தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

raavi-31654-உமர் பின் அலீ பின் அபூதாலிப்

A- A+

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

உமர் பின் அலீ பின் அபூதாலிப் – عمر بن علي بن أبي طالب

இறப்பு: ஹி-67.

தரம்: பலமானவர்


இயற்பெயர்: உமர்

தந்தை பெயர்: அலீ பின் அபூதாலிப் (ரலி)

வமிசம்: அல்குரஷீ

புனைப்பெயர்:

ஊர் பெயர்: மதீனா

பிறப்பு:

இறப்பு: ஹிஜ்ரி-67

கால கட்டம்: 3.


உமர் பின் அலீ பின் அபூதாலிப்


 

التاريخ الكبير للبخاري (7/ 216 ت الدباسي والنحال):
‌‌[8073] عُمرُ بنُ عَلِيِّ بنِ أَبِي طَالبٍ، الهَاشِميُّ، القُرَشِيُّ .
قَالَ إسْحَاقُ: أَنبأَ عِيسَى بنُ يُونسَ، ثنا ابنُ يَسارٍ، ثنا مُحمَّدُ بنُ عُمَرَ بنِ عَلِيٍّ، عَن أَبيهِ؛ رَأَى عَلِيًّا يَشرَبُ قَائِمًا. حَديثُهُ في أَهلِ المدِينَةِ.
وقالَ ابنُ مُنذِرٍ: ثنا ابنُ أَبي فُدَيكٍ، عنْ عَبدِ اللَّهِ بنِ مُحمَّدِ بنِ عُمَرَ بنِ عَلِيِّ بنِ أَبي طَالبٍ، عَنْ أَبيهِ، عنْ جدِّهِ.


التاريخ الكبير للبخاري (6/ 179 ت المعلمي اليماني):
2096 – عُمَر بْن عَلِيّ بْن أَبِي طالب الَهاشمي القرشى، اسحاق اخ.
عِيسَى بْن يونس حَدَّثَنَا ابْن يسار حَدَّثَنَا مُحَمَّد بْن عُمَر بْن عَلِيّ عَنْ أَبِيه: رأى عليا رضى الله عَنْهُ شرب قائما، حديثه فِي أهل المدينة، ابن منذر حدثنا ابن أَبِي فديك عَنْ عَبْد اللَّه بْن مُحَمَّد بْن عُمَر بْن عَلِيّ بْن أَبِي طَالِبٍ رضى الله عَنْهُ عَنْ أَبِيهِ عَنْ جده: ‌مشى ‌عَلِيّ رضى الله عَنْهُ فِي نعل.

புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம் கூறுகிறார்:

8073. உமர் பின் அலீ பின் அபூதாலிப் அல்ஹாஷிமீ அல்குரஷீ.

இஸ்ஹாக் பின் மன்ஸூர் அவர்கள், ஈஸா பின் யூனுஸ் —> இப்னு யஸார் —> முஹம்மத் பின் உமர் பின் அலீ —> உமர் பின் அலீ என்ற அறிவிப்பாளர்தொடரில், “அலீ (ரலி) அவர்கள் நின்று கொண்டு தண்ணீர் குடிப்பதை உமர் பின் அலீ அவர்கள் பார்த்தார்” என்று கூறியதாக அறிவித்தார்.

இவருடைய ஹதீஸ்கள் மதீனாவாசிகளிடம் புழக்கத்தில் இருந்தன.

இப்னு முன்திர் அவர்கள், இப்னு அபூ ஃபுதைக் —> அப்துல்லாஹ் பின் முஹம்மத் பின் உமர் —> முஹம்மத் பின் உமர் பின் அலீ —> உமர் பின் அலீ என்ற அறிவிப்பாளர்தொடரில், “அலீ (ரலி) அவர்கள் செருப்பு அணிந்த நிலையில் நடந்தார்கள்” என்று கூறியதாக அறிவித்தார்.

