பாடம்:
(அல்லாஹ்விடத்தில்) நற்கூலியையும், போர்ச் செல்வங்களையும் பெறுவதற்காக போரிடக்கூடியவர் (பற்றி வந்துள்ளவை).
அப்துல்லாஹ் பின் ஸுஃக்ப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஒருமுறை அப்துல்லாஹ் பின் ஹவாலா (ரலி) அவர்கள் என்னிடம் தங்கினார்கள். அப்போது அவர்கள் கூறியதாவது:
ஒருமுறை (ஃகனீமத் எனும்) போர்ச் செல்வங்களை பெறுவதற்காக கால்நடையாக நபி (ஸல்) எங்களை அனுப்பினார்கள். அப்போது நாங்கள் எந்த ஒன்றையும் பெறாமல் திரும்பினோம். முயற்சியின் களைப்பை எங்கள் முகங்களில் அறிந்து கொண்டு எங்களிடம் வந்து நின்று, “இறைவா! இவர்களை என் பொறுப்பில் விட்டு விடாதே! நான் அவர்கள் மீது பலவீனமானவன். அவர்களை அவர்கள் பொறுப்பிலேயும் விட்டுவிடாதே! அவர்களால் அதற்கு சக்திபெற மாட்டார்கள்! அவர்களை மனிதர்கள் பொறுப்பில் விட்டு விடாதே! அவர்கள் அவர்களைப் பயன்படுத்திக் கொள்வார்கள்! என்று கூறினார்கள்!
பிறகு என்னுடைய தலை மேல் (அல்லது தலையின் நடுவில்) கை வைத்து, “ஹவாலாவின் மகனே! முகத்தஸ் பூமியில் கிலாஃபத் ஆட்சி வருவதை நீ பார்க்கும் போது நிலநடுக்கமும், மக்களின் கூச்சலும், இன்னும் மிகப்பெரும் நிகழ்வுகளும் ஏற்படும்! என் கை உன் தலை மேல் உள்ளதைப் போல மறுமை நாள் மக்களுக்கு நெருங்கி விடும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அபூதாவூத் இமாம் கூறுகிறார்:
அப்துல்லாஹ் பின் ஹவாலா (ரலி) அவர்கள் (சிரியாவில் உள்ள) ஹிம்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.
(அபூதாவூத்: 2535)بَابٌ فِي الرَّجُلِ يَغْزُو يَلْتَمِسُ الْأَجْرَ وَالْغَنِيمَةَ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا أَسَدُ بْنُ مُوسَى، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ، حَدَّثَنِي ضَمْرَةُ، أَنَّ ابْنَ زُغْبٍ الْإِيَادِيَّ، حَدَّثَهُ قَالَ:
نَزَلَ عَلَيَّ عَبْدُ اللَّهِ بْنُ حَوَالَةَ الْأَزْدِيُّ، فَقَالَ لِي: بَعَثَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِنَغْنَمَ عَلَى أَقْدَامِنَا فَرَجَعْنَا، فَلَمْ نَغْنَمْ شَيْئًا، وَعَرَفَ الْجَهْدَ فِي وُجُوهِنَا فَقَامَ فِينَا، فَقَالَ: «اللَّهُمَّ لَا تَكِلْهُمْ إِلَيَّ، فَأَضْعُفَ عَنْهُمْ، وَلَا تَكِلْهُمْ إِلَى أَنْفُسِهِمْ فَيَعْجِزُوا عَنْهَا، وَلَا تَكِلْهُمْ إِلَى النَّاسِ فَيَسْتَأْثِرُوا عَلَيْهِمْ» ثُمَّ وَضَعَ يَدَهُ عَلَى رَأْسِي، أَوْ قَالَ: عَلَى هَامَتِي، ثُمَّ قَالَ: «يَا ابْنَ حَوَالَةَ، إِذَا رَأَيْتَ الْخِلَافَةَ قَدْ نَزَلَتْ أَرْضَ الْمُقَدَّسَةِ فَقَدْ دَنَتِ الزَّلَازِلُ وَالْبَلَابِلُ وَالْأُمُورُ الْعِظَامُ، وَالسَّاعَةُ يَوْمَئِذٍ أَقْرَبُ مِنَ النَّاسِ مِنْ يَدِي هَذِهِ مِنْ رَأْسِكَ»،
قَالَ أَبُو دَاوُدَ: «عَبْدُ اللَّهِ بْنُ حَوَالَةَ حِمْصِيٌّ»
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-2173.
