தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-11908

A- A+


ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

“மனிதனின் உறுப்புகள் அனைத்தும், மனிதன் காலையில் கண்விழிக்கும் போது, நாவிடம் (நாவு தவறு செய்வதைத் தடுத்து) நன்மையில் உறுதியாக இருக்கும்படி வேண்டுகின்றன.

‘நீ எங்களுக்காக அல்லாஹ்வுக்கு அஞ்சிக்கொள். நீ நேர்வழியில் இருந்தால், நாங்களும் நேர்வழியில் இருப்போம். நீ கோணலானால், நாங்களும் கோணலாவோம்’ எனக் கூறுகின்றன” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)

இதன் அறிவிப்பாளரான ஹம்மாத் பின் ஸைத் அவர்கள், இதை அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் சொல்லாகத்தான் அறிவித்தார்கள் என்று நான் அறிகிறேன் என்று கூறினார்.

(முஸ்னது அஹ்மத்: 11908)

حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، حَدَّثَنَا أَبُو الصَّهْبَاءِ قَالَ: سَمِعْتُ سَعِيدَ بْنَ جُبَيْرٍ يُحَدِّثُ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، لَا أَعْلَمُهُ إِلَّا رَفَعَهُ قَالَ:

إِذَا أَصْبَحَ ابْنُ آدَمَ، فَإِنَّ أَعْضَاءَهُ تُكَفِّرُ لِلِّسَانِ، تَقُولُ: اتَّقِ اللَّهَ فِينَا، فَإِنَّكَ إِنْ اسْتَقَمْتَ اسْتَقَمْنَا، وَأَنْ اعْوَجَجْتَ، اعْوَجَجْنَا


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-11472.
Musnad-Ahmad-Shamila-11908.
Musnad-Ahmad-Alamiah-11472.
Musnad-Ahmad-JawamiulKalim-11690.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம்-அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் முஹம்மத் பின் ஹன்பல்

2 . அஃப்பான் பின் முஸ்லிம்

3 . ஹம்மாத் பின் ஸைத்

4 . அபுஸ்ஸஹ்பாஃ-அல்கூஃபீ

5 . ஸயீத் பின் ஜுபைர்

6 . அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)-ஸஃத் பின் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
(ரலி)


ஆய்வின் சுருக்கம்: 

இந்தச் செய்தியை ஹம்மாத் பின் ஸைத் அவர்களிடமிருந்து சிலர் நபியின் சொல்லாகவும், சிலர் நபித்தோழரின் சொல்லாகவும் அறிவித்துள்ளனர்.

திர்மிதீ இமாம் அவர்கள் முஹம்மத் பின் மூஸா என்பவரின் மர்ஃபூவான செய்தியை மட்டும் கூறி அவரின் செய்தியை விட வேறு சிலர் அறிவிக்கும் மவ்கூஃபான செய்திக்கு முன்னுரிமை தந்துள்ளார்.

ஆனால் முஹம்மத் பின் மூஸாவைப் போன்று அதிகமானவர்கள் இதை நபியின் சொல்லாக அறிவித்துள்ளனர் என்பதால் நாம் இதற்கே முன்னுரிமை தருகிறோம்.


விரிவான தகவல்:

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-1544-அபுஸ்ஸஹ்பாஃ-அல்கூஃபீ அவர்களிடமிருந்து ஹம்மாத் பின் ஸைத், ஸயீத் பின் ஸைத், ஸயீத் பின் அபூஹிலால் போன்ற பலமான அறிவிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். ஹஸன் தரத்தில் உள்ள உமாரா பின் ஸாதான் என்பவரும் அறிவித்துள்ளார்.
  • இப்னு ஹிப்பான்,பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    ஆகியோர், இவர் பலமானவர் என்று கூறியுள்ளனர்.
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள், இவரை மக்பூல் எனும் தரத்தில் கூறியுள்ளார்.
  • இவரைப் பற்றி வேறு விமர்சனம் இல்லை.

(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-9/395, தஹ்தீபுல் கமால்-33/430, அல்காஷிஃப்-5/65, தஹ்தீபுத் தஹ்தீப்-4/541, தக்ரீபுத் தஹ்தீப்-1/1163)

இதுபோன்ற நிலையில் உள்ளவர்களை சிலர் ஹஸன் தரத்தில் சேர்ப்பதுண்டு.


இந்த செய்தி ஹஸன் தரத்தில் அமைந்த செய்தி என்று அல்பானி,பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
ஷுஐப் அல்அர்னாவூத் பிறப்பு ஹிஜ்ரி 1346
இறப்பு ஹிஜ்ரி 1438
வயது: 92
போன்றோர் கூறியுள்ளனர்.


