6654. அறிவிப்பாளர்: அம்ர் பின் ஜுமைஃ அபூஉஸ்மான்.
இவர் எகிப்து நாட்டின் ஹல்வான் என்ற நகரத்தின் நீதிபதி ஆவார். யஹ்யா பின் ஸயீத் அல்அன்ஸாரீ, ஸுலைமான் அல்அஃமஷ், லைஸ் பின் அபூஸுலைம், ஜுவைபிர் பின் ஸயீத் ஆகியோரிடமிருந்து இவர் ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
அபூஇப்ராஹீம் அத்தர்ஜுமானி, ஸுரைஜ் பின் யூனுஸ், அபூஅம்ர் அத்தூரீ, மற்றும் சிலரும் இவரிடமிருந்து ஹதீஸ்களை அறிவித்துள்ளனர்.
இவர் பிரபலமானவர்களின் வழியாக முன்கரான செய்திகளை அறிவிப்பவர். பலமானவர்களின் வழியாக இட்டுக்கட்டப்பட்ட-பொய்யான செய்திகளை அறிவிப்பவர் ஆவார்.
இவர் அறிவித்துள்ள செய்திகள்:
திருமணம் செய்யுங்கள். ஆனால் விவாகரத்து செய்யாதீர்கள். விவாகரத்து செய்வதால் அல்லாஹ்வின் அர்ஷ் நடுங்குகிறது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அலீ (ரலி)
(தாரீகு பக்தாத்: 4103)عمرو بْن جميع، أَبُو عثمان:
قاضي حلوان. حدث عَنْ يحيى بْن سعيد الأنصاري وسليمان الأعمش، وليث بْن أبي سليم، وجويبر بْن سعيد. روى عنه أَبُو إبراهيم الترجماني، وسريج بْن يونس، وأبو عمرو الدوري، وغيرهم. وكان يروي المناكير عَنِ المشاهير، والموضوعات عَنِ الأثبات.
أَخْبَرَنَا عَلِيُّ بْنُ أَحْمَدَ بْنِ عمر المقرئ، حدّثنا الحسن بن سعيد الأدمي- بالموصل- حدّثنا محمّد بن محمود الصيدلاني، حدّثنا أبو إبراهيم الترجماني، حَدَّثَنَا عَمْرُو بْنُ جُمَيْعٍ عَنْ جُوَيْبِرٍ عَنِ الضَّحَّاكِ عَنِ النَّزَّالِ بْنِ سَبْرَةَ عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«تَزَوَّجُوا وَلا تُطَلِّقُوا فَإِنَّ الطَّلاقَ يَهْتَزُّ لَهُ الْعَرْشُ»
Tarikh-Baghdad-Tamil-.
Tarikh-Baghdad-TamilMisc-.
Tarikh-Baghdad-Shamila-4103.
Tarikh-Baghdad-Alamiah-.
Tarikh-Baghdad-JawamiulKalim-4100.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ அம்ர் பின் ஜுமைஃ, ராவீ ஜாபிர் பின் ஸயீத் என்ற ஜுவைபிர் பின் ஸயீத் போன்றோர் பொய்யர்கள்.
(நூல்கள்: லிஸானுல் மீஸான்-5788, தக்ரீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், தஹ்தீபுத் தஹ்தீபின் சுருக்கம்; இதில் அறிவிப்பாளர்களின் தரம் கூறியிருப்பார்1/205)
- மேலும் ராவீ-11973-ஹஸன் பின் ஸயீத், ராவீ-42738-முஹம்மது பின் மஹ்மூத் போன்றோர் யாரென அறியப்படாதவர்கள் என்பதால் இது இட்டுக்கட்டப்பட்ட, மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
மேலும் பார்க்க: அக்பாரு அஸ்பஹான்-240 .
சமீப விமர்சனங்கள்