بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
முஹாஜிர் பின் மக்லத்-அபூமக்லத், அபூகாலித் – مهاجر بن مخلد – أبو مخلد ، أبو خالد
இறப்பு: 131 – 140
தரம்:
இயற்பெயர்: முஹாஜிர்
தந்தை பெயர்: மக்லத்
பட்டப் பெயர், குறிப்புப் பெயர்: அபூமக்லத், அபூகாலித்
ஊர் பெயர்: பஸரா
பிறப்பு: ஹிஜ்ரி- …
இறப்பு: ஹிஜ்ரி-
கால கட்டம்: 6.
الجرح والتعديل – ابن أبي حاتم (8/ 262):
نا عبد الرحمن قال ذكره أبي عن إسحاق بن منصور عن يحيى بن معين انه قال: مهاجر أبو مخلد مولى البكرات صالح.
الثقات لابن حبان (7/ 486):
وَهُوَ الَّذِي يَقُول عَوْف عَنْ مهَاجر أبي خَالِد إِنَّمَا هُوَ مهَاجر بْن مخلد
تاريخ أسماء الثقات (ص236):
1452 – وَقَالَ يحيى مهَاجر أَبُو خَالِد مولى البكرات صَالح
تهذيب التهذيب (4/ 165):
وقال الدوري عن ابن معين: عوف يروي عن أبي خالد، وهو أبو مخلد الذي يروي عنه حماد بن زيد، وعبد الوهاب الثقفي.
معرفة السنن والآثار (2/ 109):
2000 – قَالَ الشَّافِعِيُّ فِي رِوَايَةِ حَرْمَلَةَ: وَإِنَّمَا أَخَذْنَا فِي التَّوْقِيتِ بِحَدِيثِ الْمُهَاجِرِ ، وَكَانَ إِسْنَادًا صَحِيحًا ،
العلل الكبير للترمذي = ترتيب علل الترمذي الكبير (ص54):
66 – وَسَأَلْتُ مُحَمَّدًا فَقُلْتُ: أَيُّ الْحَدِيثِ عِنْدَكَ أَصَحُّ فِي التَّوْقِيتِ فِي الْمَسْحِ عَلَى الْخُفَّيْنِ؟ قَالَ: حَدِيثُ صَفْوَانَ بْنِ عَسَّالٍ ،
67 – وَحَدِيثُ أَبِي بَكْرَةَ حَسَنٌ.
இவரிடமிருந்து அறிவிக்கும் அவ்ஃப் பின் அபூஜமீலா என்பவர் மட்டுமே இவரின் பெயரை முஹாஜிர்-அபூகாலித் என்று அறிவித்துள்ளார்.
இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.அவர்கள், அவ்ஃப் அவர்கள் அபூகாலித் என்று குறிப்பிட்டவரின் புனைப்பெயர் ஹம்மாத் பின் ஸைத், அப்துல்வஹ்ஹாப் ஸகஃபீ ஆகியோர் அறிவிக்கும் அபூமக்லத் ஆவார் என்றும், இவர் مولى البكرات – பகராத் அடிமை என்றும் கூறியுள்ளார். (இவர் அபூபக்ரா (ரலி) மற்றும் அவரின் குடும்பத்தாரின் அடிமையாக இருந்தார் என்பதால் இவ்வாறு கூறப்படுகிறது)
இதே தகவலை குறிப்பிட்ட இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.இவரின் பெயர் முஹாஜிர் பின் மக்லத் என்று கூறியுள்ளார்.
(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-8/262, அஸ்ஸிகாத்-7/486, தாரீகு அஸ்மாஇஸ் ஸிகாத்-1452, தஹ்தீபுத் தஹ்தீப்-4/165)
இவரைப் பற்றி பாராட்டியவர்கள்:
- பயணி காலுறைக்கு மூன்று நாட்கள் மஸஹ் செய்யலாம் என்ற கருத்தில் இவர் அறிவித்த செய்தியை ஷாஃபிஈ இமாம் சரியானது என்று கூறி ஆதாரமாக ஏற்றுள்ளார்.
- இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 80
இமாம், இவர் பலமானவர் என்று கூறியுள்ளார். - இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.அவர்கள், இவர் ஸாலிஹ்-சுமாரானவர் என்ற கருத்தில் கூறியுள்ளார். - புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள், இவர் அபூபக்ரா (ரலி) வழியாக அறிவித்த “காலுறைக்கு மஸ்ஹ் செய்வது பற்றிய செய்தியை” ஹஸன் தரம் என்று கூறியதாக திர்மிதீ இமாம் குறிப்பிட்டுள்ளார். - இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.அவர்கள், இவரை பலமானவர்களின் பட்டியலில் கூறியுள்ளார். - ஸாஜீ அவர்கள், இவர் ஸதூக்-நடுத்தரமானவர். அறியப்பட்டவர். இவர் அறியப்படாதவர் என்று கூறியோரின் கருத்து ஒரு பொருட்டே அல்ல என்று கூறியுள்ளார்.
- இப்னுஸ் ஸலாஹ் பிறப்பு ஹிஜ்ரி 577
இறப்பு ஹிஜ்ரி 643
வயது: 66
அவர்களும் இவர் ஸதூக்-நடுத்தரமானவர் நடுத்தரமானவர் - حسن الحديث என்ற கருத்தில் கூறியுள்ளார்.
இவரைப் பற்றி விமர்சித்தவர்கள்:
- உஹைப் பின் காலித் அவர்கள், இவர் மனனமிடவில்லை … என்று கூறியுள்ளார்.
- அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள், இவர் அந்தளவுக்கு பலமானவர் அல்ல. சிறிது பலவீனமானவர். இவரின் செய்திகளை எழுதிக்கொள்ளலாம் என்று கூறியுள்ளார். - இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள், இவரை மக்பூல் தரத்தில் (அதாவது இவர் தனித்து அறிவித்தால் பலவீனம். இவரைப் போன்று மற்றவர்கள் அறிவித்தால்-முதாபஅத் இருந்தால்-ஏற்கலாம் என்ற கருத்தில்) கூறியுள்ளார்.
(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-8/262, அஸ்ஸிகாத்-7/486, அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-8/220, அல்இலலுல் கபீர்-67மஃரிஃபதுஸ் ஸுனன் வல்ஆஸார்-2000, தஹ்தீபுல் கமால்-28/579, தஹ்தீபுத் தஹ்தீப்-4/164, 165, தக்ரீபுத் தஹ்தீப்-1/975)
இவரைப் பற்றி விமர்சித்தவர்கள் ஆதாரத்தைக் குறிப்பிடவில்லை.
…
சமீப விமர்சனங்கள்