தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Shuabul-Iman-8255

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

நபி (ஸல்) அவர்கள், ஹசன் (ரலி) அவர்கள் பிறந்த போது அவர்களின் வலதுக் காதில் பாங்கும், இடதுக் காதில் இகாமத்தும் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

(shuabul-iman-8255: 8255)

وَأَخْبَرَنَا عَلِيُّ بْنُ أَحْمَدَ بْنِ عَبْدَانَ، أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عُبَيْدٍ الصَّفَّارُ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عُمَرَ بْنِ سَيْفٍ السَّدُوسِيُّ، حَدَّثَنَا الْقَاسِمُ بْنُ مُطَيَّبٍ، عَنْ مَنْصُورِ ابْنِ صَفِيَّةَ، عَنْ أَبِي مَعْبَدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ،

أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” أَذَّنَ فِي أُذُنِ الْحَسَنِ بْنِ عَلِيٍّ يَوْمَ وُلِدَ، فَأَذَّنَ فِي أُذُنِهِ الْيُمْنَى، وَأَقَامَ فِي أُذُنِهِ الْيُسْرَى

فِي هَذَيْنِ الْإِسْنَادَيْنِ ضَعْفٌ، قَالَ: ” وَالثَّانِيَةُ أَنْ يُحَنِّكَهُ بِتَمْرٍ، فَإِنْ لَمْ يَجِدْ فَبِحُلْوٍ يُشْبِهُهُ، وَيَنْبَغِي أَنْ يَتَوَلَّى ذَلِكَ مِنْهُ مَنْ يُرْجَى خَيْرُهُ وَبَرَكَتُهُ


Shuabul-Iman-Tamil-.
Shuabul-Iman-TamilMisc-.
Shuabul-Iman-Shamila-8255.
Shuabul-Iman-Alamiah-.
Shuabul-Iman-JawamiulKalim-8105.




إسناد فيه متهم بالوضع وهو محمد بن يونس الكديمي

இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் ஹுஸைன்-பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 458
வயது: 74
இமாம்

2 . அலீ பின் அஹ்மத்

3 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் உபைத்

4 . முஹம்மத் பின் யூனுஸ்

5 . ஹஸன் பின் அம்ர் (உமர் அல்ல) 

6 . காஸிம் பின் முத்தய்யப்

7 . மன்ஸூர் பின் ஸஃபிய்யா

8 . அபூமஃபத்

9 . இப்னு அப்பாஸ் (ரலி)

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-43775-முஹம்மது பின் யூனுஸ் என்பவர் பற்றி இவரும், இவரின் சகோதரரும், இவரின் மகனும் பொய்கூறும் குடும்பம் என்று ஸுலைமான் அஷ்ஷாதகூனீ அவர்கள் கூறியுள்ளார்.
  • மேலும் இவரைப் பற்றி பெரும்பாலான அறிஞர்கள் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்றும், இவர் விடப்படவேண்டியவர் என்றும் விமர்சித்துள்ளனர்.
  • சிலர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.

(நூல்: தஹ்தீபுல் கமால்-27/66, தஹ்தீபுத் தஹ்தீப்-3/741)

  • மேலும் இதில் வரும் ராவீ-12367-ஹஸன் பின் அம்ர் பின் ஸைஃப் என்பவர் பற்றி இவர் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்று இப்னுல் மதீனீ,பிறப்பு ஹிஜ்ரி 161
    இறப்பு ஹிஜ்ரி 234
    வயது: 73
    புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    இமாம் ஆகியோர் கூறியுள்ளனர்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-1/410… )

எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.


5 . இந்தக் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: ஷுஅபுல் ஈமான்-8255 ,


மேலும் பார்க்க: திர்மிதீ-1514 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.