பாடம் :
ஜனாஸாத் தொழுகையில் அல்ஹம்து அத்தியாயத்தை ஓதுதல்.
நபி (ஸல்) அவர்கள் ஒரு ஜனாஸாத் தொழுகையில் அல்ஹம்து அத்தியாயத்தை ஓதினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இப்பாடப் பொருள் தொடர்பான செய்திகள் உம்மு ஷரீக் (ரலி) அவர்களின் வழியாகவும் வந்துள்ளன.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் வழியாக வந்துள்ள இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர் அவ்வளவு வலுவானது அல்ல. (காரணம் இதில் இடம்பெறும்) இப்ராஹீம் பின் உஸ்மான்-அபூஷைபா அல்வாஸிதீ என்பவர் முன்கருல் ஹதீஸ்-ஹதீஸ்துறையில் நிராகரிக்கப்பட்டவர் ஆவார்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்து அவர்களின் சொல்லாக (கீழ்க்கண்டவாறு) அறிவிக்கப்படுவதே சரியானதாகும்:
ஜனாஸா தொழுகையில் ஃபாத்திஹா அத்தியாயம் ஓதுவது சுன்னத் (நபி-ஸல்) அவர்களின் வழிமுறை) ஆகும்.
(திர்மிதி: 1026)بَابُ مَا جَاءَ فِي القِرَاءَةِ عَلَى الجَنَازَةِ بِفَاتِحَةِ الكِتَابِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ قَالَ: حَدَّثَنَا زَيْدُ بْنُ حُبَابٍ قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ عُثْمَانَ، عَنْ الحَكَمِ، عَنْ مِقْسَمٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ،
أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَرَأَ عَلَى الجَنَازَةِ بِفَاتِحَةِ الكِتَابِ
وَفِي البَاب عَنْ أُمِّ شَرِيكٍ.: «حَدِيثُ ابْنِ عَبَّاسٍ حَدِيثٌ لَيْسَ إِسْنَادُهُ بِذَاكَ الْقَوِيِّ، إِبْرَاهِيمُ بْنُ عُثْمَانَ هُوَ أَبُو شَيْبَةَ الوَاسِطِيُّ مُنْكَرُ الحَدِيثِ»،
وَالصَّحِيحُ عَنْ ابْنِ عَبَّاسٍ قَوْلُهُ: مِنَ السُّنَّةِ القِرَاءَةُ عَلَى الجَنَازَةِ بِفَاتِحَةِ الكِتَابِ
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-947.
Tirmidhi-Shamila-1026.
Tirmidhi-Alamiah-947.
Tirmidhi-JawamiulKalim-945.
إسناد شديد الضعف فيه إبراهيم بن عثمان السلمي وهو متروك الحديث
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் இப்ராஹீம் பின் உஸ்மான் மிக பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும். திர்மிதீ இமாம் அவர்களும் அதை இங்கு குறிப்பிட்டுள்ளார்கள்.
சரியான ஹதீஸ் பார்க்க: புகாரி-1335 .
சமீப விமர்சனங்கள்