Abu-Dawood-Shamila-2535.
Abu-Dawood-Alamiah-2173.
Abu-Dawood-JawamiulKalim-2176.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
இமாம்
2 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் ஸாலிஹ்
3 . அஸத் பின் மூஸா
4 . முஆவியா பின் ஸாலிஹ்
5 . ளம்ரா பின் ஹபீப்
6 . அப்துல்லாஹ் பின் ஸுஃக்ப் (ரஹ்)
7 . அப்துல்லாஹ் பின் ஹவாலா (ரலி)
- 1 . இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-24514-அப்துல்லாஹ் பின் ஸுஃக்ப் அவர்களை அபூஸுர்ஆ அத்திமிஷ்கீ அவர்கள் நபித்தோழர் என்று கூறியுள்ளார். இப்னு மன்தஹ் அவர்கள் இவர் நபித்தோழர் என்ற கருத்து சரியானதல்ல என்று கூறியுள்ளார்.
இந்த இரண்டு கருத்தில் முதல் கருத்தையே அபூநஸ்ர், இப்னு ஹஜர்,பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை) அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
ஆகியோர் சரியானதென முடிவு செய்துள்ளனர். இதற்கு காரணம் அப்துல்லாஹ் பின் ஸுஃக்ப் அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து நேரடியாக கேட்டு அறிவிக்கும் ஒரு செய்தி தப்ரானீ அவர்களின் ஒரு நூலில் இடம்பெற்றுள்ளது.
طرق حديث من كذب علي متعمدا للطبراني (ص: 165)
170 – حَدَّثَنَا أَحْمَدُ بْنُ هَارُونَ بْنِ رَوْحٍ الْبَرْذَعِيُّ، قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ عَبْدِ الْحَمِيدِ الْبَهْرَانِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَلْقَمَةَ، نَصْرُ بْنُ خُزَيْمَةَ أَنَّ أَبَاهُ، حَدَّثَهُ عَنْ نَصْرِ بْنِ عَلْقَمَةَ، عَنْ أَخِيهِ مَحْفُوظِ بْنِ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَائِذٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زُغْبٍ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ كَذَبَ عَلَيَّ مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ»
(நூல்: துருகு ஹதீஸு மன் கதப அலய்ய-170)
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-46400-நஸ்ர் பின் குஸைமா, ராவீ-14809-குஸைமா பின் அல்கமா ஆகியோர் அறியப்படாதவர்கள் ஆவர். நஸ்ர் பின் அல்கமா என்பவர் தான் பலமான அறிவிப்பாளர் ஆவார். இவரிடமிருந்து அறிவிக்கும் குஸைமாவும், அவரின் மகன் நஸ்ர் பின் குஸைமாவும் அறியப்படாதவர்கள் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.
(சரியான ஹதீஸ் பார்க்க: புகாரி-108)
- இந்த அறிவிப்பாளர்தொடர் சரியானது என்பதின்படியே இவ்வாறு முடிவு செய்துள்ளனர். ஆனால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.
இந்த அறிவிப்பாளர்தொடர் பலவீனமாக இருந்தாலும் அபூஸுர்ஆ அத்திமிஷ்கீ அவர்கள் இந்த செய்தியின்படி முடிவு செய்திருப்பார் என்று உறுதியாக கூறமுடியாது. ஏனெனில் இவர் தப்ரானீ அவர்களின் ஆசிரியர்களில் ஒருவர் ஆவார். இந்தச் செய்தியில் தப்ரானீ அவர்களின் ஆசிரியராக அபூஸுர்ஆ இடம்பெறவில்லை. அப்துல்லாஹ் பின் ஸுஃக்ப் அவர்களை நபித்தோழர் என்று அபூஸுர்ஆ அத்திமிஷ்கீ எவ்வாறு முடிவு செய்தார் என்று நமக்கு தெரியவில்லை.
