தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-107

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 (தந்தையே! உங்களைப் போன்று நபி(ஸல்) அவர்களுடன் நட்புகொண்ட) இன்னின்னாரெல்லாம் நபி(ஸல்) அவர்கள் பற்றி (அதிகமாக) அறிவிப்பது போல், தாங்கள் அவர்களைப் பற்றி அறிவிப்பதை நான் கேள்விப்பட்டதேயில்லையே! ஏன்?’ என்று என்னுடைய தந்தை ஸுபைர்(ரலி) அவர்களிடம் நான் கேட்டதற்கு, ‘இதோ பார்! நான் (பெரும்பாலும்) நபி(ஸல்) அவர்களைப் பிரிந்திருந்ததே இல்லை. ஆயினும் ‘என் மீது இட்டுக் கட்டிச் செல்பவர் தன்னுடைய இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறக்கேட்டிருக்கிறேன்’ (எனவேதான் நான் அதிகமாக அறிவிக்கவில்லை)’ என்றார்கள்’ என அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) கூறினார்.
Book :3

(புகாரி: 107)

حَدَّثَنَا أَبُو الوَلِيدِ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ جَامِعِ بْنِ شَدَّادٍ، عَنْ عَامِرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، عَنْ أَبِيهِ، قَالَ: قُلْتُ لِلزُّبَيْرِ

إِنِّي لاَ أَسْمَعُكَ تُحَدِّثُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَمَا يُحَدِّثُ فُلاَنٌ وَفُلاَنٌ؟ قَالَ: أَمَا إِنِّي لَمْ أُفَارِقْهُ، وَلَكِنْ سَمِعْتُهُ يَقُولُ: «مَنْ كَذَبَ عَلَيَّ فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ»


Bukhari-Tamil-107.
Bukhari-TamilMisc-107.
Bukhari-Shamila-107.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம்-முஹம்மத் பின் இஸ்மாயீல்

2 . ஹிஷாம் பின் அப்துல்மலிக்-அபுல்வலீத்-அல்பாஹிலீ

3 . ஷுஅபா பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
பின் ஹஜ்ஜாஜ்-அபூபஸ்தாம்

4 . ஜாமிஃ பின் ஷத்தாத்-முஹாரபீ

5 . ஆமிர் பின் அப்துல்லாஹ்-அல்குரைஷீ

6 . அப்துல்லாஹ் பின் ஸுபைர்-அல்அஸதீ

7 . ஸுபைர் பின் அவ்வாம் (ரலீ)-அல்அஸதீ


6 . இந்தக் கருத்தில் ஸுபைர் பின் அவாம் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-1413, 1428, தாரிமீ-239, புகாரி-107, இப்னு மாஜா-36, அபூதாவூத்-3651,


மேலும் பார்க்க: புகாரி-108.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.