தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-108

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், “என்மீது யார் வேண்டுமென்றே (இட்டுக்கட்டி) பொய் சொல்வாரோ அவர் தமது இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக்கொள்ளட்டும்” என்று கூறியதுதான், உங்களுக்கு நான் அதிகமான நபிமொழிகளை எடுத்துரைக்காமல் என்னைத் தடுத்துவிட்டது.

அத்தியாயம்: 3

(புகாரி: 108)

حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الوَارِثِ، عَنْ عَبْدِ العَزِيزِ، قَالَ أَنَسٌ:

إِنَّهُ لَيَمْنَعُنِي أَنْ أُحَدِّثَكُمْ حَدِيثًا كَثِيرًا أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ تَعَمَّدَ عَلَيَّ كَذِبًا، فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ»


Bukhari-Tamil-108.
Bukhari-TamilMisc-108.
Bukhari-Shamila-108.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம்-முஹம்மத் பின் இஸ்மாயீல்

2 . அப்துல்லாஹ் பின் அம்ர்-அபூமஃமர் அத்தமீமி

3 . அப்துல்வாரிஸ் பின் ஸயீத்-அல்அன்பரீ

4 . அப்துல்அஸீஸ் பின் ஸுஹைப்-அல்புனானீ

5 . அனஸ் பின் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 93
வயது: 103
நபித்தோழர், சுமார் 2286 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி)-அபூஹம்ஸா


1 . இந்தக் கருத்தில் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-11942, 12110, 12154, 12702, 12764, 12800, 13100, 13189, 13332, 13961, 13970, 13980, தாரிமீ-241, 242, 244, புகாரி-108, முஸ்லிம்-, இப்னு மாஜா-32, திர்மிதீ-2661, …


 


6 . ஸுபைர் பின் அவாம் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: புகாரி-107 .


இந்தச் செய்தி மேலும் பல நபித்தோழர்கள் வழியாக வந்துள்ளது.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.