“மனிதனின் உறுப்புகள் அனைத்தும், மனிதன் காலையில் கண்விழிக்கும் போது, நாவிடம் (நாவு தவறு செய்வதைத் தடுத்து) நன்மையில் உறுதியாக இருக்கும்படி வேண்டுகின்றன.
‘நீ எங்களுக்காக அல்லாஹ்வுக்கு அஞ்சிக்கொள். நீ நேர்வழியில் இருந்தால், நாங்களும் நேர்வழியில் இருப்போம். நீ கோணலானால், நாங்களும் கோணலாவோம்’ எனக் கூறுகின்றன” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இந்தச் செய்தி ஹன்னாத் —> அபூஉஸாமா —> ஹம்மாத் பின் ஸைத் என்ற அறிவிப்பாளர்தொடரில் நமக்கு கிடைத்துள்ளது. ஆனால் இதில் நபியின் சொல்லாக வரவில்லை. இது முஹம்மத் பின் மூஸா அவர்களின் செய்தியை விட மிகச் சரியானதாகும்.
இந்த ஹதீஸை நாம் ஹம்மாத் பின் ஸைத் வழியாகவே அறிகிறோம். மேலும், ஹம்மாத் பின் ஸைத் அவர்களிடமிருந்து இந்த ஹதீஸை பலர் அறிவித்துள்ளனர். அவர்கள் இதை நபியின் சொல்லாக அறிவிக்கவில்லை.
மேலம் இந்தச் செய்தி ஸாலிஹ் பின் அப்துல்லாஹ் —> ஹம்மாத் பின் ஸைத் —> அபுஸ்ஸஹ்பாஃ —> ஸயீத் பின் ஜுபைர் —> அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரிலும் நமக்கு கிடைத்துள்ளது.
இதன் அறிவிப்பாளரான ஹம்மாத் பின் ஸைத் அவர்கள் இது நபி (ஸல்) அவர்களின் சொல் என்றே நான் எண்ணுகிறேன் எனக் கூறி மேற்கண்டவாறு அறிவித்தார்.
(திர்மிதி: 2407)
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُوسَى البَصْرِيُّ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَبِي الصَّهْبَاءِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ، رَفَعَهُ قَالَ:
إِذَا أَصْبَحَ ابْنُ آدَمَ فَإِنَّ الأَعْضَاءَ كُلَّهَا تُكَفِّرُ اللِّسَانَ فَتَقُولُ: اتَّقِ اللَّهَ فِينَا فَإِنَّمَا نَحْنُ بِكَ، فَإِنْ اسْتَقَمْتَ اسْتَقَمْنَا وَإِنْ اعْوَجَجْتَ اعْوَجَجْنَا
حَدَّثَنَا هَنَّادٌ قَالَ: حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ حَمَّادِ بْنِ زَيْدٍ، «نَحْوَهُ وَلَمْ يَرْفَعْهُ،
وَهَذَا أَصَحُّ مِنْ حَدِيثِ مُحَمَّدِ بْنِ مُوسَى»،: «هَذَا حَدِيثٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ حَمَّادِ بْنِ زَيْدٍ، وَقَدْ رَوَاهُ غَيْرُ وَاحِدٍ عَنْ حَمَّادِ بْنِ زَيْدٍ، وَلَمْ يَرْفَعُوهُ» حَدَّثَنَا صَالِحُ بْنُ عَبْدِ اللَّهِ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَبِي الصَّهْبَاءِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ، قَالَ: أَحْسِبُهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَكَرَ نَحْوَهُ
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-2331.
Tirmidhi-Shamila-2407.
Tirmidhi-Alamiah-2331.
Tirmidhi-JawamiulKalim-2344.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் முஹம்மது பின் மூஸா பற்றி
- அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
அவர்கள் பலவீனமானவர் என்றும், - நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
அவர்கள் நம்பகமானவர் என்றும் கூறியுள்ளார்கள். - இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள், மக்பூல் தரத்தில் உள்ளவர் என்று கூறியுள்ளார். அதாவது இவர்கள் தனித்து அறிவித்தால் அது ஏற்றுக்கொள்ளப்படாது. இவர்களைப்போன்று மற்ற அறிவிப்பாளர்கள் அறிவித்திருந்தால் அந்த செய்தி ஏற்றுக்கொள்ளப்படும். - மேற்கண்ட செய்தியை ஹம்மாத் பின் ஸைதிடமிருந்து வேறு அறிவிப்பாளர்களும் அறிவித்துள்ளனர்.
