…நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் இருந்தபோது (சரியான) ஆடை இல்லாமல் இருப்பதையும்; வறுமையையும்; குறைந்த பொருள்களே இருப்பதையும் முறையிட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நீங்கள் சந்தோஷமடையுங்கள். உங்களுக்கு குறைந்த பொருள் இருப்பதைவிட அதிக பொருள் இருப்பதையே நான் அதிகம் பயப்படுகிறேன். பாரசீகம் (ஈராக்), ரோம் (ஷாம்), ஹிம்யர் (யமன்) போன்ற நாடுகள் வெற்றி கொள்ளப்படும் வரை இந்த நிலையே உங்களிடம் இருக்கும்.
விரைவில் நீங்கள் மூன்று படையினராக மாறுவீர்கள். ஷாமில் ஒரு படையினராக இருப்பீர்கள். ஈராக்கில் ஒரு படையினராக இருப்பீர்கள். யமனில் ஒரு படையினராக இருப்பீர்கள்.
ஒரு மனிதருக்கு 100 பொற்காசுகள் கொடுத்தாலும் அவர் திருப்தி அடையாமல் கோபப்படும் நிலையும் ஏற்படும்.
அப்போது, இப்னு ஹவாலா (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! ரோமர்களிடம் பெரும் படைகள் இருக்கும் போது (அல்லது பலதலைமுறைகளாக அவர்கள் ஆட்சிசெய்யும்போது) அவர்களை நாங்கள் எப்படி வெற்றி கொள்ள முடியும்? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் மீது ஆணையாக! அதை அல்லாஹ் உங்களால் வெற்றி கொள்ளச் செய்வான். அதற்கு உங்களை பிரதிநிதிகளாக-ஆதிக்கமுள்ளவர்களாக ஆக்குவான்.
(ரோமர்களிலும், மற்றவர்களிலும்) வெண்மை ஆடை அணிந்த; பிடரிகளை மழித்த கூட்டத்தினர், உங்களில் உள்ள தலை மழித்த; கறுத்த இளைஞர்களின் தலைமையில் (அணிவகுத்து) நிற்கும் நிலை ஏற்படும். இளைஞர்கள் கட்டளையிட்டதை அவர்கள் செய்துமுடிப்பார்கள்.
அவர்களில் (ரோமர்கள், மற்றும்) வேறுசிலரின் பார்வையில், நீங்கள் ஒட்டகங்களில் இருக்கும் உண்ணி பூச்சிகளைவிட அற்பமானவர்களாவே கருதப்படுவீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அப்போது அப்துல்லாஹ் பின் ஹவாலா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! (இஸ்லாமிய படைகளை) நான் அடைந்தால் நான் எந்தப் படையில் இருக்கவேண்டும் என்று எனக்கு தேர்வு செய்து கூறுங்கள் என்று கூறினார். அதற்கு, “ஷாம் நாட்டை உனக்கு தேர்வு செய்கிறேன். அதுவே அல்லாஹ்வின் பூமியில் அல்லாஹ் தேர்வு செய்ததாகும். அவனுடைய அடியார்களில் தேர்வுசெய்யப்பட்டோர் அதன் பக்கம் சேர்க்கப்படுவார்கள். யமன்வாசிகளே! ஷாமுடன் இணைந்துக் கொள்ளுங்கள். அல்லாஹ்வின் பூமியில் அல்லாஹ் தேர்வு செய்தது ஷாம் ஆகும். முடியாதவர் யமனிலே தங்கி தன் பணியை செய்யட்டும். திண்ணமாக அல்லாஹ், எனக்காக ஷாமுக்கும், ஷாம்வாசிகளுக்கும் பொறுப்பேற்றுக் கொண்டான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அபூஅல்கமா அவர்கள் (ரஹ்) கூறியதாவது:
அப்துர்ரஹ்மான் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் பின்வருமாறு கூறியதை நான் செவியேற்றேன்:
நபி (ஸல்) அவர்கள் கூறிய இந்த தன்மைகளை ஜுஸ்உ பின் ஸுஹைல் அஸ்ஸுலமிய்யி என்பவரின் விசயத்தில் நபித்தோழர்கள் கண்டார்கள். அவர் அந்தக் காலத்தில் அரபியல்லாதவர்களுக்கு தலைவராக இருந்தார். பள்ளிவாசலுக்கு சென்றால் அவரை அரபியல்லாத மக்கள் சுற்றிநிற்பதை கண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியது இவர் விசயத்திலும், இவர்களின் விசயத்திலும் பொருந்திப்போவதைக் கண்டு நபித்தோழர்கள் ஆச்சரியமடைந்தார்கள்.
மேலும் அபூஅல்கமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இந்தச் செய்தியை கூறும்போது 3 தடவை சத்தியமிட்டுக் கூறினார்கள். இதுபோன்று வேறு செய்தியை கூறும்போது இவ்வாறு சத்தியமிட்டுக் கூறியதாக நாம் அறியவில்லை….