திர்மிதீ இமாம் அவர்கள், இந்தச் செய்தியை சிலர் நபித்தோழரின் சொல்லாக அறிவித்துள்ளனர் என்று கூறி அதற்கே முன்னுரிமை தந்துள்ளார்.

ஹம்மாத் பின் ஸைத் அவர்களிடமிருந்து அறிவிக்கும் 11 க்கும் மேற்பட்ட அறிவிப்பாளர்கள் இதை ஹம்மாத் அவர்கள் நபியின் சொல்லாக குறிப்பிட்டார் என்ற கருத்தில் அறிவித்துள்ளனர். இவற்றில் ஒன்றிரண்டு பலவீனமான அறிவிப்பாளர்தொடர்களை தவிர மற்றவை சரியானவைகளாகும்.

அவர்கள் விவரம்:

1 . பிஷ்ர் பின் ஸரீ

பார்க்க: அஸ்ஸுஹ்த்-இப்னுல் முபாரக்-1012,


2 . தயாலிஸீ

பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-2323,


3 . அஃப்பான் பின் முஸ்லிம்

பார்க்க: அஹ்மத்-11908,


4 . ஸுலைமான் பின் ஹர்ப்

பார்க்க: முஸ்னத் அப்து பின் ஹுமைத்-979,


5 . முஹம்மத் பின் மூஸா

பார்க்க: திர்மிதீ-2407,


6 . ஸாலிஹ் பின் அப்துல்லாஹ்

பார்க்க: திர்மிதீ-2407,


7 . இம்ரான் பின் மூஸா

பார்க்க: அஸ்ஸம்து-இப்னு அபுத்துன்யா-12, அல்வரஃ-இப்னு அபுத்துன்யா-91,


8 . முஹம்மத் பின் ஃபள்ல்

பார்க்க: முஸ்னத் அபீ யஃலா-1185,


9 . முஸத்தத் பின் முஸர்ஹத்

பார்க்க: அமலுல் யவ்மி வல்லைலா-இப்னுஸ் ஸன்னீ-1,


10 . அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ பிறப்பு ஹிஜ்ரி 133
இறப்பு ஹிஜ்ரி 198
வயது: 65
அஹ்மத் இமாம் அவர்களின் ஆசிரியர்களில் ஒருவர்; அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.

பார்க்க: அத்தம்ஹீத்-21/40,


11 . முஹம்மத் பின் உபைத்

பார்க்க: அத்தம்ஹீத்-21/40,


நபித்தோழரின் சொல்லாக அறிவித்தவர்கள்:

1 . ஹம்மாத் பின் உஸாமா

பார்க்க: அஸ்ஸுஹ்த்-ஹன்னாத்-2/532, திர்மிதீ-2407,


2 . முளஃப்பர் பின் முத்ரிக்-அபூகாமில்

பார்க்க: அஸ்ஸுஹ்த்-அஹ்_மத்-1086,


3 . இஸ்ஹாக் பின் அபூஇஸ்ராயீல்

பார்க்க: அத்தம்ஹீத்-21/41,


4 . அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ பிறப்பு ஹிஜ்ரி 133
இறப்பு ஹிஜ்ரி 198
வயது: 65
அஹ்மத் இமாம் அவர்களின் ஆசிரியர்களில் ஒருவர்; அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
– யஹ்யா பின் ஸகரிய்யாவின் அறிவிப்பு

பார்க்க: அத்தம்ஹீத்-21/41,


மேலும் ஹம்மாத் பின் ஸைத் அவர்களுக்கு மிக நெருக்கமான, அவரிடமிருந்து அதிக செய்திகளை அறிவித்துள்ள ஸுலைமான் பின் ஹர்ப் அவர்கள் இதை நபியின் சொல்லாகவே அறிவித்துள்ளார்.


இதை சுருக்கமாக சொல்வென்றால் இந்தச் செய்தியை சில நேரம் நபியின் சொல்லாகவும், சில சமயம் நபித்தோழரின் சொல்லாகவும் அறிவித்தது ஹம்மாத் பின் ஸைத் அவர்கள் தான்.

ஆரம்பத்தில் இவரிடமிருந்து கேட்டு அறிவித்தவர்கள் நபியின் சொல் அமைப்பில் அறிவித்துள்ளனர். பிறகு கேட்டவர்கள், ஹம்மாத் பின் ஸைத் அவர்களுக்கு மறதி ஏற்பட்டு இதில் சந்தேகம் ஏற்பட்டதால் நபித்தோழரின் சொல் போன்ற அமைப்பில் அறிவித்துள்ளனர்.

