بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
ஷஹ்ர் பின் ஹவ்ஷப் – شهر بن حوشب الأشعري
இறப்பு: ஹி-100.
தரம்: …
இயற்பெயர்: ஷஹ்ர்
தந்தை பெயர்: ஹவ்ஷப்
வமிசம்: அல்அஷ்அரீ
புனைப்பெயர்: அபூஸயீத், அபுல்ஜஃத் போன்ற இன்னும் சிலவை.
ஊர் பெயர்: பஸரா
பிறப்பு: ஹிஜ்ரி-20.
இறப்பு: ஹிஜ்ரி-100
கால கட்டம்: 3.
ஷஹ்ர் பின் ஹவ்ஷப் அல்அஷ்அரீ அஷ்ஷாமீ அல்ஹிம்ஸீ அவர்கள் அஸ்மா பின்த் யஸீத் அவர்களின் அடிமையாக இருந்து பிறகு விடுதலை செய்யப்பட்டவர் ஆவார்.
இவர் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி), ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி), அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), உம்மு ஸலமா (ரலி), அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) இன்னும் சிலரிடமிருந்து ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
இவரிடமிருந்து அப்துல்ஹமீத் பின் பஹ்ராம், கதாதா, முஆவியா பின் குர்ரா, ஹகம் பின் உதைபா, அபூபிஷ்ர்-ஜஅஃபர் பின் அபூவஹ்ஷியா, முகாத்தில் பின் ஹய்யான், அபூபக்ர் அல்ஹுதலீ, லைஸ் பின் அபூஸுலைம் போன்ற இன்னும் சிலரும் இவரிடமிருந்து ஹதீஸ்களை அறிவித்துள்ளனர்.
குர்ஆனைக் கற்றல்.
ஷஹ்ர் பின் ஹவ்ஷப், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் குர்ஆனைக் கற்றார். ஷஹ்ர் கூறுகிறார்: நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் ஏழு தடவை குர்ஆனை ஓதிக் காட்டியுள்ளேன்…
இப்னு அபூநஹீக் கூறுகிறார்: நான் இப்னு அப்பாஸ் (ரலி), இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி) மற்றும் சிலரிடம் குர்ஆனை ஓதினேன். ஆனால் ஷஹ்ர் பின் ஹவ்ஷப் அவர்களைப் போல மிகச் சிறப்பாக ஓதக்கூடிய ஒருவரைக் கூட நான் பார்க்கவில்லை…
இவரின் சில ஹதீஸ்களை புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள் தனது அல்அதபுல் முஃப்ரதில் பதிவு செய்துள்ளார். மேலும் முஸ்லிம்,பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
அபூதாவூத்,பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
திர்மிதீ, நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
இப்னு மாஜா ஆகியோரும் இவரின் சில ஹதீஸ்களை பதிவு செய்துள்ளனர்.
ஷஹ்ர் பின் ஹவ்ஷப் அவர்களை சிலர் பாராட்டியுள்ளனர். சிலர் விமர்சித்துள்ளனர்.
- இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர். இஜ்லீ,பிறப்பு ஹிஜ்ரி 181
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 80
யஃகூப் பின் ஷைபா,பிறப்பு ஹிஜ்ரி 182
இறப்பு ஹிஜ்ரி 262
வயது: 80
யஃகூப் பின் ஸுஃப்யான் பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 83
ஆகியோர் இவர் பலமானவர் என்று கூறியுள்ளனர். யஃகூப் பின் ஸுஃப்யான் பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 83
அவர்கள் இவரை சிலர் விமர்சித்துள்ளனர். ஆனால் இவர் பலமானவரே என்று கூறியுள்ளார். - இப்னுல் மதீனீ பிறப்பு ஹிஜ்ரி 161
இறப்பு ஹிஜ்ரி 234
வயது: 73
அவர்கள், இவரின் ஹதீஸ்களை நான் விட்டுவிட மாட்டேன். இவரிடமிருந்து யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.அவர்கள் ஹதீஸ்களை அறிவிக்கவில்லை. ஆனால் அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ பிறப்பு ஹிஜ்ரி 133
இறப்பு ஹிஜ்ரி 198
வயது: 65
அஹ்மத் இமாம் அவர்களின் ஆசிரியர்களில் ஒருவர்; அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.அறிவித்துள்ளார். எனவே இருவரும் சேர்ந்து விட்டுவிடும் மனிதரிடமிருந்து தான் நான் ஹதீஸை அறிவிக்கமாட்டேன் என்று கூறியுள்ளார். - இப்னுல் கத்தான் அவர்கள், இவரை பலவீனமானவர் என்று கூறியவர்கள் அதற்குரிய ஆதாரத்தை கூறவில்லை என்று கூறியுள்ளார்.
- அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
அவர்கள், இவரை பலமானவர் என்று கூறியதாகவும், சுமாரானவர் என்ற கருத்தில் கூறியதாகவும் இரு கருத்து உள்ளது. - புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள், இவரின் செய்தியை ஹஸன் தரத்தில் அமைந்தது என்று கூறியுள்ளார். அபூஸுர்ஆ அவர்களும் இவ்வாறே கூறியுள்ளார்.
- அப்துல்லாஹ் பின் அவ்ன் அவர்கள் இவரை சிலர் விமர்சித்துள்ளனர் என்று கூறியுள்ளார். (யார் என விவரம் கூறவில்லை). (இவரை சிலர் விமர்சித்த காரணம் இவர் ஆட்சி, அதிகாரத்தில், அரசியலில் ஈடுபட்டார் என்று திர்மிதீ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.)
- ஷுஅபா பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
அவர்கள், இவரை நான் சந்தித்துள்ளேன். இவரை நான் ஒரு பொருட்டாக கருதவில்லை என்று கூறியுள்ளார். - யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.அவர்கள் இவரிடமிருந்து ஹதீஸ்களை அறிவிக்கவில்லை. - ஜவ்ஸஜானி, மூஸா பின் ஹாரூன், நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
உகைலீ,பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 322
தாரகுத்னீ,பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 458
வயது: 74
ஆகியோர் இவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர். - அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
இப்னு ஹிப்பான்,பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும். இப்னு அதீ,பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
இப்னு ஹஸ்ம் பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 456
வயது: 72
போன்றோர் இவரின் செய்திகளை ஆதாரமாக ஏற்கக்கூடாது என்று கூறியுள்ளனர். - இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் இவர் ஸதூக்-நடுத்தரமானவர் நடுத்தரமானவர் - حسن الحديث என்றாலும் அதிகம் முர்ஸலாக-தனது ஆசிரியரிடமிருந்து ஸிமாஃவை கூறாமல் அறிவித்துள்ளார். மேலும் அதிகம் தவறாக அறிவித்துள்ளார் என்று கூறியுள்ளார்.
….
இவர் நினைவாற்றல் சரியில்லாத காரணத்தால் அதிகம் தவறாக அறிவித்துள்ளார் என்பதால் இவர் தனித்து அறிவிக்கும் செய்திகள் பலவீனமானவை; குறைந்த பட்சம் இவரின் செய்திகளைப் போன்று மற்றவர்கள் அறிவித்தால் இவரின் செய்திகளை துணைச் சான்றாக கூறிக் கொள்ளலாம் என்றே சில அறிஞர்கள் கூறியுள்ளனர்.
تاريخ ابن معين – رواية الدوري (4/ 216):
4031 – سَمِعت يحيى يَقُول شهر بن حَوْشَب شَامي نزل الْبَصْرَة وَهُوَ ثِقَة وَكَانَ من الْأَشْعَرِيين من أنفسهم
تاريخ ابن معين – رواية الدوري (4/ 434):
5159 – سَمِعت يحيى يَقُول شهر بن حَوْشَب ثَبت
…
الجامع لعلوم الإمام أحمد – الرجال (17/ 594):
قال أحمد بن الحسن: قال أحمد بن حنبل: لا بأس بحديث عبد الحميد بن بهرام، عن شهر بن حوشب.
