தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

raavi-36907-முஹம்மத் பின் இஸ்ஹாக் பின் யஸார்

A- A+

முஹம்மது பின் இஸ்ஹாக் பின் யஸார்

 


 

..


முஹம்மத் பின் இஸ்ஹாக் பின் யஸார் அவர்கள் பற்றி சிலர் பாராட்டியுள்ளனர். சிலர் குறை கூறியுள்ளனர்.

பாராட்டியவர்கள் பற்றிய விவரம்:

1 . ஷுஅபா,பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
ஆகியோர் இவர் அமீருல் முஃமினீன ஃபில்ஹதீஸ்-ஹதீஸ்கலையில் முஃமின்களின் தலைவர் என்று கூறியுள்ளனர்.

2 . அபூமுஆவியா அள்ளரீர் பிறப்பு ஹிஜ்ரி 113
இறப்பு ஹிஜ்ரி 194
வயது: 81
அவர்கள், இவர் மக்களில் நல்ல நினைவாற்றல் உள்ளவராக இருந்தார் என்று கூறியுள்ளார்.

3 . ஸுஃப்யான் பின் உயைனா பிறப்பு ஹிஜ்ரி 107
இறப்பு ஹிஜ்ரி 198
வயது: 91
அவர்கள், இவரின் சபையில்  70 வருடத்திற்குமேல் அமர்ந்து ஹதீஸ்களை கேட்டுள்ளேன். மதீனாவாசிகள் யாரும் இவரை பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என சந்தேகிக்கவில்லை. இவரைப் பற்றி விமர்சிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

4 . இப்னு நுமைர் பிறப்பு ஹிஜ்ரி 115
இறப்பு ஹிஜ்ரி 199
வயது: 84
அவர்கள், இவர் அறியப்பட்டவர்களிடமிருந்து அறிவிக்கும் செய்திகள் ஹஸன் தர செய்திகளாகும். அறியப்படாதவர்களிடமிருந்து அறிவிக்கும் செய்திகள் பலவீனமானவைகளாகும். இவர் அறியப்படாதவர்களிடமிருந்து தவறான செய்திகளை அறிவித்திருப்பதே இவர் பற்றிய விமர்சனம் ஆகும் என்று கூறியுள்ளார்.

5 . இப்னுல் மதீனீ பிறப்பு ஹிஜ்ரி 161
இறப்பு ஹிஜ்ரி 234
வயது: 73
அவர்கள், இவரின் சில ஹதீஸ்களை சரியானவை என்றும், சிலவை ஹஸன் தர செய்திகள் என்றும் கூறியுள்ளார்…

6 . இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 80
அவர்கள், இவர் பலமானவர் என்று கூறியுள்ளார்.

7 . அபூஸுர்ஆ அர்ராஸீ,பிறப்பு ஹிஜ்ரி 200
இறப்பு ஹிஜ்ரி 264
வயது: 64
கதீப் பக்தாதீ, தஹபீ,பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
ஆகியோர் இவர் ஸதூக்-நம்பகமானவர் என்ற தரத்தில் அதாவது நடுத்தரமானவர்,நடுத்தரமானவர் - حسن الحديث சுமாரானவர் என்றக் கருத்தில் கூறியுள்ளனர்.

இவரைப் பற்றிய விமர்சனம்:

1 . கத்ரிய்யா கொள்கையுடைவர்.