(நூல்: தாரீகுல் கபீர்-8073, 2096)


موقف الإمامين البخاري ومسلم من اشتراط اللقيا والسماع في السند المعنعن بين المتعاصرين (ص477):
مواطن الاتفاق والاختلاف بين الرأيين
أ – مواطن الاتفاق:
يظهر لنا مما تقدم في البابين الماضيين أن الإمامين البخار ومسلمًا يتفقان في مسألة السند المعنعن على ما يلي:
1- إن صيغة الأداء “عن” لا تفيد الاتصال إلا بشروط؛ فالبخاري يشترط العلم باللقاء بين المعنعن والمعنعن عنه، ومسلم يشترط العلم بالمعاصرة مع أمور أخرى.
2- إذا ثبت أن المعنعن قد لقي المعنعن عنه فإن البخاري ومسلمًا يحتجان بذلك السند المعنعن إذا سلم من الموانع.
3- إن الثقة غير المدلس إذا روى حديثًا بالعنعنة عن شيخ قد عاصره ولقياه له محتملة جدًا لقوة القرائن، ولعدم ما يدل على الانقطاع؛ فإن مسلمًا يحتج بذلك الحديث. كما أنني وجدت البخاري احتج ببعض الأحاديث التي هي على هذا النحو.
4- إذا روى المعاصر المدلس الذي لم يثبت لقيه لمن روى عنه بالعنعنة، فلا يقبل ذلك بالاتفاق عند الشيخين.
5- إذا روى الثقة المعاصر عن آخر بالعنعنة، ولا يدري هل لقي من روى عنه أم لا؟، ثم جاء من طريق آخر إدخال واسطة بينهما، أو ورد عن الراوي الأول صيغة أداء تدل على الانقطاع، أو جاء عن أحد الأئمة المطلعين نص يدل على عدم السماع؛ فلا يحتج الشيخان بذلك ولا يقبلانه لضعفه عندهما.

ஒரு ஹதீஸின் அறிவிப்பாளர்தொடர் முத்தஸிலானது-இடமுறிவு ஏற்படதாதது என்பதை முடிவு செய்யும் வழிகள்:

ஆசிரியருக்கும், மாணவருக்கும் இடையில் ஸமாஃ-سمعت நேரடியாக கேட்டேன் என்பது போன்ற வார்த்தைகளைக் கூறாமல் عن என்று மட்டும் குறிப்பிடப்பட்டு இடம்பெறும் அறிவிப்பாளர்தொடரை ஏற்பதற்கு புகாரி,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
இமாம்கள் வைத்துள்ள முக்கிய நிபந்தனைகளில் ஒன்று:

1 . புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம், “அன்அனாவின் செய்திகளை ஏற்பதற்கு ஆசிரியருக்கும், மாணவருக்கும் இடையில் சந்திப்பு ஏற்பட்டது” என்று தெரியவேண்டும் என்று நிபந்தனை வைத்துள்ளார். (வேறு ஆதாரம் மூலம் சந்திப்பு தெரியாவிட்டால் குறைந்த பட்சம் அறிவிப்பாளர்தொடரில் ஏதேனும் ஒரு செய்தியில் ஸமாஃ இருக்க வேண்டும். புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம் சந்திப்பை தான் முக்கிய நிபந்தனையாக வைத்துள்ளார்)

2 . முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
இமாம், “அன்அனாவின் செய்திகளை ஏற்பதற்கு ஆசிரியருக்கும், மாணவருக்கும் இடையில் சந்திப்பு ஏற்பட்டது என்று தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. சந்திக்க வாய்ப்பிருந்தால் போதும்” என்று நிபந்தனை வைத்துள்ளார். (ஆனால் மாணவர் தத்லீஸ் செய்யாதவராக இருக்க வேண்டும்)

இருவரின் நிபந்தனைகளுக்கு உள்ள ஒற்றுமைகளில் சில:

கடந்த இரு பாடங்களில் விளக்கப்பட்டவற்றிலிருந்து புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
ஆகிய இருவரும் அன்அனா செய்திகளில் பின்வரும் அம்சங்களில் உடன்படுகிறார்கள்:

1 . ஹதீஸை அறிவிக்கும்போது கூறப்படும் ‘அன்’ என்ற வார்த்தை பொதுவாக அறிவிப்பாளர்தொடர் முத்தஸில்-சங்கிலித்தொடராக உள்ளது என்ற கருத்தைத் தராது.