“سنن الترمذي” (3215).
العلل الكبير للترمذي = ترتيب علل الترمذي الكبير (ص145):
250 – وَسَأَلْتُ مُحَمَّدًا عَنْ حَدِيثِ حَمَّادِ بْنِ جَعْفَرٍ ، عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ قَالَ: حَدَّثَتْنِي أُمُّ شَرِيكٍ ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم «أَمَرَهُمْ أَنْ يَقْرَءُوا عَلَى الْجَنَازَةِ بِفَاتِحَةِ الْكِتَابِ» ، فَضَعْفٌ مِنْهُ، وَكَذِبٌ وَتَكَلَّمَ فِيهِ ابْنُ عَوْنٍ. ثُمَّ رَوَى عَنْ هِلَالِ بْنِ أَبِي زَيْنَبَ عَنْهُ ، وَأَنَا أَرْوِي عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ
….
صيانة صحيح مسلم (ص: 124)
وَشهر قد وَثَّقَهُ أَحْمد بن حَنْبَل وَيحيى بن معِين وَغَيرهمَا وَالَّذِي ذكره فِيهِ ابْن أبي خَيْثَمَة أَنه ثِقَة حَكَاهُ عَن يحيى بن معِين وَاقْتصر عَلَيْهِ وَالْقلب إِلَى هَذَا أميل وَإِن ذكره جمَاعَة فِي كتبهمْ فِي الضُّعَفَاء وَقد ذكره أَبُو نعيم الْحَافِظ فِيمَن ذكرهم فِي حلية الْأَوْلِيَاء وَمَا ذكر فِي جرحه من أَخذه خريطة من بَيت المَال على جِهَة الْخِيَانَة لَهُ محمل يدْرَأ عَنهُ الْقدح الْمسْقط وَقَول ابْن حبَان إِنَّه سرق عَيْبَة من عديله فِي الْحَج غير مَقْبُول وَالله أعلم
…
1 . திருட்டுப் பற்றிய கதை.
அறிவிப்பாளர்தொடர்: 1
الكامل في ضعفاء الرجال (5/ 59):
حَدَّثَنَا مُحَمد بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنا بُنْدَار، حَدَّثَنا يَحْيى القطان عن عباد بن منصور قال حججت مع شَهْر بن حَوْشَب فسرق عيبتي في الطريق.
முஹம்மத் பின் ஸுலைமான் —> புன்தார் —> யஹ்யா அல்கத்தான் —> அப்பாத் பின் மன்ஸூர்.
அப்பாத் பின் மன்ஸூர் கூறுகிறார்:
நான் ஷஹ்ர் பின் ஹவ்ஷப் அவர்களுடன் ஹஜ் பயணம் செய்தேன். வழியில் என்னுடைய பயணப்பையை அவர் திருடிவிட்டார்.
நூல்கள்: அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-5/59, அல்கிலாஃபிய்யாத்-266, தாரீக் திமிஷ்க்-8/143)
அறிவிப்பாளர்தொடர்: 2
الخلافيات – البيهقي – ت النحال (1/ 172):
[227] أخبرنا أَبُو عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيُّ، ثنا إِسْمَاعِيلُ بْنُ أَحْمَدَ الْجُرْجَانِيُّ، ثنا أَبُو الْقَاسِمِ الْبَغَوِيُّ، ثنا مَحْمُودُ بْنُ غَيْلَانَ، ثنا شَبَابَةُ، قَالَ: سَمِعْتُ شُعْبَةَ يَقُولُ: كَانَ شَهْرُ بْنُ حَوْشَبٍ رَافَقَ رَجُلًا مِنْ أَهْلِ الشَّامِ فَسَرَقَ عَيْبَتَهُ
அபூஅப்துர்ரஹ்மான் அஸ்ஸுலமீ —> இஸ்மாயீல் பின் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
அல்ஜுர்ஜானீ —> அபுல்காஸிம் அல்பஃகவீ —> மஹ்மூத் பின் ஃகைலான் —> ஷுஅபா.