2 . ஷீஆ அலீ (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் அவர்களது ஆட்சிக்கு எதிராக காரிஜியாக்கள் புரட்சி செய்த போது, அலீ அவர்களது ஆட்சிக்கு ஆதரவாக ஒரு கூட்டம் செயல்படத் தொடங்கியது. இவர்களே ஷியாக்கள் ஆவர். ஷியா என்ற சொல் (شيعة علي ஷீஅது அலீ) “அலீயை பின்பற்றுவோர்” என்று பொருள்படும் அரபு மொழிச் சொல்லில் இருந்து தோன்றியது. காலப் போக்கில், அலீ அவர்களையும் அவர்களது குடும்பத்தார்களையும் கடவுள் நிலைக்குக் கொண்டு சென்று விட்டனர். முகம்மது நபி, அலீ, அலீயின் மனைவி ஃபாத்திமா, மகன்கள் ஹஸன், ஹுசைன் ஆகிய ஐவருக்கும் தெய்வத் தன்மை இருப்பதாக ஷியாக்கள் நம்புகின்றனர். இவர்கள் பல பிரிவினராக உள்ளனர். பல விசயங்களில் அஹ்லுஸ் ஸுன்னாவிற்கு-குர்ஆன் ஹதீஸை பின்பற்றுவோருக்கு மாறுபடுகின்றனர். அலீ அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய நபித்துவம் அவர் சிறு வயதினராக இருந்ததால் முகம்மது நபி அவர்களிடம் வழங்கப்பட்டது என்பதும் ஷியாக்களின் நம்பிக்கையாகும்.கொள்கையுடைவர்.

பித்அத் கொள்கையுடையவர்கள், நினைவாற்றலிலும், நம்பகத்தன்மையிலும் சரியானவர்களாக இருந்து தனது பித்அத்தை மக்களிடம் பரப்பாதவர்களாகவும், தனது பித்அத்தை நியாயபடுத்தும் செய்திகளை அறிவிக்காதவர்களாகவும் இருந்தால் அவர்களின் அறிவிப்புகளை ஏற்கலாம் என்பதின்படி இவரிடம் குறையில்லை.

3 . இமாம் அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
ஆகியோர் இவர் தத்லீஸ்  செய்பவர் என்று கூறியுள்ளனர்.

மேலும் தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள், ஹதீஸ்கலை இமாம்கள் இவர் விசயத்தில் கருத்துவேறுபாடு கொண்டுள்ளனர். இவரை (ஹதீஸில்) ஆதாரமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. மற்றவர்கள் இவர் போன்று அறிவித்துள்ளனரா? என்று பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதன்படி இவர் தத்லீஸ் செய்திருந்தால் அதை ஏற்கக் கூடாது. தனது ஆசிரியரிடமிருந்து நேரடியாக கேட்டதாக அறிவித்தால் ஏற்கலாம்.

4 . சில செய்திகளை தனித்து அறிவித்துள்ளார்.

5 . சில செய்திகளை பலமானவர்களுக்கு மாற்றமாக அறிவித்துள்ளார்.

இவர் சில செய்திகளை தனித்து அறிவித்திருப்பதற்கும், பலமானவர்களுக்கு மாற்றமாக அறிவித்திருப்பதற்கும் காரணம் எல்லோரிடமிருந்தும் இவர் ஹதீஸை கேட்டுக் கொள்வார் என்பதாகும். எனவே தான் இப்னு நுமைர் பிறப்பு ஹிஜ்ரி 115
இறப்பு ஹிஜ்ரி 199
வயது: 84
அவர்கள் இவர் அறியப்பட்டவர்களிடமிருந்து அறிவிக்கும் செய்திகள் ஹஸன் தர செய்திகளாகும். அறியப்படாதவர்களிடமிருந்து அறிவிக்கும் செய்திகள் பலவீனமானவைகளாகும். இவர் அறியப்படாதவர்களிடமிருந்து தவறான செய்திகளை அறிவித்திருப்பதே இவர் பற்றிய விமர்சனம் ஆகும் என்று கூறியுள்ளார். இந்தக் கருத்தின்படியே இவரின் செய்திகளை சிலர் விமர்சித்துள்ளனர்.

எனவே இந்தக் குறையுள்ள செய்திகளில் மட்டும் இவரின் செய்திகளை ஏற்கக்கூடாது.

6 . இஸ்ராயீலீ.. அறிவிப்புகளை அறிவித்துள்ளார்.

