தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Shuabul-Iman-8855

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மண்ணறையில் இருக்கும் மரணித்தவர், “யாராவது வந்து காப்பாற்ற மாட்டார்களா?” என்ற எண்ணத்தில் நீரில் மூழ்கி தத்தளிப்பவரைப் போன்றவர் ஆவார்.

தனது தந்தை, அல்லது தாய், அல்லது சகோதரன், அல்லது நண்பர்கள் ஆகியோரிடமிருந்து தமக்கு வந்து சேரும் துஆவை (பிராத்தனையை) எதிர்பார்க்கின்றார்.

அந்தப் பிரார்த்தனை அவரை வந்தடைந்தால், உலகையும், அதில் உள்ள அனைத்தையும் விட அது அவருக்கு மிகவும் பிரியமானதாக இருக்கும்.

நிச்சயமாக, அல்லாஹ் மண்ணறையிலுள்ளவர்களுக்கு, பூமியில் வாழ்பவர்களின் பிரார்த்தனையால் மலைகளைப் போன்ற நன்மைகளை வழங்குவான். மேலும், உயிருள்ளவர்கள் மரணித்தவர்களுக்குச் செய்யும் அன்பளிப்பு, அவர்களுக்காகப் பாவமன்னிப்பு தேடுவதுதான்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

(shuabul-iman-8855: 8855)

أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللهِ الْحَافِظِ فِي فَوَائِدِ الشَّيْخِ وَأَبُو بَكْرٍ مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ الْأَشْنَانِيُّ قَالَا أنا أَبُو عَلِيٍّ الْحُسَيْنُ بْنُ عَلِيٍّ الْحَافِظُ نا الْفَضْلُ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللهِ بْنِ الْحَارِثِ بْنِ سُلَيْمَانَ الْأَنْطَاكِيُّ نا مُحَمَّدُ بْنُ جَابِرِ بْنِ أَبِي عَيَّاشٍ الْمِصِّيصِيُّ نا عَبْدُ اللهِ بْنُ الْمُبَارَكِ نا يَعْقُوبُ بْنُ الْقَعْقَاعِ عَنْ مُجَاهِدٍ عَنْ عَبْدِ اللهِ بْنِ عَيَّاشِ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

مَا الْمَيِّتُ فِي الْقَبْرِ إِلَّا كَالْغَرِيقِ الْمُتَغَوِّثِ يَنْتَظِرُ دَعْوَةً تَلْحَقُهُ مِنْ أَبٍ أَوْ أُمٍّ أَوْ أَخٍ أَوْ صَدِيقٍ فَإِذَا لَحِقَتْهُ كَانَ أَحَبُّ إِلَيْهِ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا، وَإِنَّ اللهَ عَزَّ وَجَلَّ لَيُدْخِلُ عَلَى أَهْلِ الْقُبُورِ مِنْ دُعَاءِ أَهْلِ الْأَرْضِ أَمْثَالَ الْجِبَالِ وَإِنَّ هَدِيَّةَ الْأَحْيَاءِ إِلَى الْأَمْوَاتِ الِاسْتِغْفَارُ لَهُمْ


Shuabul-Iman-Tamil-.
Shuabul-Iman-TamilMisc-.
Shuabul-Iman-Shamila-8855.
Shuabul-Iman-Alamiah-.
Shuabul-Iman-JawamiulKalim-8690.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 458
வயது: 74
இமாம்.

2. ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
இமாம், 3. அபூபக்ர்-அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் முஹம்மத் பின் இப்ராஹீம்-அல்உஷ்னானீ.

4 . அபூஅலீ-ஹுஸைன் பின் அலீ

5 . ஃபள்ல் பின் முஹம்மத் பின் அப்துல்லாஹ் பின் ஹாரிஸ் பின் ஸுலைமான்-அல்அன்த்தாகீ

6 . முஹம்மத் பின் ஜாபிர் பின் அபூஅய்யாஷ்-அல்மிஸ்ஸீஸீ

7 . அப்துல்லாஹ் பின் முபாரக்

8 . யஃகூப் பின் கஃகாஃ

9 . முஜாஹித்

10 . இப்னு அப்பாஸ் (ரலி)


மேலும் பார்க்க: ஷுஅபுல் ஈமான்-7527.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.