அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மறுமைநாள் வருவதற்குமுன், தனக்கு எவரும் இணையில்லாதவனான அல்லாஹ்வை (மட்டுமே) வணங்கப்படவேண்டும் என்பதற்கு வாளைக் கொண்டு (போர் செய்ய வேண்டிய நிலைக்கு) நான் அனுப்பப்பட்டுவிட்டேன்.
(போரில் கிடைக்கும் பொருள்களிலிருந்து எனக்குக் கிடைக்க வேண்டிய) எனது செல்வம் என் ஈட்டியின் நிழலுக்குக் கீழே உள்ளது. எவர் என் கட்டளைக்கு மாறுசெய்கிறாரோ, அவர் மீது பணிந்திருப்பதும், (ஜிஸ்யா) காப்புவரி செலுத்துவதும் கடமையாகும்.
யார் (மாற்றுக் கொள்கையில் உள்ள) ஒரு கூட்டத்தாருக்கு ஒப்ப நடக்கின்றாரோ அவர் அவர்களையே சார்ந்தவர்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
(sharh-mushkil-al-athar-231: 231)مَا قَدْ حَدَّثَنَا أَبُو أُمَيَّةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ وَهْبِ بْنِ عَطِيَّةَ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ، عَنْ حَسَّانَ بْنِ عَطِيَّةَ، عَنْ أَبِي مُنِيبٍ الْجُرَشِيِّ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ عَلَيْهِ السَّلَامُ:
بُعِثْتُ بِالسَّيْفِ بَيْنَ يَدَيِ السَّاعَةِ لِيُعْبَدَ اللهُ عَزَّ وَجَلَّ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَجُعِلَ رِزْقِي تَحْتَ رُمْحِي وَجُعِلَ الذُّلُّ وَالصَّغَارُ عَلَى مَنْ خَالَفَنِي وَمَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ
Sharh-Mushkil-Al-Athar-Tamil-.
Sharh-Mushkil-Al-Athar-TamilMisc-.
Sharh-Mushkil-Al-Athar-Shamila-231.
Sharh-Mushkil-Al-Athar-Alamiah-.
Sharh-Mushkil-Al-Athar-JawamiulKalim-201.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-47830-அல்வலீத் பின் முஸ்லிம் என்பவர் பற்றி சிலர் பலமானவர் என்றும் சிலர் பலவீனமானவர் என்றும் கூறியுள்ளனர்…
இவர் தத்லீஸ் செய்பவர் என்பதாலே இவரை சிலர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர். அதிலும் இவர் அவ்ஸாயீ அவர்கள் வழியாக அறிவிக்கும் செய்திகளில் தத்லீஸ் தஸ்வியத் செய்பவர் என்று தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
இமாம் கூறியுள்ளார்…
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-4/325, தக்ரீபுத் தஹ்தீப்-1/1041)
எனவே இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.
மேலும் பார்க்க: அபூதாவூத்-4031 .
சமீப விமர்சனங்கள்