தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

raavi-32332-அம்ர் பின் ஷுஐப் பின் முஹம்மத்

A- A+

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

அம்ர் பின் ஷுஐப் பின் முஹம்மத் – عمرو بن شعيب بن محمد بن عبد الله بن عمرو

இறப்பு: ஹி-118

தரம்: இவரைப் பற்றி சிலர் விமர்சனம் செய்திருந்தாலும் இந்த தவறுக்கு காரணம் இவரிடமிருந்து அறிவித்த பலவீனமானவர்கள் தான். இவர் காரணமல்ல. இவரை ஆரம்பகால மூத்த அறிஞர்கள் பலமானவர் என்று முடிவு செய்துள்ளனர்.


இயற்பெயர்: அம்ர்

தந்தை பெயர்: ஷுஐப்

வமிசப் பெயர்: குறஷீ, ஸஹ்மீ, மதனீ.

ஊர் பெயர்: மக்கா, மதீனா, தாயிஃப்

பிறப்பு: ஹிஜ்ரி-.

இறப்பு: ஹிஜ்ரி-118

கால கட்டம்: 5.


عَمْرُو بْنُ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ،

அம்ர் பின் ஷுஐப் பின் முஹம்மத் பின் அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் —> (இவரின் தந்தை) ஷுஐப் பின் முஹம்மத் —> (ஷுஐப் அவர்களின் பாட்டனார்) அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) என்ற அறிவிப்பாளர் தொடர் பற்றி:

  • இந்த அறிவிப்பாளர்தொடரை யஹ்யா பின் ஸயீத்,பிறப்பு ஹிஜ்ரி 120
    இறப்பு ஹிஜ்ரி 168 / 198
    ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
    அபூதாவூத்,பிறப்பு ஹிஜ்ரி 202
    இறப்பு ஹிஜ்ரி 275
    வயது: 73
    இப்னு ஹஸ்ம் பிறப்பு ஹிஜ்ரி 384
    இறப்பு ஹிஜ்ரி 456
    வயது: 72
    போன்றோர் முர்ஸல் என்றும் அல்லது முன்கதிஃ என்றும் விமர்சித்துள்ளனர். இதற்கு காரணம் இவரின் பாட்டனார் முஹம்மத் பின் அப்துல்லாஹ் என்பதால் ஆகும். இவர் தாபிஈ ஆவார். (என்றாலும் வேறு சிலர் இதில் கூறப்படும் பாட்டனார் என்பது ஷுஐப் அவர்களின் பாட்டனார் என்றும், 10 க்கும் மேற்பட்ட செய்திகளில் பாட்டனார் என்ற வார்த்தைக்குப் பின்பு அப்துல்லாஹ் பின் அம்ர் என்று தெளிவாக வந்துள்ளது என்றும் விளக்கம் கூறியுள்ளனர்.)
  • இப்னு ஹஸ்ம் பிறப்பு ஹிஜ்ரி 384
    இறப்பு ஹிஜ்ரி 456
    வயது: 72
    அவர்கள், அம்ர் பின் ஷுஐப் அறிவிப்பது (அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடமிருந்து கேட்டு எழுதிவைத்திருந்த) ஒரு ஏட்டிலிருந்து-நூலிலிருந்து என்பதால் இது சரியானதல்ல என்று கூறியுள்ளார். (இது போன்று (விஜாதா எனும் முறையில்) கிடைக்கும் நூலின் செய்திகளை அதற்குரிய நிபந்தனைகளின்படி இருந்தால் ஏற்கலாம்)
  • இமாம் அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    இப்னுல் மதீனீ,பிறப்பு ஹிஜ்ரி 161
    இறப்பு ஹிஜ்ரி 234
    வயது: 73
    அல்ஹுமைதீ, இஸ்ஹாக் பின் ராஹவைஹி போன்றோர் இந்த அறிவிப்பாளர்தொடரை ஆதாரமாக ஏற்றுள்ளதை நான் பார்த்துள்ளேன் என புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    இமாம் கூறியதாக திர்மிதீ இமாம் குறிப்பிட்டுள்ளார்.
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் மற்ற பலமான செய்திக்கு இந்த அறிவிப்பாளர்தொடர் முரண்படாதபோது ஏற்றுக்கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.
  • தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    அவர்கள், இந்த அறிவிப்பாளர்தொடரை பற்றிய விமர்சனங்களையும், சிலர் சரியானது என்றும் சிலர் பலவீனமானது என்றும் கூறுவர் என்ற விவரங்களையும் கூறிய பின் இந்த அறிவிப்பாளர்தொடரை சரியான ஹதீஸ்களில் உயர்ந்த தரம் என்று நாம் கூறவில்லை; இது ஹஸன் தரம் என்று குறிப்பிட்டுள்ளார்.

(நூல்கள்: அல்முஹல்லா-4/38, இலலுத் திர்_மிதீ-108/181, தஹ்தீபுத் தஹ்தீப்-8/48, மீஸானுல் இஃதிதால்-268, தாரீகுல் கபீர்…



 



கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.