ஷஅபான் மாதத்தின் பாதி இரவு வந்து விட்டால் அதில் நீங்கள் நின்று வணங்குங்கள். அதன் பகலில் நோன்பு பிடியுங்கள். ஏனெனில் சூரியன் மறைந்ததும் முதல் வானத்துக்கு அல்லாஹ் இறங்கி வந்து, என்னிடம் பாவமன்னிப்பு தேடுபவர் உண்டா? நான் அவரின் பாவங்களை மன்னிக்கிறேன்.
வாழ்வாதாரத்தை தேடுபவர் உண்டா? நான் அவருக்கு வாழ்வாதாரம் வழங்குகிறேன். துன்பத்துக்கு ஆளானவர் உண்டா? நான் அவரின் துன்பங்களை நீக்குகின்றேன். இவ்வாறு இதைக் கேட்பவர் உண்டா? அதைக் கேட்பவர் உண்டா? என்று காலை வரை கூறிக் கொண்டே இருக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அலீ (ரலி)
(shuabul-iman-3542: 3542)حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ يُوسُفَ الْأَصْبَهَانِيُّ، أَخْبَرَنَا أَبُو إِسْحَاقَ إِبْرَاهِيمُ بْنُ أَحْمَدَ بْنِ فِرَاسٍ الْمَكِّيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَلِيِّ بْنِ زَيْدٍ الصَّائِغُ، حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، حَدَّثَنَا ابْنُ أَبِي سَبْرَةَ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ مُحَمَّدٍ، عَنْ مُعَاوِيَةَ بْنِ عَبْدِ اللهِ بْنِ جَعْفَرٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
إِذَا كَانَتْ لَيْلَةُ النِّصْفِ مِنْ شَعْبَانَ فَقُومُوا لَيْلَتَهَا، وَصُومُوا يَوْمَهَا، فَإِنَّ اللهَ تَعَالَى يَقُولُ: أَلَا مِنْ مُسْتَغْفِرٍ فَأَغْفِرَ لَهُ، أَلَا مِنْ مُسْتَرْزِقٍ فَأَرْزُقَهُ، أَلَا مِنْ سَائِلٍ فَأُعْطِيَهُ، أَلَا كَذَا أَلَا كَذَا حَتَّى يَطْلُعَ الْفَجْرُ
وأَخْبَرَنَا أَبُو عَبْدِ اللهِ الْحَافِظُ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ حَمْشَاذَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ أَبِي طَالِبٍ، حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْحُلْوَانِيُّ، فَذَكَرَهُ بِإِسْنَادِهِ، وَذَكَرَ فِيهِ لَفْظُ النُّزُولِ، وَقَالَ بَدَلَ السَّائِلِ: ” أَلَا مُبْتَلًى فَأُعَافِيَهُ “، أَلَا كَذَا، غَيْرَ أَنَّهُ قَالَ: عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللهِ بْنِ جَعْفَرٍ، عَنْ أَبِيهِ، وَلَمْ يَذْكُرْ عَلِيًّا، قَالَ إِبْرَاهِيمُ بْنُ أَبِي طَالِبٍ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدٍ مَوْلَى زَيْنَبَ بِنْتِ جَحْشٍ
Shuabul-Iman-Tamil-.
Shuabul-Iman-TamilMisc-.
Shuabul-Iman-Shamila-3542.
Shuabul-Iman-Alamiah-.
Shuabul-Iman-JawamiulKalim-3532.
- இதன் அறிவிப்பாளர் தொடரில் வரும் ராவீ அபூபக்ர் பின் அபூஸப்ரா-இப்னு அபூஸப்ரா என்பவர் பற்றி இமாம் அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இப்னு ஹிப்பான்,பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும். இப்னு அதீ,பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
போன்ற பலர் இவர் ஹதீஸ்களை இட்டுக்கட்டக்கூடியவர் என்று விமர்சித்துள்ளனர். - மேலும் பலரும் இவரை பலவீனமானவர், முன்கருல் ஹதீஸ், விடப்பட்டவர் என்று கூறியுள்ளனர்.
(நூல்: தஹ்தீபுல் கமால்-33/102, அல்காஷிஃப்-5/16, தஹ்தீபுத் தஹ்தீப்-4/489, தக்ரீபுத் தஹ்தீப்-1/1116)
மேலும் பார்க்க: இப்னு மாஜா-1388 .
சமீப விமர்சனங்கள்