தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Shuabul-Iman-2499

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

யார் கஹ்ஃப் அத்தியாயத்தை அது இறக்கப்பட்ட முறையில் ஓதுவாரோ அவருக்கு அவருடைய இடத்திலிருந்து மக்கா வரை ஒளி உண்டாகும். யாரேனும் உளூ செய்தபின் “சுப்ஹானல்லாஹும்ம வபிஹம்திக அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு அஸ்தஃக்பிருக வ அதூபு இலைக” என்று ஓதினால் அது சீல்(முத்திரை)யிட்டு அல்லாஹ்வின் அர்ஷின் கீழ் வைத்து, அவர் மறுமை நாளில் கொண்டு வரப்படும் வரை பாதுகாக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஸயீத் (ரலி)

(shuabul-iman-2499: 2499)

أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللهِ الْحَافِظُ، حَدَّثَنَا أَبُو عَلِيٍّ الْحَافِظُ، حَدَّثَنَا قَاسِمُ بْنُ زَكَرِيَّا حدثنا أَبُو عُبَيْدِ اللهِ يحيى بْنُ مُحَمَّدِ بْنِ الْسْكَنِ، حَدَّثَنَا يَحْيَى بْنُ كَثِيرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: وَحَدَّثَنَا قَاسِمُ بْنُ زَكَرِيَّا، أَخْبَرَنا عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي الْبَخْتَرِيِّ، حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي هَاشِمٍ الرُّمَّانِيِّ، عَنْ أَبِي مِجْلَزٍ، عَنْ قَيْسِ بْنِ عَبَّادٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

مَنْ قَرَأَ سُورَةَ الْكَهْفِ كَمَا أُنْزِلَتْ كَانَتْ لَهُ نُورًا مِنْ حَيْثُ قَرَأَهَا إِلَى مَكَّةَ، وَمَنْ قَالَ إِذَا تَوَضَّأَ سُبْحَانَكَ اللهُمَّ وَبِحَمْدِكَ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ، طُبِعَ بِطَابَعٍ، ثُمَّ جُعِلَتْ تَحْتَ الْعَرْشِ حَتَّى يُؤْتَى بِصَاحِبِهَا يَوْمَ الْقِيَامَةِ

هَكَذَا رَوَيَاهُ وَرَوَاهُ مُعَاذُ بْنُ مُعَاذٍ، عَنْ شُعْبَةَ مَوْقُوفًا، وَكَذَلِكَ رَوَاهُ سُفْيَانُ الثَّوْرِيُّ، عَنْ أَبِي هَاشِمٍ مَوْقُوفًا


Shuabul-Iman-Tamil-.
Shuabul-Iman-TamilMisc-.
Shuabul-Iman-Shamila-2499.
Shuabul-Iman-Alamiah-.
Shuabul-Iman-JawamiulKalim-2517.




  • இதன் இரண்டு அறிவிப்பாளர்தொடரில், இரண்டாவது அறிவிப்பாளர்தொடரில் வரும் அப்துர்ரஹ்மான் பின் அபுல்பக்தரீ அறியப்படாதவர் என்பதால் அது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.

மேலும் பார்க்க : ஹாகிம்-2072 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.