அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நம்மில் பெரியவருக்கு மரியாதை செய்யாதோரும்; சிறியவருக்கு செய்ய வேண்டிய கடமையை அறியாதோரும் நம்மைச் சார்ந்தவர்கள் இல்லை.
மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நரைமுடி உடைய, முஸ்லிமான (முதிய)வரை கண்ணியப்படுத்துவது அல்லாஹ்வை கண்ணியப்படுத்துவதில் சேர்ந்ததாகும்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
(shuabul-iman-10478: 10478)أَخْبَرَنَا أَبُو زَكَرِيَّا بْنُ أَبِي إِسْحَاقَ، أَنَا الْحُسَيْنُ أَحْمَدُ بْنُ عُثْمَانَ بْنِ يَحْيَى الْأَدَمِيُّ، نَا أَبُو قِلَابَةَ، نَا مُسْهِلُ بْنُ تَمَّامِ بْنِ بَزِيعٍ، نَا مُبَارَكُ بْنُ فَضَالَةَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
لَيْسَ مِنَّا مَنْ لَمْ يُوَقِّرْ كَبِيرَنَا وَيَعْرِفْ حَقَّ صَغِيرِنَا
وَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ مِنْ إِجْلَالِ اللهِ إِكْرَامَ ذِي الشَّيْبَةِ الْمُسْلِمِ
Shuabul-Iman-Tamil-.
Shuabul-Iman-TamilMisc-.
Shuabul-Iman-Shamila-10478.
Shuabul-Iman-Alamiah-.
Shuabul-Iman-JawamiulKalim-10234.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ முபாரக் பின் ஃபளாலா பற்றி ஹுஷைம் அவர்கள், இவர் பலமானவர் என்று கூறியதாக இப்னுல்மதீனீ அவர்கள் அறிவித்துள்ளார். இவ்வாறே அஃப்பான் அவர்களும் இவரை பலமானவர் என்று கூறியுள்ளார்.
- என்றாலும் சிலர் இவர் தவறிழைப்பவர் என்றும், சிலர் பலவீனமானவர் என்றும், சிலர் தத்லீஸ் செய்பவர் என்றும் விமர்சித்துள்ளனர்.
- அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ பிறப்பு ஹிஜ்ரி 133
இறப்பு ஹிஜ்ரி 198
வயது: 65
அஹ்மத் இமாம் அவர்களின் ஆசிரியர்களில் ஒருவர்; அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.அவர்கள், இவர் ஹத்தஸனல் ஹஸன்-ஹஸன் எங்களுக்கு அறிவித்தார் என்று கூறும் செய்தியை ஏற்றுக்கொள்வோம் என்று கூறியுள்ளார். அபூஸுர்ஆ அவர்களும் இவர் தத்லீஸ் செய்பவர்; என்றாலும் இவர் ஹத்தஸனா என்று அறிவித்தால் அந்த செய்தி பலமானது என்று கூறியுள்ளார். - தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள், இவர் சிறிது பலவீனமானவர்; அதிகம் தவறிழைப்பவர். எனவே இவர் போன்று வேறு யாரும் அறிவித்துள்ளார்களா? என்று பார்க்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
(நூல்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-8/338, தஹ்தீபுத் தஹ்தீப்-4/18)
- சிலர் இவர் விசயத்தில் அபூஸுர்ஆ அவர்களின் விளக்கத்தின்படியே முடிவு செய்கின்றனர். இவர் தத்லீஸ் (தத்லீஸ் தஸ்வியஹ்) செய்பவர் என்பதால் இவரின் செய்தியில் இவர் தனது ஆசிரியரிடமும், இவரின் ஆசிரியரின் ஆசிரியருக்குமிடையில் நேரடியாக கேட்டதாக வார்த்தை அமைப்பு இருந்தால் அது சரியானது என்றும் சில ஹதீஸ்கலை அறிஞர்கள் கூறியுள்ளனர்.
- அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள் இந்த சட்டத்தின்படியே இவர் இடம்பெறும் சில செய்திகளை சரியானது என்று கூறியுள்ளார். நேரடியாக கேட்டதாக வார்த்தை அமைப்பு இல்லாவிட்டால் பலவீனமானது என்று கூறியுள்ளார்.
(நூல்: அஸ்ஸஹீஹா-958, அள்ளயீஃபா-1030)
மேலும் பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-5927 .
சமீப விமர்சனங்கள்