அதற்கு சில நிபந்தனை உள்ளது. புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள், அறிவிப்பாளர் யாரிடமிருந்து அறிவிக்கிறாரோ அவரைச் சந்தித்திருப்பது உறுதி செய்யப்பட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறார்கள். முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
அவர்கள், சமகாலத்தில் உள்ளவராக இருக்க வேண்டும் என்பதுடன் வேறு ஒரு நிபந்தனை அதாவது தத்லீஸ் செய்யாதவராக இருக்க வேண்டும் என்று கூறுகிறார்.

2 . சந்திப்பு நடந்தது உறுதியாக தெரியும் போது:

ஒரு அறிவிப்பாளர் யாரிடமிருந்து அறிவிக்கிறாரோ அவரைச் சந்தித்துள்ளார் என்பது உறுதியாகிவிட்டால், அந்த அறிவிப்புத் தொடரில் வேறு குறைபாடுகள் இல்லாத பட்சத்தில், புகாரி,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
ஆகிய இருவருமே அந்த ‘அன்அனா’ தொடரை ஆதாரமாக ஏற்றுக் கொள்கிறார்கள்.

3 . சந்திப்பு நிகழ வாய்ப்புள்ள சூழல்:

தத்லீஸ் செய்யாத, நம்பகமான ஓர் அறிவிப்பாளர், தன் காலத்தில் வாழ்ந்த ஒருவரிடமிருந்து ‘அன்’ என்று கூறி அறிவிக்கிறார். அவ்விருவரும் சந்திப்பதற்கான சாத்தியக்கூறுகள் வலுவாக இருந்து, அந்த அறிவிப்பாளர்தொடர் முன்கதிஃ என்பதற்கு வேறு ஆதாரம் ஏதும் இல்லையென்றால் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
அதை ஆதாரமாக ஏற்றுக் கொள்வார்.

(இதே போன்ற சில ஹதீஸ்களை புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்களும் ஆதாரமாகப் பயன்படுத்தியிருப்பதை நான் கண்டுள்ளேன் என்று இந்த நூலாசிரியர் கூறுகிறார்)

4 . தத்லீஸ் செய்பவரின் அறிவிப்பு:

தன்னோடு சமகாலத்தில் வாழ்ந்த ஒருவரிடமிருந்து ‘அன்’ என்று அறிவிக்கும் ஒருவர் ‘தத்லீஸ்’ செய்பவராக இருந்து, அவர் அந்த ஆசிரியரைச் சந்தித்தார் என்பது உறுதி செய்யப்படாவிட்டால், அத்தகைய அறிவிப்பை இரு இமாம்களுமே ஏற்றுக் கொள்வதில்லை.

5 . முன்கதிஃ-துண்டிப்பு வெளிப்படும் நிலை:

சமகாலத்தைச் சேர்ந்த ஒரு நம்பகமான அறிவிப்பாளர் மற்றோரிடமிருந்து ‘அன்’ என்று அறிவிக்கும்போது,
1 . அவர் அவரைச் சந்தித்தாரா? இல்லையா? என்பது தெரியவில்லை; ஆனால், மற்றொரு அறிவிப்புத் தொடரின் வழியாக அவ்விருவருக்கும் இடையில் வேறொருவர் இருப்பது தெரிய வந்தாலோ,
2 . அல்லது முதல் அறிவிப்பாளர் பயன்படுத்திய வார்த்தை அந்த அறிவிப்பாளர்தொடர் துண்டிக்கப்பட்டதைக் காட்டினாலோ,
3 . அல்லது ஆழமான அறிவுள்ள இமாம்கள் யாராவது ‘இவர் அவரிடமிருந்து செவியேற்கவில்லை’ என்று தெளிவுபடுத்தினாலோ, அந்த அறிவிப்பை பலவீனமானது எனக் கருதி இரு இமாம்களுமே ஏற்றுக் கொள்வதில்லை.

