தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

raavi-48695-அபுல்அஸ்ஹர் அல்அன்மாரீ (ரலி)

A- A+

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

அபுல்அஸ்ஹர் அல்அன்மாரீ (ரலி) –  أبو الأزهر- الأنماري ،النميري ،الشامي

(அபூஸுஹைர்-யஹ்யா பின் நுஃபைர்-நுஃகைர், நுகைர்)

இறப்பு: ஹி-

தரம்: நபித்தோழர்.


இயற்பெயர்: யஹ்யா

தந்தை பெயர்: நுஃபைர்-நுஃகைர்…

வமிசம்: அல்அன்மாரீ அல்லது அன்னுமைரீ

புனைப்பெயர்: அபுல்அஸ்ஹர் அல்லது அபூஸுஹைர்,

ஊர் பெயர்: ஷாம்.

பிறப்பு: ஹிஜ்ரி-

இறப்பு: ஹிஜ்ரி-

கால கட்டம்: 1.


அபுல்அஸ்ஹர்-அபூஸுஹைர் அல்அன்மாரீ (ரலி)

இந்த நபித்தோழர் அபூஸுஹைர் என்றும், அபுல்அஸ்ஹர் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் அல்அன்மாரீ அல்லது அன்னுமைரீ குலத்தைச் சேர்ந்தவர்.

இவர் ஷாம் தேசத்தில் வசித்து வந்த ஒரு ஸஹாபி ஆவார். அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
நூலில் உள்ளபடி, இவர் நபி (ஸல்) அவர்களிடமிருந்து ஹதீஸ்களை அறிவித்துள்ளார். இவரிடமிருந்து பின்வருபவர்கள் ஹதீஸ்களை அறிவித்துள்ளனர்:

1 . காலித் பின் மஃதான் (அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
நூல்).

2 . ஷுரைஹ் பின் உபைத்.

3 . கஸீர் பின் முர்ரா.


  • இவருடைய இயற்பெயர் அறியப்படவில்லை என்று அபூஸுர்ஆ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
  • இவர் மூன்று ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
  • இவருடைய பெயர் யஹ்யா பின் நுஃபைர் என்று ஒருவர் குறிப்பிட்டதாக அபூஹாதிமிடம் சொல்லப்பட்டது. ஆனால் அவர், “இவரது புனைப்பெயரே (அபூஸுஹைர்) பிரபலமில்லாத போது, இவரது பெயர் எப்படி அறியப்படும்?” எனக் கூறி அந்தப் பெயரை அவர் அறியவில்லை என்று சொல்லிவிட்டார்.
  • இப்னு கானிஃ அவர்கள், “அபூஸுஹைர் அன்னுமைரீ அவர்களின் இயற்பெயர் யஹ்யா பின் நுஃபைர் ஆகும், இவர் ஹிம்ஸ் நகரத்தைச் சேர்ந்தவர்” என்று கூறியுள்ளார்.
  • இப்னு அபூஆஸிம்அவர்கள், “இவரது பெயர் ஹாதிம் என்று கூறியுள்ளார். இதையே தப்ரானீ அவர்கள் ‘அல்முஃஜமுல் கபீர்’ நூலில் உறுதிப்படுத்தியுள்ளார்.
  • அஸ்தீ அவர்கள் தனது ‘அல்மக்ஸூன்’ நூலில், இவருடைய பெயர் மஃபத் என்றும், இவரிடமிருந்து ஷுரைஹ் மட்டுமே அறிவித்துள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
  • முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 57
    அவர்கள் ‘அல்குனா’ நூலில், இவரை “அபூஸுஹைர் அன்னுமைரீ அல்லது அல்அன்மாரீ என்றும், இவர் நபித்தோழர்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் ‘அல்இஸாபா’ நூலில், “அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
    இறப்பு ஹிஜ்ரி 275
    வயது: 73
    அவர்கள் இவரது ஹதீஸை தனது ஸுனன் நூலில் பதிவு செய்துள்ளார். இந்த ஷாம் நாட்டு அறிவிப்பாளர்தொடர் சரியானதாகும். இவரிடமிருந்து கஸீர் பின் முர்ரா, ஷுரைஹ் பின் உபைத் ஆகியோர் அறிவித்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

தப்ரானீ, இப்னு அப்துல்பர், இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
ஆகியோர் அபூஸுஹைர் அல்அன்மாரீ, அபூஸுஹைர் அன்னுமைரீ என்பவர்கள் இருவர் என்று கருதுகின்றனர்.

இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள் அன்னுமைரீ அவர்களைப் பற்றித் தனியாகக் குறிப்பிடும்போது, வேறு ஒரு ஹதீஸைக் குறிப்பிட்டு, இதை அல்பஃகவி மற்றும் தப்ரானீ (முஸ்னதுஷ் ஷாமிய்யீன்) ஆகியோர் அறிவித்துள்ளனர் என்று கூறியுள்ளார். இவரைப் பற்றிய செய்தியில் பஃகவீ அவர்கள் இவர் ஷாம் நாட்டைச் சேர்ந்தவர் என்றே குறிப்பிட்டுள்ளார்.


இப்னு அபூஆஸிம், இப்னு மன்தஹ், அபூநுஐம், இப்னுல் அஸீர் போன்றவர்கள் இவர்கள் இருவரும் ஒருவரே என்கின்றனர்.

இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள் ‘தக்ரீப்’ நூலில் இவர்கள் இருவரும் ஒருவராக இருப்பதற்கே வாய்ப்பு அதிகம் எனக் குறிப்பிட்டுள்ளார். பெரும்பாலான வரலாற்று ஆதாரங்களின்படி இவர்கள் இருவரும் ஒருவரே என்பதே சரியான கருத்தாகும். இவர் இறந்த வருடம் குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை.

ஆதார நூல்கள்:

1 . அல்குனா வல்அஸ்மா-முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
இமாம்-1/40.

2 . அல்ஆஹாத் வல்மஸானி-இப்னு அபீ ஆஸிம்-3/118.

3 . அல்மக்ஸூன்-அல்அஸ்தி-248.

4 . அல்ஜர்ஹ் வத்தஃதீல்-இப்னு அபீ ஹாதிம்-9/374.

5 . முஃஜமுஸ் ஸஹாபா-இப்னு கானிக்-3/239.

6 . மஃரிஃபதுஸ் ஸஹாபா-இப்னு மன்தஹ்-2/869.

7 . மஃரிஃபதுஸ் ஸஹாபா-அபூநுஐம்-5/2898.

8 . அல்இஸ்தீஆப்-இப்னு அப்துல் பர்-708–709.

9 . தஹ்தீபுல் கமால்-அல்மிஸ்ஸி-33/23.

10 . அஸதுல் காபா-இப்னுல் அஸீர்-6/126.

11 . தவ்ளீஹுல் முஷ்தபிஹ்-இப்னு நாஸிருத்தீன்-9/113.

12 . தஹ்தீபுத் தஹ்தீப்-இப்னு ஹஜர்-12/7.

13 . அல்இஸாபா-இப்னு ஹஜர்-7/9, 7/131.


المؤتلف والمختلف – الدارقطني (1/ 264):
أبو زُهَير النُّمَيْري ‌يَحْيى ‌بن ‌نُغَيْر بالغين، رَوَى عنه شُرَيْح بن عُبَيْد وأبو المُصَبِّح.


الإكمال لابن ماكولا (1/ 338):
وأما نغير أوّله نون مضمومة وبعدها غين معجمة مفتوحة فهو أبو زهير النميرى واسمه يحيى بن نغير روى عنه شريح بن عبيد وابو المصبح – قاله صاحب تاريخ الحمصيين.


