நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அனஸே! நீ அங்கத் தூய்மை (உளூ) செய்யும் போது முழுமையாக செய். அதனால் உனது ஆயுள் அதிகமாக்கப்படும். லுஹா தொழுகை தொழுதுக் கொள். அது முன் சென்ற நல்லோர்களின் தொழுகையாகும். மக்களை சந்திக்கும்போது ஸலாம் கூறிக் கொள். அதனால் உனது நன்மைகள் அதிகமாகும். (உன்னை விட வயதில் குறைந்த) சிறியோர் மீது அன்பு செலுத்து. அதனால் மறுமை நாளில் (சொர்க்கத்தில்) என்னோடு இருப்பாய்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)
…..
(shuabul-iman-8387: 8387)أَخْبَرَنَاهُ أَبُو عَبْدِ اللهِ الْحَافِظُ، قَالَ: نا أَبُو الْعَبَّاسِ مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ، قَالَ: نا مُحَمَّدُ بْنُ عَوْفٍ الطَّائِيُّ، قَالَ: نا مُوسَى بْنُ أَيُّوبَ، قَالَ: نا عَبْدُ اللهِ بْنُ عِصْمَةَ، عَنْ سَعِيدِ بْنِ زَوْنٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
يَا أَنَسُ، أَسْبِغِ الْوُضُوءَ يُزَدْ فِي عُمُرِكَ، وَصَلِّ الضُّحَى فَإِنَّهَا صَلَاةُ الْأَوَّابِينَ قَبْلَكَ، وَسَلِّمْ عَلَى مَنْ لَقِيتَ مِنْ أُمَّتِي تَكْثُرْ حَسَنَاتُكَ، وَارْحَمِ الصَّغِيرَ تُرَافِقْنِي يَوْمَ الْقِيَامَةِ
وَرَوَاهُ أَشْعَثُ بْنُ بَرَازٍ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
أَفْشِ السَّلَامَ تَكْثُرْ حَسَنَاتُكَ، وَسَلِّمْ عَلَى أَهْلِ بَيْتِكَ يَكْثُرْ خَيْرُ بَيْتِكَ
Shuabul-Iman-Tamil-.
Shuabul-Iman-TamilMisc-.
Shuabul-Iman-Shamila-8387.
Shuabul-Iman-Alamiah-.
Shuabul-Iman-JawamiulKalim-8231.
إسناد فيه متهم بالوضع وهو سعيد بن زون الثعلبي
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-17302-ஸயீத் பின் ஸவ்ன் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்று சந்தேகிக்கப்பட்டவர் என்பதால் இவர் நிராகரிக்கப்பட்டவர். எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடர்.
மேலும் பார்க்க: முஸ்னத் அபீ யஃலா-3624 .
சமீப விமர்சனங்கள்