- மேலும் மேற்கண்ட செய்தி நபித்தோழரின் கூற்றாகவும், நபி (ஸல்) அவர்களின் சொல்லாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- திர்மிதீ அவர்கள் இது மவ்கூஃப்– நபித்தோழரின் கூற்று என்பதே சரி என்று கூறியுள்ளார்.
- ஷுஐப் அல்அர்னாவூத்,பிறப்பு ஹிஜ்ரி 1346
இறப்பு ஹிஜ்ரி 1438
வயது: 92
அல்பானி பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
போன்றோர் இது மர்ஃபூஃ என்று கூறியுள்ளனர்.
மேலும் பார்க்க: அஹ்மத்-11908.
அஸ்ஸலாமு அலைக்கும். திர்மிதீயின் இந்த 2407 – வது ஹதீஸின் தரம் பற்றிய விபரங்களைக் கொடுத்துள்ளீர்கள். ஆனால் இது ஆதாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளத்தக்க ஹதீசா அல்லது பலவீனமானதா என்று புரியவில்லை. தயவு செய்து தெளிவுபடுத்தவும்
வ அலைக்கும் ஸலாம். இந்தச் செய்தியை நாம் பார்த்தவரை சில அறிஞர்கள் ஹஸன் தரம் என்று கூறியிருப்பது சரியான கருத்தே. எனவே ஹஸன் தரம் என்று பதிவு செய்கிறோம்.
பார்க்க: அஹ்மத்-11908.
அறிவிப்பாளர்களை கவனித்து இதை ஹஸன் தரம் என்று கூறியுள்ளீர்கள் என்று நினைக்கிறேன். இது சரிதானே?
அடுத்து இந்த ஹதீஸைப் பதிவு செய்த திர்மிதீ இமாம் அவர்கள், இது மவ்கூஃப் – நபித்தோழரின் கூற்று என்பதே சரி என்று கூறியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளீர்கள். நபி (ஸல்) அவர்கள் சொல்லாத, இத்தகைய மவ்கூஃபான செய்திகளை, “நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என்று அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிப்பதை எவ்வாறு எடுத்துக் கொள்ள வேண்டும்?
இப்படிப்பட்ட செய்திகள் ஏற்றுக்கொள்ளத்தக்கவையா?
அஸ்ஸலாமு அலைக்கும்.
இந்தச் செய்தியில் இன்னும் சில விளக்கம் சேர்க்கவேண்டியுள்ளது. அதைச் சேர்க்காததால் தான் நீங்கள் இந்த கேள்வி கேட்டுள்ளீர்கள். இதை சுருக்கமாக சொல்வென்றால் நபியின் சொல்லா அல்லது நபித்தோழரின் சொல்லா என்று சந்தேகமாக அறிவித்தது ஹம்மாத் பின் ஸைத் அவர்கள் தான். ஆரம்பத்தில் இவரிடமிருந்து கேட்டு அறிவித்தவர்கள் இந்த சந்தேகம் இல்லாதவாறு கேட்டுள்ளனர். பிறகு கேட்டவர்கள் இந்த சந்தேகத்தோடு அறிவித்துள்ளனர். ஹம்மாத் பின் ஸைத் அவர்களுக்கு இது போன்ற சந்தேகம் ஏற்பட்டது பிற்காலத்தில் தான் என்பதால் அறிஞர்கள் அதை பொருட்படுத்துவதில்லை.
வஅலைக்குமுஸ்ஸலாம்.
இந்தச் செய்தியில் இன்னும் சில விளக்கம் சேர்க்கவேண்டியுள்ளது என்று கூறியுள்ளீர்கள் அல்ஹம்துலில்லாஹ்.
இந்த ஹதீஸ் ஹஸன் தரத்தில் உள்ளதுதான் என்றால், சிறிய அளவு விமர்சனங்களோடு இது ஏற்றுக்கொள்ளத்தக்க ஹதீஸாக இருக்கலாம். அத்துடன் இங்கே இன்னொரு தகவலையும் சொன்னால் உதவியாக இருக்கும்.