இஸ்ராயீலீ அறிவிப்புகளை அறிவிப்பது தவறல்ல என்று சரியான ஹதீஸ்கள் உள்ளன என்பதால் இது விமர்சனம் அல்ல என்று தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்கள் கூறியுள்ளார். (குர்ஆனுக்கும், சரியான ஹதீஸ்களுக்கும் மாற்றமாக உள்ள அறிவிப்புகளை ஏற்கக்கூடாது)

7 . ஒரு ஹதீஸை பல ஆசிரியர்களிடமிருந்து அறிவிக்கும் போது ஆசிரியர்களின் வார்த்தைகளை பிரித்து அறிவிக்காமல் ஒரே மாதிரி வாக்கிய அமைப்பில் அறிவிப்பார்.

இந்த விமர்சனம் குறிப்பிட்ட அந்த செய்திகளில் மட்டுமே செல்லுபடியாகும்.

8 . பொய்யர்.

ஹிஷாம் பின் உர்வா பிறப்பு ஹிஜ்ரி 61
இறப்பு ஹிஜ்ரி 146
வயது: 85
அவர்கள் தான் இவரை பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்று கூறினார். இவரின் கருத்தையே இவருக்கு பின் வந்த யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
கூறியுள்ளார்.

ஹிஷாம் பின் உர்வா பிறப்பு ஹிஜ்ரி 61
இறப்பு ஹிஜ்ரி 146
வயது: 85
அவர்கள், முஹம்மது பின் இஸ்ஹாகை பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்று கூறியதற்கு காரணம், எனது மனைவி ஃபாத்திமா பின்த் முன்திரிடமிருந்து ஹதீஸைக் கேட்டதாக முஹம்மது பின் இஸ்ஹாக் அறிவிக்கிறார். அல்லாஹ்வின் மீதாணையாக! இவர் என் மனைவியை பார்க்கவில்லை; எனவே இவர் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்று கூறியுள்ளார்.

(ஆனால் இந்தக் கருத்தை தன் மனைவி கூறியதாக ஹிஷாம் கூறவில்லை. எனவே இதை வைத்து இவரை பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். எனக் கூறமுடியாது)

1 . எத்தனையோ அறிஞர்கள், பெண்களை பார்க்காமலே திரைக்குப் பின்னிருந்து அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்களை கேட்டுள்ளனர். அந்த அடிப்படையில் இவர் ஹதீஸைக் கேட்டிருக்க வாய்ப்புள்ளது.

2 . ஹிஷாம், ஃபாத்திமா அவர்களை திருமணம் முடிப்பதற்கு முன்பு ஹதீஸ்களை கேட்டிருக்க வாய்ப்புள்ளது.

3 . ஃபாத்திமா அவர்கள், இவருக்கு பால்குடி உறவின் அடிப்படையில் தாயின் சகோதரியாகவோ, அல்லது மாமியாகவோ இருந்து அவரிடம் ஹதீஸை கேட்டிருக்க வாய்ப்புள்ளது.

4 . மேலும் ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
அவர்கள் முஹம்மது பின் இஸ்ஹாக், ஃபாத்திமா அவர்களிடம் ஹதீஸைக் கேட்டுள்ளார் என்று கூறியுள்ளார்.

எனவே தான் ஹிஷாம் இவரை பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்று கூறியது சரியானதல்ல என்று தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
போன்ற அறிஞர்கள் கூறியுள்ளனர்.

மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
இமாம் அவர்களும் இவரை பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்று கூறியுள்ளார். ஆனால் அதற்கு காரணத்தைக் கூறவில்லை என்பதால் இதை ஏற்கமுடியாது.

(நூல்கள்: தாரீகு பஃக்தாத்-2/7, தாரீகுல் இஸ்லாம்-4/193, ஸியரு அஃலாமின் நுபலா-7/33, தஹ்தீபுத் தஹ்தீப்-3/504, தக்ரீபுத் தஹ்தீப்-1/825)