توضيح المشتبه (1/ 571):
أَبُو زُهَيْر النميري يحيى بن نغير روى عَنهُ شُرَيْح بن عبيد وَأَبُو المصبح المقرئي قلت: وَذكره المُصَنّف فِي حرف النُّون بِالْقَافِ بدل الْغَيْن الْمُعْجَمَة وَلم يشر إِلَى الْخلاف فِي ذَلِك هُنَا وَلَا فِي حرف النُّون وَقد ذكرت الْخلاف فِيهِ فِي حرف النُّون


تاج العروس من جواهر القاموس (14/ 264):
أَبُو زُهَيْر ‌يَحْيَى ‌بنُ ‌نُغَيْر النُّمَيْريّ، كزُبَيْر، وَيُقَال: الأنْماريّ وَيُقَال: التَّميميّ، وَيُقَال: ابْن نُفَيْر، بالفاءِ، كَذَا فِي نسختنا. وَفِي التَّكْملَة بِالْقَافِ، وَمثله فِي التَّبْصير، صَحابيٌّ، روى عنهُ الحِمْصِيُّون.

….


تخريج أحاديث وآثار حياة الحيوان للدميري من التاء إلى الجيم (ص455 بترقيم الشاملة آليا):
أبو زهير، ويقال: أبو الأزهر، الأنماري، ويقال: النُمَيري.
صَحَابيُّ رضي الله عنه كان يسكن الشام، روى عن النبي صلى الله عليه وسلم كما عند أبي داود –
وروى عنه:
1 – خالد بن معدان – عند أبي داود أيضاً -،
2 – وشُريح بن عبيد،
3 – وكثير بن مرة.

وذكر أبو زرعة أنه لايُسمى، وقد روى ثلاثة أحاديث.
وذُكر لأبي حاتم أن رجلاً سماه: يحيى بن نُفير (1)، فلم يعرفه، وقال: إنه غير معروف بكنيته، فكيف يُعرف اسمه!؟
وقال ابن قانع: أبو زهير النميري: يحيى بن نفير، حمصي.
وقال ابن أبي عاصم: وذكروا أنه اسمه حاتم، وبه جزم الطبراني في «المعجم الكبير» (22/ 296)،
وذكر الأزدي في «المخزون» أن اسمه «معبد» تفرد عنه شريح.

وذكره الإمام مسلم في «الكنى» وقال: أبو زهير النميري أو الأنماري، له صحبة.
وذكره ابن حجر في «الإصابة» وقال: إن أبا داود أخرج حديثه في «السنن» بسند جيد شامي. وذكر ممن روى عنه: كثير بن مرة، وشريح بن عبيد.
وقد فرَّق الطبراني في «الكبير» (22/ 296 – 298)، وابن عبد البر، وابن حجر في «الإصابة» بين أبي زهير الأنماري، وبين أبي زهير النميري، والأخير ترجمه في «الإصابة» أيضاً، وذكر فيه الحديث محل الدراسة، وعزاه إلى البغوي، والطبراني في «مسند الشاميين»، وذكر أن البغوي قال: سكن الشام. وأمَّا ابنُ أبي عاصم، وابن منده، وأبو نعيم، وابن الأثير، وغيرهم، فذكروا أنهما واحد.
وذكر ابن حجر في «التقريب» احتمال أنهما واحد.
والراجح أنهما واحد (1)، كما في سائر مصادر ترجمته، ولم أجد تحديد وفاته.
[«الكنى والأسماء» للإمام مسلم (ص 40)، «الآحاد والمثاني» لابن أبي عاصم (3/ 118)، «المخزون» للأزدي (248)، «الجرح والتعديل» (9/ 374)، «معجم الصحابة» لابن قانع (3/ 239)، «معرفة الصحابة» لابن منده (2/ 869)، «معرفة الصحابة» لأبي نعيم (5/ 2898)، «الاستيعاب» ط. دار الأعلام (ص 708 – 709)، «تهذيب الكمال» (33/ 23)، «أسد الغابة» (6/ 126)، «توضيح المشتبه» لابن ناصر الدين (9/ 113)، «تهذيب التهذيب» (12/ 7)، «الإصابة» (7/ 9)، (7/ 131)]


 



கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.