“ஹம்மாத் பின் ஸைத் அவர்களிடமிருந்து ஆரம்பத்தில் கேட்டு அறிவித்தவர்கள் இந்த சந்தேகம் இல்லாதவாறு கேட்டுள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளீர்கள். அந்த சந்தேகமில்லாத அறிவிப்புகளில் நபியின் சொல்லாக அறிவிக்கப்பட்டுள்ளதா அல்லது நபித் தோழரின் சொல்லாக அறிவிக்கப்பட்டுள்ளதா என்பதை தயவுசெய்து தெளிவுபடுத்துங்கள்.
உறுப்புக்கள் ஒன்றுக்கொன்று இவ்வுலகிலேயே இப்படி உரையாடுமா? இதைப் போன்ற வேறு ஏதாவது உதாரண ஹதீஸ்களோ, ஆயத்களோ உள்ளதா? என்று இத்துடன் சொன்னால் உதவியாக இருக்கும்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
தரம் பற்றிய முழு விளக்கம் பார்க்க: அஹ்மத்-11908. இந்த செய்தியில் நாவிடம் பிற அவயங்கள் பணிந்து பேசுகின்றன என்ற கருத்தை உண்மை என்று வைத்தாலும் அவை எப்படி பேசுகின்றன என்று நமக்கு தெரியாது. இது மறைவான விசயம். “ஒவ்வொன்றும் தனது வணக்கத்தையும், துதித்தலையும் அறிந்துள்ளன” (அல்குர்ஆன்: 24:41) பொருட்கள் அனைத்தும் அல்லாஹ்வை தஸ்பீஹ் செய்கின்றன என்று அல்லாஹ் கூறுகிறான். இதை நாம் உணரமுடியாது. அதுபோன்றே இதையும் எடுத்துக் கொள்ளலாம்.
அல்லது இந்தக் கருத்தை மஜாஸ் என்றும் புரிந்துக் கொள்ளலாம். நபி (ஸல்) இலக்கிய நயமாக கூறியிருக்கலாம். நாவு செய்யும் தவறுக்காக உலகிலும், மறுமையில் பாதிப்படைவது உடல் முழுவதும் தானே.
வ அலைக்குமுஸ்ஸலாம். உங்கள் பதிலுக்கு ஜஸாக்கல்லாஹ் ஹைரா.
இந்த ஹதீசிலுள்ள வாசகங்கள் நபி (ஸல்) அவர்கள் இலக்கிய நயமாக கூறியதைப் போல் தோன்றவில்லை. உறுப்புகள் நாக்கிடம் பேசுவதாகவே அறிவிப்பதாகதான் உள்ளது.
நீங்கள் சொல்வது போல் நாவு செய்யும் தவறுக்காக உடல் முழுவதும்தான் உலகிலும், மறுமையில் பாதிப்படையும் என்பது உண்மை என்றாலும், மறுமையில் வாய்க்கு பூட்டு போடப்பட்டு மற்ற உறுப்புகளை அல்லாஹ் பேச வைப்பான் என்பது போல் இவ்வுலகிலும் அவை பேசிக் கொள்ளுமா என்பது ஏதோ ஒரு குழப்பத்தை ஏற்படுத்துகிறதே? ஏனெனில் நாவுக்கு சம்பந்தமில்லாத பல தவறுகளை மற்ற உறுப்புகளும் செய்கின்றன. அந்த தவறுகளுக்கு அந்தந்த உறுப்புதானே பொறுப்பாக முடியும்? நாவின் தவறுக்கு மட்டும் மற்ற உறுப்புகள் ஏன் நாவிடம் பேச வேண்டும் என்ற குழப்பம்தான். இதற்கு வேறு ஏதாவது தெளிவு கிடைக்குமா?
நல்ல அண்டைவீட்டார் அமைவது, நல்ல வாகனம் கிடைப்பது, விசாலமான வீடு இருப்பதும் ஒரு மனிதனின் நற்பேறில் உள்ளதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: அஹ்மத் (14830)
இந்த ஹதீசை இந்த தளத்தில் இன்னும் பதிவு செய்யவில்லையா? அல்லது வேறு எண்ணில் உள்ளதா? இந்த ஹதீஸ் சரியானதா?