(நூல்: மவ்கிஃபுல் இமாமைனி புகாரி,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
முஸ்_லிம்-1/477)


سؤالات البرقاني للدارقطني ت القشقري (ص22):
85- قلت له: الحسين بن زيد بن علي بن الحسين عن عبد الله بن محمد ابن عمر بن علي ‌عن ‌أبيه ‌عن ‌جده ‌عن ‌علي. فقال كلهم ثقات


الجرح والتعديل – ابن أبي حاتم (6/ 124):
676 – عمر بن علي بن أبي طالب سمع اباه روى عنه ابنه محمد سمعت ابى يقول ذلك.

  • அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அவர்கள், உமர் பின் அலீ அவர்களைப் பற்றிய குறிப்பில் இவர் தனது தந்தை அலீ (ரலி) அவர்களிடம் ஹதீஸைக் கேட்டுள்ளார் என்றும் இவரிடமிருந்து இவர் மகன் முஹம்மது பின் உமர் ஹதீஸை அறிவித்துள்ளார் என்றும் கூறியுள்ளார்.

(நூல்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-6/124)


ஹதீஸை செவியேற்பதற்கான வயது வரம்பு:

فتح المغيث بشرح ألفية الحديث (2/ 145):
قال ابن الصلاح: ‌وعليه ‌استقر ‌عمل ‌أهل ‌الحديث ‌المتأخرين، ‌فيكتبون ‌لابن ‌خمس ‌فصاعدا ” سمع “، ولمن لم يبلغها ” حضر أو أحضر “.

இப்னு ஸலாஹ் அவர்கள் கூறுகிறார்கள்:

பிற்கால ஹதீஸ் கலை அறிஞர்களிடம் நடைமுறையில் உள்ள ஒரு விஷயம் என்னவென்றால், ஐந்து வயது அல்லது அதற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு (அவர்கள் சபையில் பங்கேற்றால்) ‘ஸமிஅ’ (செவியேற்றார்) என்று எழுதுவார்கள். ஐந்து வயதை அடையாத சிறுவர்களுக்கு ‘ஹலர’ ஆஜரானார்-பங்கேற்றார் அல்லது ‘உஹ்ளிர’ (அழைத்து வரப்பட்டார்) என்று எழுதுவார்கள்.

(நூல்: பத்ஹுல் முஃகீஸ்-2/145)


الباعث الحثيث شرح اختصار علوم الحديث ط ابن الجوزي (ص240):
قال النووي وابن الصلاح [2] “والصواب اعتبار التمييز، فإن فهم الخطاب ورد الجواب كان مميزاً صحيح السماع، وإن لم يبلغ خمساً، وإلا فلا”.وهذا ظاهر. ولا حجة فيما احتجوا به من رواية محمود بن الربيع، لأن الناس يختلفون في قوة الذاكرة،
ولعل غير محمود بن الربيع لا يذكر ما حصل له وهو ابن عشر سنين، وأيضا فان ذكره مجة وهو ابن خمس سنين لا يدل علي أنه يذكر كُلَّ ما رأي أو سمع، والحق أن العبرة في هذا بأن يميز الصبي ما يراه ويسمعه، وأن يفهم الخطاب ويرد الجواب. وعلى هذا يحمل ما روي عن موسى بن هارون الحمّال، فإنه سئل: “متى يسمع الصبي الحديث؟ ” فقال “إذا فرّق بين البقرة والحمار”. وكذلك ما روي عن أحمد بن حنبل فإنه سئل عن ذلك؟ فقال “إذا عقل وضبط”، فذُكر له عن رجل أنه قال: لا يجوز سماعه حتى يكون له خمس عشرة سنه؟ فأنكر قوله هذا وقال: بئس القول! فكيف يصنع بسفيان ووكيع ونحوهما [3]؟ ! “

