ஆதமுடைய மகன் (மனிதன்) காலையில் எழுந்தவுடன் மற்ற உறுப்புகள் அனைத்தும் நாவைக் கண்டு பயப்படுகின்றன. அவை நாவை நோக்கி “நாவே! எங்கள் விஷயத்தில் அல்லாஹ்வை பயந்து கொள்! நாங்கள் உன்னைச் சார்ந்துள்ளோம். நீ நேராக இருந்தால் நாங்களும் நேராக இருப்போம். நீ கோணலாகி விட்டால் நாங்களும் கோணலாகி விடுவோம்!’ எனக் கூறுகின்றன” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி)
(tayalisi-2323: 2323)حَدَّثَنَا أَبُو دَاوُدَ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَبِي الصَّهْبَاءِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ حَمَّادٌ: وَلَا أَعْلَمُهُ إِلَّا مَرْفُوعًا، قَالَ:
الْأَعْضَاءُ تُكَفِّرُ اللِّسَانَ، تَقُولُ: اتَّقِ اللَّهَ فِينَا، فَإِنَّكَ إِنِ اسْتَقَمْتَ اسْتَقَمْنَا، وَإِنِ اعْوَجَجْتَ اعْوَجَجْنَا
Tayalisi-Tamil-.
Tayalisi-TamilMisc-.
Tayalisi-Shamila-2323.
Tayalisi-Alamiah-.
Tayalisi-JawamiulKalim-2309.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் கூஃபாவை சேர்ந்த அபுஸ் ஸஹ்பாவை இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.மட்டுமே நம்பகமானவர் பட்டியலில் சேர்த்துள்ளார். (பஸராவை சேர்ந்த ஸுஹைப் அபுஸ்ஸஹ்பா பலவீனமானவராவார்) - இவரிடமிருந்து மிக பலமான அறிவிப்பாளர் ஹம்மாத் பின் ஸைத் அறிவித்துள்ளார் என்பதாலும், மேலும் இரு அறிவிப்பாளர்கள் அறிவித்திருப்பதாலும் அபுஸ் ஸஹ்பா அறியப்படாதவர் என்று கூறமுடியாது.
- தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்கள் கூஃபாவை சேர்ந்த அபுஸ் ஸஹ்பாவை பலமானவர் என்றும், பஸராவை சேர்ந்த ஸுஹைப் அபுஸ்ஸஹ்பாவை பலவீனமானவர் பட்டியலிலும் சேர்த்துள்ளார். - இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)மக்பூல் தரத்தில் சேர்த்துள்ளார்.
ثقة
الكاشف في معرفة من له رواية في الكتب الستة: (5 / 65)
مقبول
تقريب التهذيب: (1 / 1163)
இந்த செய்தி ஹஸன் தரத்தில் அமைந்த செய்தி என்று அல்பானி,பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
ஷுஐப் அல்அர்னாவூத் பிறப்பு ஹிஜ்ரி 1346
இறப்பு ஹிஜ்ரி 1438
வயது: 92
போன்றோர் கூறியுள்ளனர்.
1 . இந்தக் கருத்தில் அபூஸயீத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-2323 , அஹ்மத்-11908 , திர்மிதீ-2407 , முஸ்னத் அபீ யஃலா-1185 ,
சமீப விமர்சனங்கள்