தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Shuabul-Iman-3515

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஆஷுரா தினத்தில் யார் தம் குடும்பத்தாரிடம் தாராளமாக நடந்து கொள்கிறாரோ அல்லாஹ் அந்த வருடம் முழுவதும் அவருக்கு தாராளமாக (அருள்) வழங்குகிறான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(shuabul-iman-3515: 3515)

أَخْبَرَنَا أَبُو سَعْدٍ الْمَالِينِيُّ، أَخْبَرَنَا أَبُو أَحْمَدَ بْنُ عَدِيٍّ، حَدَّثَنَا الْحسَنُ بْنُ عَلِيٍّ الْأَهْوَازِيُّ، حَدَّثَنَا مَعْمَرُ بْنُ سَهْلٍ، حَدَّثَنَا حَجَّاجُ بْنُ نُصَيْرٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ ذَكْوَانَ، عَنْ يَعْلَى بْنِ حَكِيمٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ أَبِي عَبْدِ اللهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ:

مَنْ وَسَّعَ عَلَى عِيَالِهِ وَأَهْلِهِ يَوْمَ عَاشُورَاءَ وَسَّعَ اللهُ عَلَيْهِ سَائِرَ سَنَتِهِ

 

هَذِهِ الْأَسَانِيدُ وَإِنْ كَانَتْ ضَعِيفَةً فَهِيَ إِذَا ضُمَّ بَعْضُهَا إِلَى بَعْضٍ أَخَذَتْ قُوَّةً، وَاللهُ أَعْلَمُ


Shuabul-Iman-Tamil-.
Shuabul-Iman-TamilMisc-3795.
Shuabul-Iman-Shamila-3515.
Shuabul-Iman-Alamiah-.
Shuabul-Iman-JawamiulKalim-3504.




إسناد ضعيف فيه الحجاج بن نصير الفساطيطي وهو ضعيف الحديث ، ومحمد بن ذكوان الأزدي وهو ضعيف الحديث

1 . இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ஹஜ்ஜாஜ் பின் நுஸைர் பற்றி

  • இவர் ஹதீஸ் துறையில் மறுக்கப்பட வேண்டியவர் என்றும் பலவீனமானவர் என்றும் இமாம் அபூஹாத்திம் அர்ராஸீ பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    குறிப்பிட்டுள்ளார்.
  • இவரது ஹதீஸ்கள் செல்லாததாக ஆகி விட்டன என்று அலீ இப்னுல் மதீனீ பிறப்பு ஹிஜ்ரி 161
    இறப்பு ஹிஜ்ரி 234
    வயது: 73
    விமர்சித்துள்ளார்.
  • இவர் உறுதியானவர் அல்ல, பலவீனமானவர் என்று நஸாயியும் இப்னு மயீனும் விமர்சித்துள்ளார்கள். (நூல்: தஹ்தீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும்.1 / 362

2 . மேலும் இதில் வரும் முஹம்மத் பின் தக்வான் என்பவர் பற்றி

  • இமாம்புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    மற்றும் இமாம் அபூஹாத்திம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    உள்ளிட்டோர் இவரை ஹதீஸ் துறையில் புறக்கணிக்கப்பட வேண்டியவர் متروك - பொய் கூறக்கூடியவர் அல்லது அதிகம் தவறிழைப்பவர் என்பதால் ஹதீஸ்கலை அறிஞர்கள் இவர் மத்ரூக்-புறக்கணிக்கப்படவேண்டியவர்-கைவிடப்பட்டவர் என்று கூறுவர்.என்று விமர்சித் துள்ளார்கள். நஸாயி அவர்கள், இவர் உறுதியானவர் அல்ல என்று குறிப்பிட்டுள்ளார். (நூல்: தஹ்தீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும்.3 / 558 ) …

எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

மேலும் பார்க்க : அல்முஃஜமுல் கபீர்-10007 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.