(sharh-mushkil-al-athar-1114: 1114)وَكَمَا حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سِنَانٍ الشَّيْزَرِيُّ، قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ حَمْزَةَ، قَالَ: حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلْقَمَةَ، عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، عَنْ عَبْدِ اللهِ بْنِ حَوَالَةَ، قَالَ:
كُنَّا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَشَكَوْنَا إِلَيْهِ الْفَقْرَ وَالْعُرْيَ وَقِلَّةَ الشَّيْءِ، فَقَالَ: ” أَبْشِرُوا، فَوَاللهِ لَأَنَا وَكَثْرَةُ الشَّيْءِ أَخْوَفُ عَلَيْكُمْ مِنْ قِلَّتِهِ، وَاللهِ لَا يَزَالُ هَذَا الْأَمْرُ فِيكُمْ حَتَّى تُفْتَحَ لَكُمْ أَرْضُ فَارِسَ وَالرُّومِ وَأَرْضُ حِمْيَرَ، وَحَتَّى تَكُونُوا أَجْنَادًا ثَلَاثَةً: جُنْدٌ بِالشَّامِ وَجُنْدٌ بِالْعِرَاقِ وَجُنْدٌ بِالْيَمَنِ، وَحَتَّى يُعْطَى الرَّجُلُ الْمِائَةَ الدِّينَارَ فَيَسْخَطَهَا “، قَالَ ابْنُ حَوَالَةَ: فَقُلْتُ: يَا رَسُولَ اللهِ مَنْ يَسْتَطِيعُ الشَّامَ وَبِهَا الرُّومُ ذَوَاتُ الْقُرُونِ؟ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” وَاللهِ لِيَسْتَخْلِفُنَّكُمُ اللهُ فِيهَا حَتَّى تَظَلَّ الْعِصَابَةُ مِنْهُمُ الْبِيضُ قُمُصُهُمُ الْمُحَلَّقَةُ أَقْفَاؤُهُمْ قِيَامًا عَلَى الرَّجُلِ الْأَسْوَدِ مِنْكُمُ الْمَحْلُوقِ , وَإِنَّ بِهَا الْيَوْمَ رِجَالًا لَأَنْتُمْ أَحْقَرُ فِي أَعْيُنِهِمْ مِنَ الْقِرْدَانِ فِي أَعْجَازِ الْإِبِلِ “، قَالَ ابْنُ حَوَالَةَ: فَقُلْتُ: يَا رَسُولَ اللهِ، خِرْ لِي إِنْ أَدْرَكَنِي ذَلِكَ، قَالَ: ” أَخْتَارُ لَكَ الشَّامَ فَإِنَّهَا صَفْوَةُ اللهِ مِنْ بِلَادِهِ , وَاللهُ يَجْتَبِي صَفْوَتَهُ مِنْ عِبَادِهِ بِأَهْلِ الْإِسْلَامِ، فَعَلَيْكُمْ بِالشَّامِ فَإِنَّ صَفْوَةَ اللهِ مِنَ الْأَرْضِ الشَّامُ فَمَنْ أَبَى فَيَسْقِي بِغُدُرِ الْيَمَنَ فَإِنَّ اللهَ قَدْ تَكَفَّلَ لِي بِالشَّامِ وَأَهْلِهِ
فَسَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ جُبَيْرٍ يَقُولُ: فَعَرَفَ أَصْحَابُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَعْتَ هَذَا الْحَدِيثِ فِي جُزْءِ بْنِ سُهَيْلٍ السُّلَمِيِّ وَكَانَ وَلِيَّ الْأَعَاجِمِ، وَكَانَ أُوَيْدِمًا قَصِيرًا فَكَانُوا يَمُرُّونَ وَتِلْكَ الْأَعَاجِمُ قِيَامٌ لَا يَأْمُرُهُمْ بِالشَّيْءِ إِلَّا فَعَلُوهُ يَتَعَجَّبُونَ مِنْ هَذَا الْحَدِيثِ.
قَالَ أَبُو جَعْفَرٍ: فَكَانَ أَمْرُ أَبِي بَكْرٍ رَضِيَ اللهُ عَنْهُ أُمَرَاءَ الْأَجْنَادِ بِمَا أَمَرَهُمْ بِهِ فِي حَدِيثِهِ الَّذِي رَوَيْنَاهُ لِهَذَا الْمَعْنَى الَّذِي فِي هَذِهِ الْأَحَادِيثِ , وَلِمَا قَدْ حَضَّهُمْ عَلَيْهِ مِنَ الصَّلَاةِ بِإِيلِيَاءَ وَمِنْ شَدِّ الْمَطَايَا إلَيْهَا مِمَّا تَقَدَّمَ ذِكْرُنَا لَهُ فِي كِتَابِنَا هَذَا , وَلِمَا قَدْ رُوِيَ عَنْهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ قَوْلِهِ: ” وَمُنِعَتِ الشَّامُ مُدَّيْهَا وَدِينَارَهَا ” أَيْ أَنَّهَا سَتُمْنَعُ مُدَّيْهَا وَدِينَارَهَا الْوَاجِبَيْنِ فِي أَرْضِهَا وَذَلِكَ لَا يَكُونُ إِلَّا بَعْدَ افْتِتَاحِهِمْ إِيَّاهَا وَغَلَبَتِهِمْ عَلَيْهَا , وَسَنَذْكُرُ هَذَا الْحَدِيثَ فِيمَا بَعْدُ مِنْ كِتَابِنَا هَذَا إِنْ شَاءَ اللهُ. وَاللهَ نَسْأَلُهُ التَّوْفِيقَ
Sharh-Mushkil-Al-Athar-Tamil-.
Sharh-Mushkil-Al-Athar-TamilMisc-.
Sharh-Mushkil-Al-Athar-Shamila-1114.
Sharh-Mushkil-Al-Athar-Alamiah-.
Sharh-Mushkil-Al-Athar-JawamiulKalim-946.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-39403-முஹம்மத் பின் ஸினான் பலமானவர்களுக்கு மாற்றமாக அறிவிப்பவர் என்று தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்கள் விமர்சித்துள்ளார்.
المغني في الضعفاء (2/ 590):
5602 – مُحَمَّد بن سِنَان الشيزري عَن ابْن علية صَاحب مَنَاكِير يتأنى فِيهِ
(நூல்: அல்முஃக்னீ ஃபிள்ளுஅஃபா-5602)
எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
மேலும் பார்க்க: குப்ரா பைஹகீ-18609.
சமீப விமர்சனங்கள்