தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Kubra-Bayhaqi-18609

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் இருந்தபோது (சரியான) ஆடை இல்லாமல் இருப்பதையும்; வறுமையையும்; குறைந்த பொருள்களே இருப்பதையும் முறையிட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நீங்கள் சந்தோஷமடையுங்கள். உங்களுக்கு குறைந்த பொருள் இருப்பதைவிட அதிக பொருள் இருப்பதையே நான் அதிகம் பயப்படுகிறேன். பாரசீகம் (ஈராக்), ரோம் (ஷாம்), ஹிம்யர் (யமன்) போன்ற நாடுகள் வெற்றி கொள்ளப்படும் வரை இந்த நிலையே உங்களிடம் இருக்கும்.

விரைவில் நீங்கள் மூன்று படையினராக மாறுவீர்கள். ஷாமில் ஒரு படையினராக இருப்பீர்கள். ஈராக்கில் ஒரு படையினராக இருப்பீர்கள். யமனில் ஒரு படையினராக இருப்பீர்கள்.

ஒரு மனிதருக்கு 100 பொற்காசுகள் கொடுத்தாலும் அவர் திருப்தி அடையாமல் கோபப்படும் நிலையும் ஏற்படும்.

அப்போது, இப்னு ஹவாலா (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! ரோமர்களிடம் பெரும் படைகள் இருக்கும் போது (அல்லது பலதலைமுறைகளாக அவர்கள் ஆட்சிசெய்யும்போது) அவர்களை நாங்கள் எப்படி வெற்றி கொள்ள முடியும்? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் மீது ஆணையாக! அதை அல்லாஹ் உங்களால் வெற்றி கொள்ளச் செய்வான். அதற்கு உங்களை பிரதிநிதிகளாக-ஆதிக்கமுள்ளவர்களாக ஆக்குவான்.

(ரோமர்களிலும், மற்றவர்களிலும்) வெண்மை ஆடை அணிந்த; பிடரிகளை மழித்த கூட்டத்தினர், உங்களில் உள்ள தலை மழித்த; கறுத்த இளைஞர்களின் தலைமையில் (அணிவகுத்து) நிற்கும் நிலை ஏற்படும். இளைஞர்கள் கட்டளையிட்டதை அவர்கள் செய்துமுடிப்பார்கள்.

அவர்களில் (ரோமர்கள், மற்றும்) வேறுசிலரின் பார்வையில், நீங்கள் ஒட்டகங்களில் இருக்கும் உண்ணி பூச்சிகளைவிட அற்பமானவர்களாவே கருதப்படுவீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அப்போது அப்துல்லாஹ் பின் ஹவாலா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! (இஸ்லாமிய படைகளை) நான் அடைந்தால் நான் எந்தப் படையில் இருக்கவேண்டும் என்று எனக்கு தேர்வு செய்து கூறுங்கள் என்று கூறினார். அதற்கு, “ஷாம் நாட்டை உனக்கு தேர்வு செய்கிறேன். அதுவே அல்லாஹ்வின் பூமியில் அல்லாஹ் தேர்வு செய்ததாகும். அவனுடைய அடியார்களில் தேர்வுசெய்யப்பட்டோர் அதன் பக்கம் சேர்க்கப்படுவார்கள். யமன்வாசிகளே! ஷாமுடன் இணைந்துக் கொள்ளுங்கள். அல்லாஹ்வின் பூமியில் அல்லாஹ் தேர்வு செய்தது ஷாம் ஆகும். முடியாதவர் யமனிலே தங்கி தன் பணியை செய்யட்டும். திண்ணமாக அல்லாஹ், எனக்காக ஷாமுக்கும், ஷாம்வாசிகளுக்கும் பொறுப்பேற்றுக் கொண்டான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அபூஅல்கமா அவர்கள் (ரஹ்) கூறியதாவது:

அப்துர்ரஹ்மான் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் பின்வருமாறு கூறியதை நான் செவியேற்றேன்:

நபி (ஸல்) அவர்கள் கூறிய இந்த தன்மைகளை ஜுஸ்உ பின் ஸுஹைல் அஸ்ஸுலமிய்யி என்பவரின் விசயத்தில் நபித்தோழர்கள் கண்டார்கள். அவர் அந்தக் காலத்தில் அரபியல்லாதவர்களுக்கு தலைவராக இருந்தார். பள்ளிவாசலுக்கு சென்றால் அவரை அரபியல்லாத மக்கள் சுற்றிநிற்பதை கண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியது இவர் விசயத்திலும், இவர்களின் விசயத்திலும் பொருந்திப்போவதைக் கண்டு நபித்தோழர்கள் ஆச்சரியமடைந்தார்கள்.

மேலும் அபூஅல்கமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இந்தச் செய்தியை கூறும்போது 3 தடவை சத்தியமிட்டுக் கூறினார்கள். இதுபோன்று வேறு செய்தியை கூறும்போது இவ்வாறு சத்தியமிட்டுக் கூறியதாக நாம் அறியவில்லை.

பைஹகீ இமாம் கூறுகிறார்:

“உங்களால் ஷாம் வெற்றி கொள்ளப்படும்; பாரசீகம் மற்றும் ரோம் நாட்டின் பொக்கிஷங்கள் உங்களுக்கிடையே பங்கிடப்படும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் ஹவாலா (ரலி) அறிவிக்கும் செய்தி இந்த நூலில் முன்னால் கூறப்பட்டுள்ளது.

(பைஹகீ-குப்ரா: 18609)

أَخْبَرَنَاهُ أَبُو الْحُسَيْنِ مُحَمَّدُ بْنُ الْحُسَيْنِ بْنِ الْفَضْلِ الْقَطَّانُ بِبَغْدَادَ , أنبأ عَبْدُ اللهِ بْنُ جَعْفَرِ بْنِ دَرَسْتَوَيْهِ، ثنا يَعْقُوبُ بْنُ سُفْيَانُ، ثنا عَبْدُ اللهِ بْنُ يُوسُفَ، ثنا يَحْيَى بْنُ حَمْزَةَ، حَدَّثَنِي أَبُو عَلْقَمَةَ، يَرُدُّ الْحَدِيثَ إِلَى جُبَيْرِ بْنِ نُفَيْرٍ قَالَ: قَالَ عَبْدُ اللهِ بْنُ حَوَالَةَ رَضِيَ اللهُ عَنْهُ:

كُنَّا عِنْدَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَشَكَوْنَا إِلَيْهِ الْعُرْيَ وَالْفَقْرَ وَقِلَّةَ الشَّيْءِ , فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” أَبْشِرُوا فَوَاللهِ لَأَنَا بِكَثْرَةِ الشَّيْءِ أَخْوَفُنِي عَلَيْكُمْ مِنْ قِلَّتِهِ , وَاللهِ لَا يَزَالُ هَذَا الْأَمْرُ فِيكُمْ حَتَّى يَفْتَحَ اللهُ أَرْضَ فَارِسَ وَأَرْضَ الرُّومِ وَأَرْضَ حِمْيَرَ , وَحَتَّى تَكُونُوا أَجْنَادًا ثَلَاثَةً , جُنْدًا بِالشَّامِ , وَجُنْدًا بِالْعِرَاقِ , وَجُنْدًا بِالْيَمَنِ , وَحَتَّى يُعْطَى الرَّجُلُ الْمِائَةَ فَيَسْخَطَهَا “.

قَالَ ابْنُ حَوَالَةَ: قُلْتُ يَا رَسُولَ اللهِ وَمَنْ يَسْتَطِيعُ الشَّامَ وَبِهِ الرُّومُ ذَوَاتُ الْقُرُونِ؟ قَالَ: ” وَاللهِ لَيَفْتَحَنَّهَا اللهُ عَلَيْكُمْ , وَلَيَسْتَخْلِفَنَّكُمْ فِيهَا , حَتَّى يَظَلَّ الْعِصَابَةُ الْبِيضُ مِنْهُمْ قُمُصُهُمُ، الْمُلْحَمَةُ أَقْفَاؤُهُمْ، قِيَامًا عَلَى الرُّوَيْجِلِ الْأَسْوَدِ مِنْكُمُ الْمَحْلُوقِ مَا أَمَرَهُمْ مِنْ شَيْءٍ فَعَلُوهُ , وَإِنَّ بِهَا رِجَالًا لَأَنْتُمْ أَحْقَرُ فِي أَعْيُنِهِمْ مِنَ الْقِرْدَانِ فِي أَعْجَازِ الْإِبِلِ “.