ஷுஅபா பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
அவர்கள் கூறுகிறார்:
ஷஹ்ர் பின் ஹவ்ஷப் ஷாம் நாட்டைச் சேர்ந்த ஒருவருடன் பயணத்தில் தோழமை கொண்டார். அவரின் பயணப்பையை ஷஹ்ர் திருடிவிட்டார்.
நூல்கள்: குப்ரா பைஹகீ-312, அல்கிலாஃபிய்யாத்-227, தாரீக் திமிஷ்க்-23/233)
முரண்பாடு:
இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
அவர்களின் அறிவிப்பில் ஷஹ்ர் அவர்களின் பயணத்தோழர் அப்பாத் பின் மன்ஸூர் என்று உள்ளது. இவர் பஸராவைச் சேர்ந்தவர்.
பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 458
வயது: 74
அவர்களின் அறிவிப்பில் பயணத்தோழர் ஷாம் நாட்டைச் சேர்ந்த ஒரு மனிதர் என்று உள்ளது.
பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 458
வயது: 74
அவர்களின் அறிவிப்பில் வரும் அபூஅப்துர்ரஹ்மான் அஸ்ஸுலமீ ஹதீஸ்கலை அறிஞர்களால் விடப்பட்டவர் ஆவார் (நூல்: தாரீகு பஃக்தாத்-2/248).
ஆதாரமற்ற குற்றச்சாட்டு:
அப்பாத் பின் மன்ஸூர் கத்ரிய்யா கொள்கையுடையவர். இவருக்கும், ஷஹ்ர் அவர்களுக்கும் இடையில் ஏதோ அரசியல் ரீதியான பிரச்சனை இருக்கலாம். ஷஹ்ர் அவர்கள் அப்பாத் பின் மன்ஸூரை விட நம்பிக்கைக்குரியவர் ஆவார். எனவே இதன் மூலம் ஷஹ்ர் அவர்களை உடனடியாக நாம் குறை சொல்ல முடியாது. இந்த தகவல் ஏற்கத்தக்கதல்ல என்பதால் தான் சிலர் இவரை பலமானவர் என்று கூறியுள்ளனர்.
2 . பைத்துல் மால் திருட்டுப் பற்றிய கதை
الخلافيات – البيهقي – ت النحال (1/ 172):
[229] أخبرنا الْحَاكِمُ أَبُو عَبْدِ اللَّهِ الْحَافِظُ، ثنا أَبُو الْعَبَّاسِ مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ، ثنا الْعَبَّاسُ بْنُ مُحَمَّدٍ الدُّورِيُّ، ثنا يَحْيَى بْنُ أَبِي بُكَيْرٍ، ثنا أَبِي، قَالَ: كَانَ شَهْرُ بْنُ حَوْشَبٍ عَلَى بَيْتِ الْمَالِ فَأَخَذَ خَرِيطَةً (1) فِيهَا دَرَاهِمُ، فَقَالَ الْقَائِلُ:
لَقَدْ بَاعَ شَهْرٌ دِينَهُ بِخَرِيطَةٍ … فَمَنْ يَأْمَنُ الْقُرَّاءَ بَعْدَكَ يَا شَهْرُ
அப்பாஸ் பின் முஹம்மத்-அத்தூரீ கூறினார்:
ஷஹ்ர் பின் ஹவ்ஷப் பைத்துல் மாலின் பொறுப்பாளராக இருந்தார். அப்போது அவர் அதில் இருந்த ஒரு பணப்பையை எடுத்துக்கொண்டார். அதனால் ஒருவர் பின்வருமாறு கவிதை படித்தார்:
ஷஹ்ர் தன் மார்க்கத்தை ஒரு பைக்காக விற்றுவிட்டாரே! ஷஹ்ரே! உனக்குப் பிறகு குர்ஆன் ஓதுவோரை யார் நம்புவார்கள்?