நவவீ,பிறப்பு ஹிஜ்ரி 631
இறப்பு ஹிஜ்ரி 676
வயது: 45
இப்னு ஸலாஹ் ஆகியோர் கூறுகிறார்கள்:

“சிறுவன் நல்ல விவரம் உள்ளவனாக இருப்பதே சரியான அளவுகோலாகும். உரையாடல்களைப் புரிந்து கொண்டு, கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் திறன் ஒரு சிறுவனுக்கு இருக்குமேயானால், அவன் ஐந்து வயதை அடையாவிட்டாலும் அவனது செவியேற்பு (ஸமாஃ) சரியானதாகும். இல்லையெனில் அது சரியாகாது. இதுவே வெளிப்படையான உண்மையாகும்.

மஹ்மூத் பின் அர்ரபீஃ (ரலி) அவர்கள் (நபியவர்கள் வாயிலிருந்து நீரை உமிழ்ந்ததை ஐந்து வயதில் நினைவில் வைத்திருந்தது) தொடர்பாக முன்வைக்கப்படும் வாதங்கள் ஆதாரமாகக் கொள்ளப்படமாட்டாது. ஏனெனில், மக்களின் நினைவாற்றல் என்பது ஆளுக்கு ஆள் மாறுபடும்.

மஹ்மூத் பின் அர்ரரபீஃ (ரலி) அவர்கள் அல்லாத பிற சிறுவர்கள் பத்து வயதில் நடந்ததைக் கூட நினைவில் வைத்திருக்க மாட்டார்கள். மேலும், மஹ்மூத் பின் அர்ரரபீஃ (ரலி) அவர்கள் தனது ஐந்து வயதில் நடந்த ஒரு நிகழ்வை நினைவில் வைத்திருப்பது என்பது, அவர் பார்த்த அல்லது கேட்ட அனைத்தையும் நினைவில் வைத்திருப்பார் என்பதற்கு ஆதாரமாகாது.

எனவே, சிறுவன் தான் காண்பவற்றையும் கேட்பவற்றையும் பிரித்தறியும் ஆற்றல் பெற்றிருக்க வேண்டும்; பேசுவதைப் புரிந்து பதில் சொல்லத் தெரிந்திருக்க வேண்டும் என்பதே சரியான கருத்தாகும்.

மூஸா பின் ஹாரூன் அல்ஹம்மால் (ரஹ்) அவர்களின் கூற்றும் இதை நோக்கியே அமைகிறது. “ஒரு சிறுவன் எப்போது ஹதீஸைச் செவியேற்கலாம்?” என்று அவரிடம் கேட்கப்பட்ட போது, “அவன் பசுவிற்கும் கழுதைக்கும் இடையில் வித்தியாசம் காணும் போது” என்று பதிலளித்தார்.

இமாம் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் ஹன்பல் அவர்களிடமும் இது குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “அவன் புரிந்து கொள்ளும் மற்றும் மனனம் செய்யும் திறனை அடையும் போது” என்று பதிலளித்தார்கள். அப்போது அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
அவர்களிடம், ஒரு மனிதர் (இப்னு மயீன்), “சிறுவனுக்கு பதினைந்து வயதாகும் வரை அவன் ஹதீஸை செவியேற்பது கூடாது” என்று கூறுகிறாரே என்று சொல்லப்பட்டது. இதை மறுத்த இமாம் அவர்கள், “இது மிகவும் மோசமான கூற்று! அப்படியானால் ஸுஃப்யான் அஸ்ஸவ்ரீ, வகீஃ போன்ற இமாம்களின் விஷயத்தில் அவர் என்ன சொல்லப் போகிறார்?” (ஏனெனில் இவர்கள் மிகச் சிறிய வயதிலேயே ஹதீஸைக் கற்கத் தொடங்கிவிட்டனர்) எனக் கூறினார்கள்.

