர் பெயர்: புகாரா குராஸான்,மதீனாவிலிருந்து 2839 km தொலைவில் உள்ள ஊர். (நைஸாபூரிலிருந்து 1 km) வாஸித், மக்கா, பஸரா,மதீனாவிலிருந்து 1379.1 km தொலைவில் உள்ள ஊர் கூஃபா
பிறப்பு: ஹிஜ்ரீ-95 அல்லது 96
இறப்பு: ஹிஜ்ரீ-177 அல்லது 178
கால கட்டம்: 8.
الثقات لابن حبان (6/ 444):
شريك بن عبد الله بن الْحَارِث بن أَوْس بن الْحَارِث النَّخعِيّ كنيته أَبُو عبد الله كَانَ مولده بخراسان قَالَ مَنْصُور بن أبي مُزَاحم سَمِعت شَرِيكا يَقُول ولدت ببخارى مقتل قُتَيْبَة بن مُسلم سنة خمس وَتِسْعين ويروي شريك عَن أبي إِسْحَاق وَسَلَمَة بن كهيل روى عَنهُ بن الْمُبَارك وَأهل الْعرَاق وَولى الْقَضَاء بواسط سنة خمسين وَمِائَة ثمَّ ولى الْكُوفَة بعد ذَلِك وَمَات بِالْكُوفَةِ سنة سبع أَو ثَمَان وَسبعين وَمِائَة وَكَانَ فِي آخر أمره يخطئ فِيمَا يروي تغير عَلَيْهِ حفظه فسماع الْمُتَقَدِّمين عَنهُ الَّذين سمعُوا مِنْهُ بواسط لَيْسَ فِيهِ تَخْلِيط مثل يزِيد بن هَارُون وَإِسْحَاق الْأَزْرَق وَسَمَاع الْمُتَأَخِّرين عَنهُ بِالْكُوفَةِ فِيهِ أَوْهَام كَثِيرَة
இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.இமாம் கூறுகிறார்:
ஷரீக் பின் அப்துல்லாஹ் பின் ஹாரிஸ் பின் அவ்ஸ் பின் ஹாரிஸ் அன்னகஈ. இவரின் புனைப் பெயர் அபூஅப்துல்லாஹ். பிறப்பிடம் குராசான்.
மன்ஸூர் பின் அபூமுஸாஹிம் கூறுகிறார்: ஷரீக் அவர்கள், “நான் புகாராவில் குதைபா பின் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
அவர்கள் கொல்லப்பட்ட ஹிஜ்ரி 95 ஆம் ஆண்டு பிறந்தேன்” என்று குறிப்பிட்டார்.
ஷரீக் அவர்கள் அபூஇஸ்ஹாக், ஸலமா பின் குஹைல் ஆகியோரிடமிருந்து ஹதீஸ்களை அறிவித்துள்ளார். இப்னுல் முபாரக் பிறப்பு ஹிஜ்ரி 118
இறப்பு ஹிஜ்ரி 181
வயது: 63
(ரஹ்) மற்றும் ஈராக்கின் அறிஞர்கள் இவரிடமிருந்து அறிவித்துள்ளனர்.
இவர் ஹிஜ்ரி 150 ஆம் ஆண்டு வாஸித் நகரத்தின் நீதிபதியாகப் பொறுப்பேற்றார். பின்னர் கூஃபாவின் நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். கூஃபாவில் ஹிஜ்ரி 177 அல்லது 178 ஆம் ஆண்டு காலமானார்.
இவர் கடைசிக் காலத்தில் அறிவித்த ஹதீஸ்களில் தவறுகள் நேர்ந்தன. (இதற்கு காரணம் அப்போது) இவரின் நினைவாற்றல் பாதிக்கப்பட்டிருந்தது. யஸீத் பின் ஹாரூன், இஸ்ஹாக் அல்அஸ்ரக் போன்றவர்கள் வாஸித்தில் இவரிடமிருந்து செவியுற்ற ஹதீஸ்களில் எந்தப் பிழையும் இல்லை. ஆனால், கூஃபாவில் இவரிடமிருந்து செவியேற்ற பிந்தைய கால அறிவிப்பாளர்கள் வழியாக வரும் ஹதீஸ்களில் பல தவறுகள் காணப்படுகின்றன.
(நூல்: அஸ்ஸிகாத்-6/444)
تاريخ بغداد (7/ 327 ت بشار):
أخبرنا محمد بن الحسين القطان، قال: أخبرنا دعلج بن أحمد، قال: أخبرنا أحمد بن علي الأبار قال: سألت عبد الحميد بن بيان عن إسحاق الأزرق، وكيف سمع من شريك؟ قال: سمع منه بواسط. قلت له: في أي شيء جاء إلى واسط؟ قال: جاء في كري الأنهار، فأخذ إسحاق كتابه قلت: أيما أكثر سماعا، عن شريك إسحاق أو يزيد بن هارون؟ قال: إسحاق نحو من خمسة آلاف ويزيد نحو من ثلاثة آلاف.
அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் அலீ-அல்அப்பார் அவர்கள் கூறுகிறார்:
நான் அப்துல் ஹமீது பின் பயான் அவர்களிடம் இஸ்ஹாக் அல்அஸ்ரக் பற்றியும், ஷரீக் பின் அப்துல்லாஹ் அல்காழீ அவர்களிடமிருந்து அவர் எவ்வாறு ஹதீஸ் கேட்டார் என்றும் கேட்டேன். அதற்கு அவர், “வாஸித் நகரில் வைத்து அவர் ஷரீக் அவர்களிடமிருந்து ஹதீஸ் கேட்டார்” என்று குறிப்பிட்டார்.