قَالَ ابْنُ حَوَالَةَ: فَقُلْتُ: يَا رَسُولَ اللهِ اخْتَرْ لِي إِنْ أَدْرَكَنِي ذَلِكَ. قَالَ: ” إِنِّي أَخْتَارُ لَكَ الشَّامَ فَإِنَّهُ صَفْوَةُ اللهِ مِنْ بِلَادِهِ , وَإِلَيْهِ تُجْتَبَى صَفْوَتُهُ مِنْ عِبَادِهِ , يَا أَهْلَ الْيَمَنِ عَلَيْكُمْ بِالشَّامِ , فَإِنَّ مِنْ صَفْوَةِ اللهِ مِنْ أَرْضِهِ الشَّامَ , أَلَا فَمَنْ أَبَى فَلْيَسْتَبْقِ فِي غُدُرِ الْيَمَنِ , فَإِنَّ اللهَ قَدْ تَكَفَّلَ لِي بِالشَّامِ وَأَهْلِهِ “.

قَالَ أَبُو عَلْقَمَةَ: فَسَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ جُبَيْرٍ يَقُولُ: فَعَرَفَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَعْتَ هَذَا الْحَدِيثِ فِي حُرِّ بْنِ سُهَيْلٍ السُّلَمِيِّ , وَكَانَ عَلَى الْأَعَاجِمِ فِي ذَلِكَ الزَّمَانِ , فَكَانَ إِذَا رَاحُوا إِلَى مَسْجِدٍ نَظَرُوا إِلَيْهِ وَإِلَيْهِمْ قِيَامًا حَوْلَهُ فَعَجِبُوا لِنَعْتِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيهِ وَفِيهِمْ.

قَالَ أَبُو عَلْقَمَةَ: أَقْسَمَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي هَذَا الْحَدِيثِ ثَلَاثَ مَرَّاتٍ لَا نَعْلَمُ أَنَّهُ أَقْسَمَ فِي حَدِيثٍ مِثْلَهُ

وَقَدْ مَضَى فِي هَذَا الْكِتَابِ عَنِ ابْنِ زُغْبٍ الْإِيَادِيِّ , عَنْ عَبْدِ اللهِ بْنِ حَوَالَةَ , عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” لَيُفْتَحَنَّ لَكُمُ الشَّامُ , ثُمَّ لَتَقْسِمُنَّ كُنُوزَ فَارِسَ وَالرُّومِ “


Kubra-Bayhaqi-Tamil-.
Kubra-Bayhaqi-TamilMisc-.
Kubra-Bayhaqi-Shamila-18609.
Kubra-Bayhaqi-Alamiah-.
Kubra-Bayhaqi-JawamiulKalim-17117.




(குறிப்பு: இந்தச் செய்தி பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 458
வயது: 74
குப்ராவின் சில பிரதிகளில் மேற்கண்டவாறு ஒரு இளைய தலைவரின் பெயர் ஹுர்ரு பின் ஸுஹைல் என்று வந்துள்ளது. இது தவறாகும். வேறு பிரதிகளிலும், வேறு நூல்களிலும் ஜுஸ்உ பின் ஸுஹைல் என்று வந்துள்ளது. இதுவே சரியாகும்.

فعَرَفَ أصحابُ رسولِ اللَّهِ – என்ற வாசகமே வேறு பிரதிகளிலும், வேறு நூல்களிலும் உள்ளது. இதில் அஸ்ஹாப்-நபித்தோழர்கள் என்ற வார்த்தை விடுப்பட்டுள்ளது.)