(நூல்கள்: அல்இலல் வ மஃரிஃபதுர் ரிஜால்-3997, அல்மஃரிஃபது வத்தாரீக்-2/98, தாரீகுத் தபரீ-6/539, அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-5/59, குப்ரா பைஹகீ-, அல்கிலாஃபிய்யாத்-1/172, தாரீக் திமிஷ்க்-)
அபூ கைஸமா மற்றும் அம்ர் பின் அலீ ஆகியோரும் இதே போன்ற ஒரு நிகழ்வை அறிவித்துள்ளனர்.
سير أعلام النبلاء (4/ 375):
وَرَوَى: يَحْيَى بنُ أَبِي بُكَيْرٍ الكَرْمَانِيُّ، عَنْ أَبِيْهِ، قَالَ:
كَانَ شَهْرُ بنُ حَوْشَبٍ عَلَى بَيْتِ المَالِ، فَأَخَذَ خَرِيْطَةً فِيْهَا دَرَاهِمُ، فَقِيْلَ فِيْهِ:
لَقَدْ بَاعَ شَهْرٌ دِيْنَهُ بِخَرِيْطَةٍ … فَمَنْ يَأْمَنُ القُرَّاءَ بَعْدَكَ يَا شَهْرُ؟
أَخَذْتَ بِهَا شَيْئاً طَفِيْفاً وَبِعْتَهُ … مِنِ ابْنِ جَرِيْرٍ، إِنَّ هَذَا هُوَ الغَدْرُ
قُلْتُ: إِسْنَادُهَا مُنْقَطِعٌ، وَلَعَلَّهَا وَقَعَتْ وَتَابَ مِنْهَا، أَوْ أَخَذَهَا مُتَأَوِّلاً أَنَّ لَهُ فِي بَيْتِ مَالِ المُسْلِمِيْنَ حَقّاً – نَسْأَلُ اللهَ الصَّفْحَ.
فَأَمَّا رِوَايَةُ يَحْيَى القَطَّانِ، عَنْ عَبَّادِ بنِ مَنْصُوْرٍ، قَالَ: حَجَجْتُ مَعَ شَهْرِ بنِ حَوْشَبٍ، فَسَرَقَ عَيْبَتِي، فَمَا أَدْرِي مَا أَقُوْلُ!
இந்தக் கதையின் அறிவிப்பாளர்தொடர் யஹ்யா பின் அபூபுகைர் அவர்களின் தந்தையிடம் முடிவடைகிறது. அவர் அறியப்படாதவர் ஆவார். அறிவிப்பாளர்கள் பற்றிய நூல்களில் அவருக்கு வரலாறு இல்லை. எனவே தான் தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்கள் இதை முன்கதிஃ என்று கூறியுள்ளார். ஆனால் அப்பாத் பின் மன்ஸூர் அறிவிக்கும் செய்தி பற்றி நான் என்ன கூறுவது என்று எனக்கு தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
(நூல்: ஸியரு அஃலாமின் நுபலா-4/375)
صحيح وضعيف تاريخ الطبري (9/ 490):
قال عليّ: قال أبو بكر الهذليّ: كان شَهْر بن حوشب على خزائن يزيد بن المهلب، فرفعوا عليه أن أخذَ خَريطةً، فسأله يزيدُ عنها، فأتاه بها، فدعا يزيدُ الذي رَفَع عليه فشَتَمه؛ وقال لشَهر: هي لك، قال: لا حاجةَ لي فيها، فقال القُطاميّ الكلبيّ – ويقال: سِنان بن مكمّل النّميريّ:
لقد بَاعَ شَهرٌ دِينَهُ بِخَريطَةٍ … فمن يأْمَنُ القرَّاءَ بعدَك يا شَهْرُ؟ !