(நூல்கள்: அல்பாயிஸுல் ஹஸீஸ்-இக்திஸாரு உலூமில் ஹதீஸின் விரிவுரை-1/240)


التاريخ الكبير لابن أبي خيثمة – السفر الثاني – ط الفاروق (2/ 910):
3866- أَخْبَرَنَا مُصْعَب بن عَبْد الله؛ قَالَ: ‌عُمَر ‌بْنُ ‌عَلِيٍّ ‌ورُقَيَّة ‌بنت ‌عَلِيٍّ ‌تَوْأم أُمُّهُمَا: الصَّبَهْاء، يُقال: اسْمُهَا أُمُّ حَبِيْب بِنْتُ رَبِيْعَة مِنْ بَنِي تَغْلِبَ، مِن سَبْيِ خَالِد بْنِ الْوَلِيْد، وَكَانَ عُمَر بْنُ عَلِيٍّ آخِرَ وَلَد عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ رحمه الله. وُلِدَ عُمَر بْنُ عَلِيٍّ ورُقَيَّة في بَطْنٍ واحدٍ، هما تَوْأَمٌ

உமர் பின் அலீ மற்றும் ருகைய்யா பின்த் அலீ ஆகிய இருவரும் இரட்டையர்கள் (Twins) ஆவர். இவர்களுடைய தாயார் ‘அஸ்ஸஹ்பா’ என்பவராவார். இவரது பெயர் ‘உம்மு ஹபீப் பின்த் ரபீஆ’ என்று சொல்லப்படுகிறது. இவர் ‘பனூ தஃக்லிப்’ கோத்திரத்தைச் சேர்ந்தவர்; காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் (யமாமா போரின் போது) சிறைபிடித்து வந்தவர்களில் ஒருவராவார். அலீ பின் அபூதாலிப் (ரலி) அவர்களின் பிள்ளைகளில் கடைசியாகப் பிறந்தவர் உமர் பின் அலீ ஆவார். உமர் பின் அலீயும் ருகைய்யாவும் ஒரே பிரசவத்தில் பிறந்த இரட்டையர்கள் ஆவர்.

(நூல்கள்: தாரீகுல் கபீர்-இப்னு அபூகைஸமா-2/910, தஹ்தீபுல் கமால்-21/469)


تاريخ الإسلام – ط التوفيقية (6/ 86):
‌وَقِيلَ: ‌إِنَّ ‌عُمَرَ ‌بْنَ ‌عَلِيٍّ ‌قُتِلَ ‌مَعَ ‌مُصْعَبِ ‌بْنِ ‌الزُّبَيْرِ ‌أَيَّامَ ‌الْمُخْتَارِ.
قُلْتُ: فَلَعَلَّهُ أَخُوهُ وَسَمِيُّهُ، وَإِنَّمَا الْمَعْرُوفُ أَنَّ الَّذِي قُتِلَ مَعَ مُصْعَبٍ عُبَيْدَ اللَّهِ بْنَ عَلِيٍّ، وَذَلِكَ فِي سَنَةِ اثْنَتَيْنِ وَسَبْعِينَ.


الثقات لابن حبان (5/ 146):
عمر بن عَليّ بْن أبي طَالب يروي عَن أَبِيه روى عَنهُ ابْنه ‌مُحَمَّد ‌بْن ‌عمر ‌بن ‌عَليّ ‌قتل ‌سنة ‌سبع ‌وَسِتِّينَ أمه أم النُّجُوم بنت جُنْدُب بْن عَمْرو


 



கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.