  • இந்தச் செய்தியை, அபூஅல்கமா-நஸ்ர் பின் அல்கமா அவர்கள் (ரஹ்), ஜுபைர் பின் நுஃபைர் (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவிப்பதாகவும்,
  • இதை (ஜுபைர் அவர்களின் மகனான) அப்துர்ரஹ்மான் பின் ஜுபைர் (ரஹ்) அவர்களிடம் கூறியதாகவும் வந்துள்ளது.

المراسيل لابن أبي حاتم (ص226):
– سَأَلْتُ أَبِي عَنْ حَدِيثٍ يَرْوِيهِ ‌نَصْرُ بْنُ عَلْقَمَةَ عَنْ ‌جُبَيْرِ ‌بْنِ ‌نُفَيْرٍ عَنْ أَبِي الدَّرْدَاءِ قَالَ قالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَلَقَدْ قَبَضَ اللَّهُ دَاوُدَ بَيْنَ أَصْحَابِهِ فَمَا افْتُتِنُوا وَلَا بَدَّلُوا فَذَكَرَ الْحَدِيثَ قَالَ أَبِي ‌نَصْرِ بْنِ عَلْقَمَةَ عَنْ ‌جُبَيْرِ ‌بْنِ ‌نُفَيْرٍ مُرْسَلٌ
850 – ب وَفِي مَوْضِعٍ آخَرٍ ‌نَصْرُ بْنُ عَلْقَمَةَ لَمْ يُدْرِكْ ‌جُبَيْرَ ‌بْنَ ‌نُفَيْرٍ

நஸ்ர் பின் அல்கமா, ஜுபைர் பின் நுஃபைர் (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவிக்கும் செய்திகள் முர்ஸல்-முன்கதிஃ என்று அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள் கூறியுள்ளார். காரணம் நஸ்ர் பின் அல்கமா, ஜுபைர் பின் நுஃபைர் (ரஹ்) அவர்களை சந்தித்ததில்லை.

(நூல்: அல்மராஸீல்-1/226)


இந்தச் செய்தியை அபூஅல்கமா-நஸ்ர் பின் அல்கமா அவர்கள், ஜுபைர் அவர்களின் மகன் அப்துர்ரஹ்மான் பின் ஜுபைர் அவர்களிடம் கூறும்போது அவர் எதுவும் மறுப்புக் கூறாமல் இந்த செய்தி பற்றி மேலும் சில தகவல்களை கூறியுள்ளார் என்பதால் இது முத்தஸிலான அதாவது அறிவிப்பாளர்தொடரில் இடைமுறிவு ஏற்படாத செய்தி என்று அல்பானீ,பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
ஷுஐப் அல்அர்னாவூத் பிறப்பு ஹிஜ்ரி 1346
இறப்பு ஹிஜ்ரி 1438
வயது: 92
ஆகியோர் கூறியுள்ளனர். (அப்துர்ரஹ்மான் பின் ஜுபைர், தனது தந்தையிடமிருந்து அறிவிக்கும் பல செய்திகள் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
போன்ற பல நூல்களில் உள்ளது)


ஆனால், முக்பில் பின் ஹாதீ அல்வாதிஈ அவர்கள், இதில் இந்தச் செய்தியை அப்துர்ரஹ்மான் பின் ஜுபைர் அவர்கள், நானும் இந்தச் செய்தியை என் தந்தையிடம் கேட்டுள்ளேன் என்று வெளிப்படையில் கூறாததால் இது முத்தஸில் அல்ல என்று கூறியுள்ளார்.

(நூல்: அஹாதீஸு முஅல்லா…190)


இந்தச் செய்தியை யஹ்யா பின் ஹம்ஸா அவர்களிடமிருந்து அப்துல்லாஹ் பின் யூஸுஃப், ஹிஷாம் பின் அம்மார், முஹம்மத் பின் யஹ்யா ஆகியோர் அறிவித்துள்ளனர்.