- இப்னுல் அஸீர் அவர்கள், இவர் (நபி-ஸல்-அவர்கள் நபியாக ஆவதற்குமுன் மக்களிடம் மறுமைநாளைப் பற்றி பிரச்சாரம் செய்த) குஸ்ஸு பின் ஸாயிதா என்பவரின் நிகழ்வை அறிவித்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.
- இவர் குஸ்ஸு பின் ஸாயிதாவின் நிகழ்வை அறிவித்துள்ளார்; இதை ஸீராதுன் நபவிய்யா என்ற நூலில் நாம் பதிவுசெய்துள்ளோம் என்று இப்னு கஸீர் பிறப்பு ஹிஜ்ரி 700
இறப்பு ஹிஜ்ரி 774
வயது: 74
அவர்கள் தனது ஜாமிஉல் மஸானீத் வஸ்ஸுனன் என்ற நூலில் கூறியுள்ளார். ஆனால் அந்த நூலில் குஸ்ஸு பின் ஸாயிதா பற்றிய நிகழ்வில் அப்துல்லாஹ் பின் ஸுஃக்ப் அவர்களை அவர் கூறவில்லை.
(நூல்கள்: உஸ்துல் ஃகாபஹ்-2950, ஜாமிஉல் மஸானீத் வஸ்ஸுனன்-6422, அஸ்ஸீரதுன் நபவிய்யா-1/141-153)
இப்னு கஸீர் பிறப்பு ஹிஜ்ரி 700
இறப்பு ஹிஜ்ரி 774
வயது: 74
அவர்கள் இதை மறந்துவிட்டிருக்கவும் வாய்ப்புள்ளது. அல்லது பதிப்பில் விடப்பட்டிருக்கவும் வாய்ப்புள்ளது.
ஜவாமிஉல் கலிம் சாப்ட்வேரில் இவரைப் பற்றி இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள், இவர் பிரபலமான நபித்தோழர்; உஸ்மான் (ரலி) அவர்களுடன் கொல்லப்பட்டார் என்று தக்ரீபில் கூறியுள்ளதாக தகவல் உள்ளது. நாம் பார்த்தவரை தக்ரீபுத் தஹ்தீபில் இவர் பற்றி இவ்வாறு கூறப்படவில்லை. இவரிலிருந்து மூன்றாவது அறிவிப்பாளராக இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் பதிவு செய்துள்ள அப்துல்லாஹ் பின் ஸம்ஆ (ரலி) அவர்களைப் பற்றித்தான் இவ்வாறு கூறியுள்ளார். எனவே ஜவாமிஉல் கலிமில் கூறப்பட்டுள்ள தகவல் தவறாகும்.
تقريب التهذيب (ص303):
3323- عبد الله ابن زغب بزاي ومعجمة وموحدة الإيادي شامي صحابي ونفاها بعضهم له حديث وروى له أبو داود آخر عن عبد الله ابن حوالة د
3324- عبد الله ابن أبي زكريا الخزاعي أبو يحيى الشامي واسم أبيه إياس وقيل زيد ثقة فقيه عابد من الرابعة مات سنة تسع عشرة [ومائة] د
3325- عبد الله ابن زمعة بفتح الزاي والميم ابن الأسود ابن المطلب ابن أسد القرشي الأسدي صحابي مشهور استشهد يوم الدار مع عثمان ع.
(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-3323-3325)
- இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.அவர்கள், ஸுஃக்ப் பின் அப்துல்லாஹ் என்ற பெயரில் ஒருவரை கூறியுள்ளார். இவர் அறியப்படாதவர் ஆவார். - இப்னு ஸுஃக்ப் என்று கூறப்படும் இவரை அதிகமானோர் அப்துல்லாஹ் பின் ஸுஃக்ப் என்று கூறியுள்ளனர். ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
அவர்கள் இவரை அப்துர்ரஹ்மான் பின் ஸுஃக்ப் என்று குறிப்பிட்டுவிட்டு இவர் எகிப்தில் உள்ள தாபிஈன்களில் ஒருவர் என அறியப்பட்டவர் என்று கூறியுள்ளார்.
