“நீங்கள் ஆயுதமேந்திய மாறுபட்ட பல படையினராக மாறும் நிலை (பிற்காலத்தில்) ஏற்படும். ஒரு படையினர் ஷாமில் இருப்பார்கள். மற்றொரு படையினர் எகிப்தில் இருப்பார்கள். மற்றொரு படையினர் ஈராக்கில் இருப்பார்கள். மற்றொரு படையினர் யமன் நாட்டில் இருப்பார்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அப்போது நபித்தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் எந்தப் படையில் இருக்கவேண்டும் என்று எங்களுக்கு தேர்வுசெய்யுங்கள் என்று கூறினர்.
அதற்கு, “ஷாம் நாட்டுடன் சேர்ந்துக் கொள்ளுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நபித்தோழர்கள் நாங்கள் கால்நடைகளையே வைத்துள்ளோம்…நாங்கள் கால்நடையாக செல்பவர்கள். ஷாமுக்கு செல்லும் அளவுக்கு எங்களிடம் பலமில்லை என்று கூறினர்.
ஷாமுக்கு செல்லமுடியாதவர், யமன் நாட்டின் படையுடன் சேர்ந்துக் கொள்ளட்டும். திண்ணாக அல்லாஹ், எனக்காக ஷாமுக்கு பொறுப்பேற்றுக் கொண்டான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபுத்தர்தா (ரலி)
பஸ்ஸார் இமாம் கூறுகிறார்:
இந்தக் கருத்தில் வரும் செய்திகளில் அபுத்தர்தா (ரலி) வழியாக வரும் செய்தியே மிக அழகானது என்றே நாம் அறிகிறோம். அபுத்தர்தா (ரலி) அல்லாத மற்ற நபித்தோழர்கள் வழியாகவும் இந்த செய்தி வந்துள்ளது.
அபுத்தர்தா (ரலி) வழியாக வரும் செய்தியே சரியானதாக; அழகானதாக இருப்பதால் அதையே நாம் பதிவு இங்கு செய்துள்ளோம்.
(bazzar-4144: 4144)حَدَّثنا عُمَر بن الخطاب السجستاني، قَال: حَدَّثنا هشام، قَال: حَدَّثنا سليمان بن عتبة، قَال: حَدَّثنا يُونُسُ بْنُ مَيْسَرَةَ، عَن أَبِي إِدْرِيسَ، عَن أَبِي الدَّرْدَاءِ، رَضِي اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيّ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم قَالَ:
إِنَّكُمْ سَتُجَنِّدُونَ أَجْنَادًا، جُنْدًا بِالشَّامِ، وَمِصْرَ، وَالْعِرَاقِ، وَالْيَمَنِ، قَالُوا: فَخِرْ لَنَا يَا رَسولَ اللهِ. قَالَ: عَلَيْكُمْ بِالشَّامِ، قَالُوا: إِنَّا أَصْحَابُ مَاشِيَةٍ، ولاَ نُطِيقُ الشَّامَ، قَالَ: فَمَنْ لَمْ يُطِقِ الشَّامَ فَلْيَلْحَقْ بِيَمَنِهِ، فَإِنَّ اللَّهَ قَدْ تَكَفَّلَ لِي بِالشَّامِ.
وَهَذَا الْحَدِيثُ لا نَعْلَمُهُ يُرْوَى عَن رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم أَحْسَنُ مِنْ حَدِيثِ أَبِي الدَّرْدَاءِ هَذَا، وَقَدْ رُوِيَ عَنْ غَيْرِ أَبِي الدَّرْدَاءِ نَحْوٌ مِنْ هَذَا الْكَلامِ وَذَكَرْنَا حَدِيثَ أَبِي الدَّرْدَاءِ لِجَلالَتِهِ وَحُسْنِ إِسْنَادِهِ.
Bazzar-Tamil-.
Bazzar-TamilMisc-.
Bazzar-Shamila-4144.
Bazzar-Alamiah-.
Bazzar-JawamiulKalim-67.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-18414-ஸுலைமான் பின் உத்பா என்பவரை அபூமுஸ்ஹிர், ஹைஸம் பின் காரிஜா, துஹைம்,பிறப்பு ஹிஜ்ரி 170
இறப்பு ஹிஜ்ரி 245
வயது: 75
அபூஸுர்ஆ அர்ராஸீ பிறப்பு ஹிஜ்ரி 200
இறப்பு ஹிஜ்ரி 264
வயது: 64
ஆகியோர் பலமானவர் என்று கூறியுள்ளனர். - இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.அவர்கள், இவரை லா ஷைஃ என்றும்; அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
அவர்கள், இவரை பற்றி எனக்குத் தெரியவில்லை என்றும்; ஸாலிஹ் ஜஸரா அவர்கள், இவர் சில முன்கரான செய்திகளை அறிவித்துள்ளார் என்றும் கூறியுள்ளனர். (இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.அவர்கள், குறைந்த ஹதீஸ்களை அறிவிப்பவர்களுக்கும் லா ஷைஃ என்று கூறுவார். முன்கராக (பலமானவர்களுக்கு மாற்றமாக) அறிவிப்பவர்களுக்கும் லா ஷைஃ என்றும் கூறுவார்.) - அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
ஆகியோர் இவர் ஸதூக்-சுமாரானவர் என்றும்; இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள், இவர் சுமாரானவர்; சில அரிதான செய்திகளை அறிவித்துள்ளார் என்றும் கூறியுள்ளனர்.
(நூல்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-4/134, தஹ்தீபுல் கமால்-12/37, அல்காஷிஃப்-2/531, தஹ்தீபுத் தஹ்தீப்-2/103, தக்ரீபுத் தஹ்தீப்-1/411)
யூனுஸ் பின் மைஸரா அவர்களிடமிருந்து அறிவிக்கும் இப்னு அபூஷைபான் அவர்கள், இந்தச் செய்தியில் அப்துல்லாஹ் பின் ஹவாலா (ரலி) அவர்களையே கூறியுள்ளார்.
التاريخ الكبير للبخاري (1/ 292 ت المعلمي اليماني):
938 – ابراهيم بن ابى شيبان أبو اسمعيل كناه إِسْحَاق سَمِعَ يونس بْن حلبس عَنْ أَبِي إدريس عَنِ ابْن حوالة: قَالَ النَّبِيّ صلى الله عليه وسلم عليك بالشام، قَالَه مُحَمَّد سَمِعَ مُحَمَّد بْن مبارك سَمِعَ إِبْرَاهِيم، حديثه فِي الشاميين
(நூல்: தாரீகுல் கபீர்-938)
என்றாலும் இந்தச் செய்தியை பஸ்ஸார், முன்திரீ, ஹைஸமீ, ஷுஐப் அல்அர்னாவூத் பிறப்பு ஹிஜ்ரி 1346
இறப்பு ஹிஜ்ரி 1438
வயது: 92
ஆகியோர் ஹஸன் தரம் என்று கூறியுள்ளனர்.
இதில் நபித்தோழரை தவறாக அறிவித்துள்ளார்தான் என்றாலும் இந்தச் செய்தியின் கருத்து சரியாகும்.
2 . இந்தக் கருத்தில் அபுத்தர்தா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-4144 , …
மேலும் பார்க்க: குப்ரா பைஹகீ-18609.
சமீப விமர்சனங்கள்