பாடம்:
பெருந்தொடக்கினால் குளிப்பது (கட்டாயம்) என்பது குறித்து வந்துள்ளவை.
மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் குளிப்பதற்காக நான் தண்ணீர் வைத்தேன். அவர்கள் பெருந்துடக்கினால் (கடமையான) குளிப்பை நிறைவேற்றினார்கள். அப்போது இடது கையால் பாத்திரத்தை வலது கையின் மீது சாய்த்து, தமது இரு உள்ளங்கைகளையும் கழுவினார்கள். பிறகு தமது கையை பாத்திரத்தினுள் நுழைத்து, தமது மர்ம உறுப்பின் மீது தண்ணீரை ஊற்றினார்கள். பிறகு தமது கையால் சுவரையோ அல்லது தரையையோ தேய்த்து, வாய் கொப்பளித்து, மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தினார்கள். பின்னர் தமது முகத்தையும், இரு முழங்கைகளையும் கழுவினார்கள். பிறகு தமது தலையின் மீது மும்முறை தண்ணீரை ஊற்றினார்கள். பின்னர் தமது உடலின் மற்ற பாகங்கள் மீது தண்ணீரை ஊற்றினார்கள். பிறகு சற்றே விலகிச் சென்று தமது கால்களைக் கழுவினார்கள்.
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இது “ஹஸன், ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்த ஹதீஸாகும்.
இப்பாடப்பொருள் தொடர்பான செய்திகள் உம்மு ஸலமா (ரலி), ஜாபிர் (ரலி), அபூஸயீத் (ரலி), ஜுபைர் பின் முத்இம் (ரலி), அபூஹுரைரா (ரலி) ஆகியோர் வழியாகவும் வந்துள்ளன.
(திர்மிதி: 103)بَابُ مَا جَاءَ فِي الغُسْلِ مِنَ الجَنَابَةِ
حَدَّثَنَا هَنَّادٌ قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ الأَعْمَشِ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الجَعْدِ، عَنْ كُرَيْبٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ، عَنْ خَالَتِهِ مَيْمُونَةَ، قَالَتْ:
«وَضَعْتُ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غُسْلًا، فَاغْتَسَلَ مِنَ الجَنَابَةِ، فَأَكْفَأَ الإِنَاءَ بِشِمَالِهِ عَلَى يَمِينِهِ، فَغَسَلَ كَفَّيْهِ، ثُمَّ أَدْخَلَ يَدَهُ فِي الإِنَاءِ فَأَفَاضَ عَلَى فَرْجِهِ، ثُمَّ دَلَكَ بِيَدِهِ الحَائِطَ، أَوِ الأَرْضَ، ثُمَّ مَضْمَضَ وَاسْتَنْشَقَ، وَغَسَلَ وَجْهَهُ وَذِرَاعَيْهِ، ثُمَّ أَفَاضَ عَلَى رَأْسِهِ ثَلَاثًا، ثُمَّ أَفَاضَ عَلَى سَائِرِ جَسَدِهِ، ثُمَّ تَنَحَّى فَغَسَلَ رِجْلَيْهِ»
هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ، وَفِي البَابِ عَنْ أُمِّ سَلَمَةَ، وَجَابِرٍ، وَأَبِي سَعِيدٍ، وَجُبَيْرِ بْنِ مُطْعِمٍ، وَأَبِي هُرَيْرَةَ
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-96.
Tirmidhi-Shamila-103.
Tirmidhi-Alamiah-96.
Tirmidhi-JawamiulKalim-96.
சமீப விமர்சனங்கள்