أخَذْتَ به شيئًا طَفِيفًا وبِعْتَهُ … من ابن جونبوذ إنَّ هذا هو الغَدْرُ
البداية والنهاية (9/ 370):
وقال علي بن محمد المدائني: قال أبو بكر الهذلي: كان شهر بن حوشب على خزائن يزيد بن المهلب فرفعوا إليه أنه أخذ خريطة فيها مئة دينار، فسأله عنها فقال: نعم وأحضرها؛ فقال له يزيد: هي لك، واستدعى بالذي وشى به فشتمه، فقال في ذلك القُطامي الكلبي، ويقال إنها لسنان بن مكمّل النميري:
لقدْ باعَ شهرٌ دينهُ بخريطةٍ … فمنْ يأمنُ القرَّاءُ بعدك يا شَهْرُ
أخذت بهِ شيئًا طفيفًا وبِعْتَهُ … من ابنِ جونبوذ إنَّ هذا هو الغدرُ
அபூபக்ர் அல்ஹுதலீ என்பவர் கூறியதாவது:
ஷஹ்ர் பின் ஹவ்ஷப் அவர்கள், யஸீத் பின் முஹல்லப் என்பவரின் கருவூலங்களுக்குப் பொறுப்பாளராக இருந்தார். அந்நிலையில், ஷஹ்ர் அவர்கள் ஒரு பை நிறைய தங்க காசுகளை எடுத்துக்கொண்டதாக அவர் மீது ஒரு குற்றச்சாட்டைச் சிலர் சுமத்தினர்.
இது குறித்து யஸீத் பின் முஹல்லப் அவர்கள் ஷஹ்ர் அவர்களைக் கேட்க, ஷஹ்ர் அவர்கள் ஆம் என்று கூறி அந்தக் குறிப்பிட்ட பையை அவரிடத்தில் கொண்டு வந்து கொடுத்தார்கள். (இது குறித்து சில விளக்கங்களை ஷஹ்ர் அளித்திருக்கலாம்) உடனே யஸீத் பின் முஹல்லப் அவர்கள், ஷஹ்ர் மீது பழி சுமத்தியவரை அழைத்து அவரைக் கடுமையாக ஏசினார். பின்னர் யஸீத் அவர்கள் ஷஹ்ரிடம், “இது உங்களுக்கே இருக்கட்டும்” என்று கூறினார். அதற்கு ஷஹ்ர் அவர்கள், “இதில் எனக்குத் தேவையே இல்லை” என்று கூறி, அதை நிராகரித்து விட்டார்கள்.
இந்த நிகழ்வுக்குப் பின் (இதனுடன் தொடர்புடைய) அல்குத்தாமீ அல்கல்பி என்ற கவிஞர் (அல்லது ஸினான் பின் முகம்மல் அன்னுமைரீ என்றும் கூறப்படுகிறது) பின்வரும் கவிதையைச் சொன்னார்:
நிச்சயமாக ஷஹ்ர் ஒரு பைக்காக தன் மார்க்கத்தை விற்றுவிட்டாரே!
ஷஹ்ரே! உமக்குப் பிறகு குர்ஆன் ஓதுவோரை யார் நம்புவார்கள்?!
அதன் மூலம் அற்பமான ஒரு பொருளைப் பெற்றுக் கொண்டு இப்னு ஜவ்ன்பூதிடம் (அதாவது யஸீத் பின் முஹல்லபிடம்) உமது மார்க்கத்தை விற்றுவிட்டீரே! இதுவே பெரும் மோசடி ஆகும்!
(நூல்கள்: தாரீகுத் தபரீ-6/539, 9/490, அல்பிதாயா வன்னிஹாயா-3/370)
இதை சிலர் ஷஹ்ர் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியால் கூறியிருக்கலாம் என்று சிலர் கூறியுள்ளனர்.
சமீப விமர்சனங்கள்