தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

raavi-8696-அய்யூப் பின் உத்பா

A- A+

  • அய்யூப் பின் உத்பா என்பவர் பற்றி சிலர் இவர் உண்மையாளர் தான் என்றாலும் நினைவாற்றல் சரியில்லாதவர் என்றும்; வேறு சிலர் அதிகம் தவறிழைப்பவர் என்றும்; வேறு சிலர் விடப்பட்டவர் என்றும் விமர்சித்துள்ளனர்.
  • இவர் பஸரா,மதீனாவிலிருந்து 1379.1 km தொலைவில் உள்ள ஊர் பஃக்தாதில் இருக்கும் போது மனனத்திலிருந்து அறிவித்தார். அதனால் அதிகம் தவறாக அறிவித்தார். யமாமாவில் இருக்கும் போது நூலிலிருந்து அறிவித்தார். இவர் யஹ்யா பின் அபூகஸீர் அவர்களிடமிருந்து அறிவிப்பது சரியானது என்று ஸுலைமான் பின் தாவூத் கூறியதாக அபூஸுர்ஆ அவர்கள் கூறியுள்ளார்.
  • இவ்வாறே அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அவர்களும் கூறியுள்ளார்.
  • இவரிடமிருந்து ஈராக் வாசிகள் அறிவிப்பது பலவீனமானவை என்றும் அபூஸுர்ஆ அர்ராஸீ பிறப்பு ஹிஜ்ரி 200
    இறப்பு ஹிஜ்ரி 264
    வயது: 64
    கூறியுள்ளார்…

(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-2/253, அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-2/10, தஹ்தீபுத் தஹ்தீப்-1/206, தக்ரீபுத் தஹ்தீப்-1/160)

அதிகமானோர் இவரை பலவீனமானவர் என்றே கூறியுள்ளனர். எனவே இவரின் செய்திகளை மற்றவர்களின் செய்திகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தே ஏற்கவேண்டும்.