இது போன்ற சந்தேகம் ஹம்மாத் பின் ஸைத் அவர்களுக்கு பிற்காலத்தில் ஏற்பட்டது என்பதால் ஹதீஸ்கலை அறிஞர்கள் இதை பொருட்படுத்துவதில்லை. ஆரம்பத்தில் இவரிடமிருந்து கேட்டு அறிவித்தவர்களின் செய்திக்கு முன்னுரிமை தந்து அதன்படி முடிவு செய்கின்றனர்.

பார்க்க: ஹம்மாத் பின் ஸைத்.


1 . இந்தக் கருத்தில் அபூஸயீத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

நபி (ஸல்) அவர்களின் சொல்லாக வந்துள்ளவை:

பார்க்க: அஸ்ஸுஹ்த்-இப்னுல் முபாரக்-1012, முஸ்னத் தயாலிஸீ-2323, அஹ்மத்-11908, முஸ்னத் அப்து பின் ஹுமைத்-979, திர்மிதீ-2407, அஸ்ஸம்து-இப்னு அபுத்துன்யா-12, அல்வரஃ-இப்னு அபுத்துன்யா-91, முஸ்னத் அபீ யஃலா-1185, அமலுல் யவ்மி வல்லைலா-இப்னுஸ் ஸன்னீ-1, அத்தம்ஹீத்-21/40,


  • அஸ்ஸுஹ்த்-இப்னுல் முபாரக்-1012.

الزهد والرقائق لابن المبارك والزهد لنعيم بن حماد (1/ 358)
1012 – أَخْبَرَكُمْ أَبُو عُمَرَ بْنُ حَيَوَيْهِ قَالَ: حَدَّثَنَا يَحْيَى قَالَ: حَدَّثَنَا الْحُسَيْنُ قَالَ: أَخْبَرَنَا بِشْرُ بْنُ السَّرِيِّ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَبِي الصَّهْبَاءِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ – قَالَ حَمَّادٌ: وَلَا أَعْلَمُهُ إِلَّا رَفَعَهُ – قَالَ: ” إِذَا أَصْبَحَ ابْنُ آدَمَ كَفَرَتْ جَوَارِحُهُ لِلِسَانِهِ، فَقَالَتِ: اتَّقِ اللَّهَ فِينَا، فَإِنَّكَ إِذَا اسْتَقَمْتَ اسْتَقَمْنَا، وَإِنِ اعْوَجَجْتَ اعْوَجَجْنَا “


  • முஸ்னத் அப்து பின் ஹுமைத்-979.

المنتخب من مسند عبد بن حميد ت صبحي السامرائي (ص: 302)
979 – حَدَّثَنِي سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، ثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَبِي الصَّهْبَاءِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ أَبِي سَعِيدٍ، يَرْفَعُهُ قَالَ: ” إِذَا أَصْبَحَ ابْنُ آدَمَ، فَإِنَّ الْأَعْضَاءَ كُلَّهَا تُكَفِّرُ اللِّسَانَ، تَقُولُ: اتَّقِ اللَّهَ فِينَا إِنِ اسْتَقَمْتَ اسْتَقَمْنَا، وَإِنِ اعْوَجَجْتَ اعْوَجَجْنَا “


  • அஸ்ஸம்து-இப்னு அபுத்துன்யா-12.

الصمت لابن أبي الدنيا (ص: 49)
12 – حَدَّثَنِي عِمْرَانُ بْنُ مُوسَى يَعْنِي الْقَزَّازَ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَبِي الصَّهْبَاءِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ أَبِي سَعِيدٍ قَالَ، أُرَاهُ رَفَعَهُ قَالَ: ” إِذَا أَصْبَحَ ابْنُ آدَمَ أَصْبَحَتِ الْأَعْضَاءُ كُلُّهَا تُكَفِّرُ اللِّسَانَ تَقُولُ: اتَّقِ اللَّهَ فِينَا، فَإِنَّكَ إِنِ اسْتَقَمْتَ اسْتَقَمْنَا، وَإِنِ اعْوَجَجْتَ اعْوَجَجْنَا “


  • அல்வரஃ-இப்னு அபுத்துன்யா-91.

الورع لابن أبي الدنيا (ص: 75)
91 – حَدَّثَنِي عِمْرَانُ بْنُ مُوسَى الْبَصْرِيُّ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَبِي الصَّهْبَاءِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ أَحْسِبُهُ رَفَعَهُ قَالَ: ” إِذَا أَصْبَحَ ابْنُ آدَمَ كَفَّرَتِ الْأَعْضَاءُ كُلُّهَا اللِّسَانَ تَقُولُ: اتَّقِ اللَّهَ فِينَا؛ فَإِنَّكَ إِنِ اسْتَقَمْتَ اسْتَقَمْنَا وَإِنِ اعْوَجَجْتَ اعْوَجَجْنَا “


  • அமலுல் யவ்மி வல்லைலா-இப்னுஸ் ஸன்னீ-1.