(பார்க்க: ஹாகிம்-8309)
- தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்கள், அப்துல்லாஹ் பின் ஸுஃக்ப் பற்றி இவர் பிரபலமானவர் அல்ல என்றும், இவரிடமிருந்து ளம்ரா பின் ஹபீப் மட்டுமே அறிவித்துள்ளார் என்றும் கூறியுள்ளார். - அபூநுஐம் அவர்கள், இவர் நபித்தோழரா? இல்லையா? என்பதில் கருத்துவேறுபாடுள்ளது என்று குறிப்பிட்டுவிட்டு இவர் ஹிம்ஸ் பகுதியைச் சேர்ந்த தாபிஈ என்று (சிலரால்) கருதப்படுகிறார் என்று கூறியுள்ளார். இதைக் குறிப்பிட்ட ஷுஐப் அல்அர்னாவூத் பிறப்பு ஹிஜ்ரி 1346
இறப்பு ஹிஜ்ரி 1438
வயது: 92
அவர்கள், இவரிடமிருந்து ளம்ரா பின் ஹபீப் மட்டுமே அறிவித்துள்ளார் என்பதால் இவர் அறியப்படாதவர் என்று கூறியுள்ளார். - அபூஸுர்ஆ அத்திமிஷ்கீ அவர்கள், இவரை நபித்தோழரின் பட்டியலில் கூறியுள்ளதைப் போன்றே மூத்த தாபிஈன்களின் பட்டியலிலும் கூறியுள்ளார் என்று இக்மால் நூலின் ஆசிரியரான அலாஉத்தீன் முகல்தாய் அவர்கள் கூறியுள்ளார். (எனவே அபூஸுர்ஆ அத்திமிஷ்கீ அவர்கள் இவர் நபித்தோழர் என்று உறுதி செய்யவில்லை என்று தெரிகிறது.)
(நூல்கள்: தஹ்தீபுல் கமால்-14/519, அல்இக்மால்-7/357, அல்காஷிஃப்-3/114, அல்இஸாபா-6/154, துஹ்ஃபதுத் தஹ்ஸீல்-1/241, தஹ்தீபுத் தஹ்தீப்-2/335, அர்ருவாதுல் முக்தலஃபு ஃபீ ஸுஹ்பதிஹிம்-66, 7/714)
- இவர் தாபிஈ என்பதுடன், ஹஸன் தரத்தில் உள்ளவர் என்பதே சரியான கருத்து என்று அஃளமீ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
(நூல்: அல்ஜாமிஉல் காமிலு ஃபில்ஹதீஸிஸ் ஸஹீஹ்…9/402)
- 2 . மேலும் இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-44835-முஆவியா பின் ஸாலிஹ் பின் ஹுதைர் அவர்களைப் பற்றி சிலர் விமர்சித்துள்ளனர். வேறு சிலர் பலமானவர் என்று கூறியுள்ளனர். வேறுசிலர் நடுத்தரமானவர்-ஹஸன் தரம் என்று கூறியுள்ளனர்.
இவரைப் பற்றி விமர்சனம் செய்தவர்கள்:
1 . மூஸா பின் ஸலமா அவர்கள், இவரிடமிருந்து ஹதீஸ்களை கேட்டு எழுதிக்கொள்வதற்காக சென்றேன். அவரிடம் கேளிக்கை கருவிகள் இருந்தன. நான் இவை எதற்கு என்று கேட்டபோது அவர், இதை நான் அன்தலுஸ் நகரில் உள்ள இப்னுமஸ்ஊத் என்பவருக்கு அன்பளிப்பாக அனுப்ப வைத்துள்ளேன் என்று கூறினார். எனவே அவரிடமிருந்து ஹதீஸ்களை கேட்காமல் திரும்பிவிட்டேன் என்று கூறியுள்ளார்.
2 . அபூஇஸ்ஹாக் அல்ஃபஸாரீ அவர்கள், இவரிடமிருந்து ஹதீஸை கேட்கும் அளவிற்கு இவர் தகுதியானவர் அல்ல என்று கூறியுள்ளார்.
3 . யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.அவர்கள், அந்தக் காலத்தில் இவரிடமிருந்து ஹதீஸை கேட்க நாங்கள் விரும்பியதில்லை என்று கூறியுள்ளார்.
4 . இப்னு அம்மார் அவர்கள், இவரிடமிருந்து மக்கள் ஹதீஸை அறிவித்தனர். மேலும் இவருக்கு ஹதீஸ் என்றால் என்னவென்று தெரியவில்லை என்றும் கூறினர் என்று கூறியுள்ளார்.