நான் அவரிடம், “எதற்காக அவர் வாஸித் நகருக்கு வந்தார்?” என்று கேட்டேன். அதற்கு அவர், “அவர் கால்வாய்களைப் புதுப்பிப்பதற்காக வந்தார். அப்போது இஸ்ஹாக் அவருடைய நூலை எடுத்துக்கொண்டார்” என்று குறிப்பிட்டார்.
நான், “ஷரீக் அவர்களிடமிருந்து அதிகமாக ஹதீஸ் கேட்டது இஸ்ஹாக்கா அல்லது யஸீத் பின் ஹாருனா?” என்று கேட்டேன். அதற்கு அவர், “இஸ்ஹாக் சுமார் ஐயாயிரம் ஹதீஸ்களும், யஸீத் சுமார் மூவாயிரம் ஹதீஸ்களும் கேட்டுள்ளனர்” என்று குறிப்பிட்டார்.
(நூல்: தாரீகுபஃக்தாத்-7/327)
تهذيب التهذيب (2/ 165):
وقال العجلي: كوفي ثقة، وكان حسن الحديث، وكان أروى الناس عنه إسحاق الأزرق.
இவரைப் பற்றி இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 80
அவர்கள், “இவர் கூஃபாவைச் சேர்ந்த நம்பகமான அறிவிப்பாளர். இவரின் செய்திகள் நல்லவை. மற்றவர்களை விட இஸ்ஹாக் அல்அஸ்ரக் அவர்கள் இவரிடமிருந்து அதிக ஹதீஸ்களை அறிவித்துள்ளார்” என்று கூறியுள்ளார்.
(நூல்: … தஹ்தீபுத் தஹ்தீப்-2/165)
புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள் இவர் இடம்பெற்ற ஒரு செய்தியை ஒரு இடத்தில் தஃலீக்காக பதிவு செய்துள்ளார். பார்க்க: புகாரி-1250.
முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
அவர்கள் சில இடங்களில் இவரின் செய்தியை துணைச் சான்றாக பதிவு செய்துள்ளார். மேலும் ஸுனன் நூல்களின் ஆசிரியர்களும் இவரின் சில செய்திகளை பதிவு செய்துள்ளனர்.
இவரைப் பற்றி ஹதீஸ்கலை அறிஞர்கள் கூறியுள்ள கருத்தின் படி இவரின் செய்திகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
1 . இவர், தனது நூலில் பதிவு செய்து அதிலிருந்து அறிவித்த செய்திகள்:
இவைகளில் வேறு விமர்சனம் இல்லாவிட்டால் ஏற்கலாம்.
2 . இவர் கூஃபாவில் நீதிபதியாக பதவி ஏற்பதற்கு முன், இவர் தனது மனனத்திலிருந்து அறிவித்த செய்திகள்:
இதில் சரியான ஹதீஸ்களும் உள்ளன. பலவீனமான ஹதீஸ்களும் உள்ளன. இவை குறித்து ஒரு பொதுவான சட்டத்தைக் கூறமுடியாது. இவற்றுக்குச் சான்றுகள் கிடைக்கும் பட்சத்தில் ஏற்றுக் கொள்ளப்படும்; இல்லையெனில் ஏற்றுக் கொள்ளப்படாது.
3 . இவர் கூஃபாவில் நீதிபதியாக பதவி ஏற்ற பிறகு மனனத்திலிருந்து அறிவித்த செய்திகள்:
இந்தச் சந்தர்ப்பத்தில்தான் இவரின் அறிவிப்புகளில் அதிகம் தவறு ஏற்பட்டதாக சில ஹதீஸ்கலை அறிஞர்கள் கூறியுள்ளனர். இந்த வகை செய்திகளை எழுதிக் கொள்ளலாம். ஆனால் இவைகளை தனி ஆதாரமாக ஏற்றுக் கொள்ளக்கூடாது. இவரின் செய்தியைப் போன்று மற்ற பலமானவர்கள் அறிவித்தால் இவரின் செய்தியை ஹஸன் தரம் என்று முடிவு செய்யலாம்.
يوجد في الرواة من إسمه شريك بن عبدالله اثنان:
1 – شريك بن عبدالله بن أبي نمر، أبو عبدالله المدني، من رجال البخاري ومسلم، ثقة له بعض الأوهام، ومن ذلك أوهامه في حديث الإسراء والمعراج في صحيح البخاري
2 – شريك بن عبدالله النخعي الكوفي،أبي عبدالله القاضي، روى له البخاري معلقاً في موضع واحد، ومسلم في أربعة مواضع واصحاب السنن، وحديثة على ثلاثة أقسام:
1 – ما حدث به من كتابه فهو مقبول ومن أصح حديثه.
2 – ما حدث به من حفظه قبل أن يتولى القضاء، فمنه ماهوصحيح وماهو ضعيف، فلايحكم عليه بحكم عام إن استقام ووجد ما يشهد له قبل وإلا فلا.
3 – ما حدث به من حفظه بعد أن يتولى القضاء فهو مردود فيكتب حديثه ولايحتج به.
…
சமீப விமர்சனங்கள்