நாம் இங்கு பதிவு செய்துள்ள செய்திகளில்,

1 . மக்ஹூல் அவர்கள், அபூஇத்ரீஸ் அல்கவ்லானீ அவர்களிடமிருந்து அறிவிக்கும் செய்தியும்,

2 . ஸுலைமான் பின் ஸுமைர் அவர்கள், அப்துல்லாஹ் பின் ஹவாலா (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் செய்தியும் சரியான செய்திகளாகும்.

(ஸுலைமான் பின் ஸுமைர் என்பவரை இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள் மக்பூல் எனும் தரத்தில் கூறியுள்ளார். இவர் தனித்து இந்தச் செய்தியை அறிவிக்கவில்லை. மற்றவர்களும் அறிவித்துள்ளனர் என்பதால் இவரின் இந்த செய்தி ஏற்கப்படும்)


பகிய்யது பின் வலீத் அவர்கள், பஹீர் பின் ஸஃத் அவர்களிடமிருந்து அறிவிக்கும் செய்தியில் விமர்சனம் உள்ளது. பகிய்யது பின் வலீத், தத்லீஸ் தஸ்வியத் செய்பவர் என்பதால் 5 அம்சங்கள் இருந்தால் மட்டுமே இவரின் செய்தி ஏற்கப்படும். இவற்றில் சில இல்லை என்பதால் இது பலவீனமாகும்..

(பார்க்க: பகிய்யது பின் வலீத்)


1 . இந்தக் கருத்தில் அப்துல்லாஹ் பின் ஹவாலா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • 1 . யஹ்யா பின் ஹம்ஸா —> நஸ்ர் பின் அல்கமா —> ஜுபைர் பின் நுஃபைர் —> அப்துல்லாஹ் பின் ஹவாலா (ரலி)

பார்க்க: அல்மஃரிஃபது வத்தாரீக்-, அல்ஆஹாத் வல்மஸானீ-, ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-1114 , முஸ்னதுஷ் ஷாமிய்யீன்-, தலாஇலுன் நுபுவ்வஹ்-அபூநுஐம்-, ஹில்யதுல் அவ்லியா-, அல்ஃபிதன்-அத்தானீ-, குப்ரா பைஹகீ-18609 , பைஹகீ-தலாஇலுன் நுபுவ்வஹ்-, தாரீகு திமிஷ்க்-, அல்அஹாதீஸுல் முக்தாரா-240, 241,


  • 2 . பகிய்யது பின் வலீத் —> பஹீர் பின் ஸஃத் —> காலித் பின் மஃதான் —> அபூகுதைலா (ரலி) —> அப்துல்லாஹ் பின் ஹவாலா (ரலி)

பார்க்க: அஹ்மத்-17005 , அபூதாவூத்-2483 , அல்அஹாதீஸுல் முக்தாரா-232 ,

  • 3 . ஹரீஸ் பின் உஸ்மான் —> ஸுலைமான் பின் ஸுமைர் —> அப்துல்லாஹ் பின் ஹவாலா (ரலி)

பார்க்க: அஹ்மத்-22489 , அல்அஹாதீஸுல் முக்தாரா-235 , 236 ,

  • 4 . மக்ஹூல் —> அப்துல்லாஹ் பின் ஹவாலா (ரலி)

பார்க்க: அஹ்மத்-20356 ,

  • 5 . மக்ஹூல் —> அபூஇத்ரீஸ் அல்கவ்லானீ (ஆயித் பின் அப்துல்லாஹ்) —> அப்துல்லாஹ் பின் ஹவாலா (ரலி)

பார்க்க: இப்னு ஹிப்பான்-7306 , ஹாகிம்-8556 , அல்அஹாதீஸுல் முக்தாரா-233 , 234 ,


2 . இந்த கருத்தில் அபுத்தர்தா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-4144.


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-2535 ,


இன்ஷா அல்லாஹ் இந்தக் கருத்தில் வரும் கூடுதல் ஹதீஸ்கள், விமர்சனங்கள் பிறகு சேர்க்கப்படும்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.