5 . அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள் இவரை ஹஸன் தரத்தில் உள்ளவர் என்று ஒரு சமயமும்; இவர் ஆதாரத்திற்கேற்றவர் அல்ல என்று மற்றொரு சமயமும் கூறியுள்ளார்.
6 . இப்னு அபூகைஸமா அவர்கள், இவர் ஷாம்வாசிகளிடமிருந்து அரிதான செய்திகளை அறிவித்துள்ளார் என்று கூறியுள்ளார். (அதாவது ஷாம்வாசிகளிடமிருந்து இவர் சில செய்திகளை தனித்து அறிவித்துள்ளார் என்று கூறியுள்ளார்).
7 . உகைலீ பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 322
அவர்கள் இவரை பலவீனமானவர்களின் பட்டியலில் கூறியுள்ளார்.
இவரைப் பற்றி பலமானவர் என்று பாராட்டியவர்கள்:
1 . அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ,பிறப்பு ஹிஜ்ரி 133
இறப்பு ஹிஜ்ரி 198
வயது: 65
அஹ்மத் இமாம் அவர்களின் ஆசிரியர்களில் ஒருவர்; அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர். இப்னு ஸஃத்,பிறப்பு ஹிஜ்ரி 168
இறப்பு ஹிஜ்ரி 230
வயது: 62
இப்னு மயீன்…, இமாம் அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இஜ்லீ,பிறப்பு ஹிஜ்ரி 181
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 80
நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
இப்னு ஹிப்பான்,பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும். அபூஸுர்ஆ ஆகியோர் இவர் பலமானவர் என்று கூறியுள்ளனர்.
இப்னுல் மதீனீ,பிறப்பு ஹிஜ்ரி 161
இறப்பு ஹிஜ்ரி 234
வயது: 73
புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
ஆகியோர் அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ பிறப்பு ஹிஜ்ரி 133
இறப்பு ஹிஜ்ரி 198
வயது: 65
அஹ்மத் இமாம் அவர்களின் ஆசிரியர்களில் ஒருவர்; அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.அவர்கள் இவரை பலமானவர் என்று கூறியதாக குறிப்பிட்டுள்ளனர்.
இவர் சுமாரானவர் என்று கூறியுள்ளவர்கள்:
1 . அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள், இவரை ஹஸன் தரம் என்று சில இடத்தில் கூறியுள்ளார்.
2 . இப்னு கராஷ் அவர்கள், இவரை ஸதூக் என்ற தரத்தில் கூறியுள்ளார்.
3 . பஸ்ஸார் அவர்கள், சில இடத்தில் இவரை பலமானவர் என்றும், சில இடத்தில் சுமாரானவர் என்றும் கூறியுள்ளார்.
4 . இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
அவர்கள், இவரை சுமாரானவர்; சில செய்திகளை இவர் தனித்து அறிவித்துள்ளார் என்று கூறியுள்ளார்.
5 . தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்கள், இவரை ஸதூக் என்ற தரத்தில் கூறியுள்ளார்.
6 . இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள், இவரை ஸதூக்-உண்மையாளர், சில இடத்தில் தவறாக அறிவித்துள்ளார் என்று கூறியுள்ளார்.
இவரை பற்றி இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.அவர்களின் கருத்துப் பற்றி அவரின் மாணவர்கள் பலவாறு அறிவித்துள்ளனர்.
(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-8/382, அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-8/145, தஹ்தீபுல் கமால்-28/186, அல்இக்மால்-11/269, அல்காஷிஃப்-4/310, தஹ்தீபுத் தஹ்தீப்-4/108, தக்ரீபுத் தஹ்தீப்-1/955)
- அறிவிப்பாளர்களைப் பற்றி மதிப்பிடக்கூடியவர்களில் நடுநிலையானவர்கள் இவரை பலமானவர் என்றே கூறியுள்ளனர். சில செய்திகளை இவர் தவறாக அறிவித்துள்ளார் என்பதாலும்; சில செய்திகளை இவர் தனித்து அறிவித்துள்ளார் என்பதாலும் தான் இவரை வேறுசிலர் பலவீனமானவர் என்ற கருத்தில் கூறியுள்ளனர்.