عمل اليوم والليلة لابن السني (ص: 4)
أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ الْفَضْلُ بْنُ الْحُبَابِ الْجُمَحِيُّ، حَدَّثَنَا مُسَدَّدُ بْنُ مُسَرْهَدٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَبِي الصَّهْبَاءِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ – أَظُنُّهُ رَفَعَهُ – فَقَالَ: ” إِذَا أَصْبَحَ ابْنُ آدَمَ، فَإِنَّ الْأَعْضَاءَ تُكَفِّرُ اللِّسَانَ وَتَقُولُ: اتَّقِ اللَّهَ فِينَا، فَإِنِ اسْتَقَمْتَ اسْتَقَمْنَا، وَإِنِ اعْوَجَجْتَ اعْوَجَجْنَا “


  • அத்தம்ஹீத்-21/40.

التمهيد لابن عبد البر (21/ 40):
حَدَّثَنَاهُ أَحْمَدُ بْنُ فَتْحٍ قَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَحْمَدَ بْنِ حامد بن ثرثال البغدادي قَالَ حَدَّثَنَا الْحَسَنُ بْنُ الطَّيِّبِ بْنِ حَمْزَةَ الْبَلْخِيُّ قَالَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ بْنِ حُبَابٍ قَالَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ قَالَ حَدَّثَنَا أبو الصهباء عن سعيد ابن جُبَيْرٍ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ يَرْفَعُهُ فَذَكَرَهُ


التمهيد لابن عبد البر (21/ 40):
وَأَخْبَرَنَا خَلَفُ بْنُ قَاسِمٍ حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ الْمُبَارَكِ حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ أَحْمَدَ الْبَغْدَادِيُّ حَدَّثَنَا يعقوب بن إبراهيم الدورقي حدثنا عبد الرحمان بْنُ مَهْدِيٍّ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ أَبِي الصَّهْبَاءِ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم فذكره بمعناه مَرْفُوعًا 

قَالَ أَبُو يُوسُفَ يَعْقُوبُ بْنُ الْمُبَارَكِ هَكَذَا وَجَدُتُهُ فِي كِتَابِي عَنْ أَبِي يَعْقُوبَ الْكَاغَذِيِّ


நபித்தோழரின் சொல்லாக வந்துள்ளவை.

பார்க்க: அஸ்ஸுஹ்த்-ஹன்னாத்-2/532, அஸ்ஸுஹ்த்-அஹ்_மத்-1086, திர்மிதீ-2407, அத்தம்ஹீத்-21/41,


  • அஸ்ஸுஹ்த்-ஹன்னாத்-2/532.

الزهد لهناد بن السري (2/ 532)
حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ حَمَّادِ بْنِ زَيْدٍ، ثنا أَبُو الصَّهْبَاءِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: ” إِذَا أَصْبَحَ ابْنُ آدَمَ فَإِنَّ الْأَعْضَاءَ كُلَّهَا تُكَفِّرُ اللِّسَانَ تَقُولُ: اتَّقِ اللَّهَ فِينَا؛ فَإِنَّكَ إِنِ اسْتَقَمْتَ اسْتَقَمْنَا لَكَ , وَإِنِ اعْوَجَجْتَ اعْوَجَجْنَا


  • அஸ்ஸுஹ்த்-அஹ்_மத்-1086.

الزهد لأحمد بن حنبل (ص: 160)
1086 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا أَبُو كَامِلٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَبِي الصَّهْبَاءِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: إِذَا أَصْبَحَ الرَّجُلُ فَإِنَّ أَعْضَاءَهُ تُكَفِّرُ اللِّسَانَ تَقُولُ: اتَّقِ اللَّهَ فِينَا فَإِنَّكَ إِنِ اسْتَقَمْتَ اسْتَقَمْنَا وَإِنِ اعْوَجَجْتَ اعْوَجَجْنَا “


  • அத்தம்ஹீத்-21/41.

التمهيد لابن عبد البر (21/ 41):
وَحَدَّثَنَاهُ يَحْيَى بْنُ زَكَرِيَّاءَ عَنْ يَعْقُوبٍ الدَّوْرَقِيِّفَلَمْ يُجِزْ بِهِ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّقَالَ وَحَدَّثَنَاهُ إِسْحَاقُ بْنُ أَبِي إِسْرَائِيلَ قَالَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ أَبِي الصَّهْبَاءِ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ مَوْقُوفًا

(عَنْ يَعْقُوبٍ الدَّوْرَقِيِّ عن عبد الرحمان بْنُ مَهْدِيٍّ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ أَبِي الصَّهْبَاءِ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ) 


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.