தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tayalisi-1093

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

மகத்துவமிக்க உமது இறைவனின் பெயரைத் துதிப்பீராக! (அல்குர்ஆன் 56 : 96 ஃபஸப்பிஹ் பிஸ்மி ரப்பிகல் அளீம்) என்ற வசனம் இறங்கிய போது இதை உங்கள் ருகூஃவில் ஆக்கிக் கொள்ளுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

உயர்ந்த உனது இறைவனின் பெயரைத் துதிப்பீராக! (அல்குர்ஆன் 87 : 1 ஸப்பிஹிஸ்ம ரப்பிகல்அஃலா) என்ற வசனம் இறங்கியதும் இதை உங்களுடைய சுஜூதில் ஆக்கிக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)

(tayalisi-1093: 1093)

حَدَّثَنَا يُونُسُ قَالَ: حَدَّثَنَا أَبُو دَاوُدَ قَالَ: حَدَّثَنَا ابْنُ الْمُبَارَكِ، عَنْ مُوسَى بْنِ أَيُّوبَ الْغَافِقِيِّ، عَنْ عَمِّهِ إِيَاسِ بْنِ عَامِرٍ عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، قَالَ:

لَمَّا أُنْزِلَتْ {فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِيمِ} [الواقعة: 74] قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اجْعَلُوهَا فِي الرُّكُوعِ» فَلَمَّا نَزَلَتْ سَبَّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى [الأعلى: 1] قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اجْعَلُوهَا فِي سُجُودِكُمْ»


Tayalisi-Tamil-.
Tayalisi-TamilMisc-.
Tayalisi-Shamila-1093.
Tayalisi-Alamiah-.
Tayalisi-JawamiulKalim-1084.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் இயாஸ் பின் ஆமிர் பற்றி
  • இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 80
    இமாம் சுமாரானவர் எனவும்,
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் நம்பகமானவர் எனவும்,
  • தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    அவர்கள் இவர் பலமானவர் அல்ல எனவும் கூறியுள்ளனர். (நூல்: தஹ்தீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும்.1 / 196 )

இந்த செய்தியை ஷுஐப் அல்அர்னாவூத் பிறப்பு ஹிஜ்ரி 1346
இறப்பு ஹிஜ்ரி 1438
வயது: 92
அவர்கள் ஹஸன் என்றும், அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள் பலவீனமானது என்றும் கூறியுள்ளனர்.

  • இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்கள் மூஸா பின் அய்யூப் தனது தந்தையின் சகோதரரிடமிருந்து (அதாவது இயாஸ் பின் ஆமிரிடமிருந்து) நபியின் கூற்றாக அறிவிக்கும் செய்திகள் பலவீனமானவை என்று கூறியுள்ளார். (நூல்: இப்னு ரஜப் 5 / 60 )
  • இப்னுல் மதீனீ பிறப்பு ஹிஜ்ரி 161
    இறப்பு ஹிஜ்ரி 234
    வயது: 73
    அவர்களும் மூஸா பின் அய்யூப் தனது தந்தையின் சகோதரரிடமிருந்து நபியின் கூற்றாக அறிவிக்கும் செய்திகளை மறுக்கிறேன் என்று கூறியுள்ளார். (நூல்: ஸுஆலாது இப்னு அபீஷைபா…எண்-229)

எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க : முஸ்னத் தயாலிஸீ-1093 , அஹ்மத்-17414 , தாரிமீ-1344 , அபூதாவூத்-869 , 870 , இப்னு மாஜா-887 , இப்னு குஸைமா-600 , 601 , 670 , இப்னு ஹிப்பான்-1898 , ஹாகிம்-817 , 818 , 3783 , குப்ரா பைஹகீ-2555 , 2556 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.