- இவர் அறிவிக்கும் சில செய்திகளை முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
இமாம் பதிவு செய்துள்ளார். - இவரின் செய்திகளை ஆய்வு செய்துள்ள ஹதீஸ்துறை அறிஞர்களில் சிலர், இவர் சில செய்திகளை சரியாக அறிவித்துள்ளதை அடையாளம் காட்டியுள்ளனர். இவ்வாறே தவறாக அறிவித்திருப்பதையும் அடையாளம் காட்டியுள்ளனர். எனவே இவர் மறதியால் இவ்வாறு தவறாக அறிவித்துள்ளார் என்று முடிவு செய்யலாம்.
இந்தச் செய்தியை முஆவியா பின் ஸாலிஹ் தனித்து அறிவித்துள்ளார் என்பதால் இது பலவீனமானது என்று ஷுஐப் அல்அர்னாவூத் பிறப்பு ஹிஜ்ரி 1346
இறப்பு ஹிஜ்ரி 1438
வயது: 92
அவர்கள் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
நூலின் அடிக்குறிப்பில் தனது கருத்தைக் கூறியுள்ளார்.
نتائج الأفكارفي تخريج أحاديث الأذكار (2/ 75)
ومعاوية بن صالح -وإن كان من رجال مسلم- مختلف فيه، فغاية ما يوصف به أن يعد ما ينفرد به حسناً،
(இவர் தனித்து அறிவிக்கும் செய்தியை நவவீ பிறப்பு ஹிஜ்ரி 631
இறப்பு ஹிஜ்ரி 676
வயது: 45
அவர்கள் சரியானது என்று கூறியிருப்பதை இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் விமர்சித்து) இவர் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
இமாமின் அறிவிப்பாளர்தான் என்றாலும் இவரைப் பற்றி கருத்துவேறுபாடு இருப்பதால் இவர் தனித்து அறிவிக்கும் செய்திகளை ஹஸன் தரம் என்றே முடிவு செய்ய வேண்டும் என்று தனது நஜாஇஜுல் அஃப்கார் என்ற நூலில் கூறியுள்ளார்.
இதனடிப்படையில் தான் இந்தச் செய்தியை ஹஸன் தரம் என்று தனது ஃபத்ஹுல் பாரியில் கூறியுள்ளார்.
(நூல்கள்: நஜாஇஜுல் அஃப்கார்-2/75, ஃபத்ஹுல் பாரீ-6/33).
அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள் இதைச் சரியான செய்தி என்று கூறியுள்ளார்.
(நூல்: ஸஹீஹ் அபூதாவூத்-2286)
அப்துல்லாஹ் பின் ஹவாலா (ரலி) வழியாக இதற்கு மாற்றமான கருத்தில் சரியான ஹதீஸ்கள் வந்துள்ளன என்பதாலும், மேற்கண்ட அப்துல்லாஹ் பின் ஸுஃக்ப், முஆவியா பின் ஸாலிஹ் ஆகியோரைப் பற்றிய விமர்சனத்தின்படியும் இந்தச் செய்தியை பலவீனமானது என்றே முடிவு செய்யவேண்டும்.
இந்தச் செய்தியை சரி என்று கூறக்கூடியவர்கள் இதற்கு இரண்டு வகையான விளக்கங்களை கூறியுள்ளனர்.
1 . இந்த நிகழ்வு பனு உமைய்யாக்களின் ஆட்சியின் போது ஏற்பட்டுவிட்டது என்று சிலர் கூறியுள்ளனர்.
2 . வேறு சிலர் இது மறுமைநாளின் நெருக்கத்தின் போது ஏற்படும் என்றும், மஹ்தீ என்ற ஆட்சியாளர் வரும் போது ஏற்படும் என்றும் விளக்கம் கூறியுள்ளனர்.
1 . இந்தக் கருத்தில் அப்துல்லாஹ் பின் ஹவாலா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-22487 , அபூதாவூத்-2535 , முஸ்னத் அபீ யஃலா-6867 , ஹாகிம்-8309, குப்ரா பைஹகீ-18552 , …
இதனுடன் தொடர்புடைய சரியான செய்திகள்:
பார்க்க: குப்ரா பைஹகீ-18609 ,
சமீப விமர்சனங்கள்