தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-12

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்: 8

நின்றுகொண்டு சிறுநீர் கழிப்பதற்கு வந்துள்ள தடை.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் நின்றுகொண்டு சிறுநீர் கழிப்பார்கள் என யாரேனும் உங்களிடம் சொன்னால், அதை நீங்கள் நம்பாதீர்கள். நபி (ஸல்) அவர்கள் உட்கார்ந்துதான் சிறுநீர் கழித்துவந்தார்கள்.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப் பொருள் தொடர்பான ஹதீஸ், உமர் (ரலி), புரைதா (ரலி), அப்துர்ரஹ்மான் பின் ஹஸனா (ரலி) ஆகியோர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்துள்ள மேற்கண்ட ஹதீஸ், இப்பாடப் பொருளில் வந்துள்ள ஹதீஸ்களில் மிகவும் அழகானதும் ஆதாரபூர்வமானதும் ஆகும்.

உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

நான் நின்றுகொண்டு சிறுநீர் கழித்துக்கொண்டிருப்பதை நபி (ஸல்) அவர்கள் கண்டார்கள். அப்போது “உமரே! நின்றுகொண்டு சிறுநீர் கழிக்காதீர்” என்று (என்னிடம்) கூறினார்கள். அதன் பின்னர் நான் நின்று கொண்டு சிறுநீர் கழிப்பதில்லை.

இந்த அறிவிப்பை இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்து நாஃபிஉ (ரஹ் அவர்களும், நாஃபிஉ அவர்களிடமிருந்து அப்துல்கரீம் பின் அபுல்முகாரிக் என்பாரும் அறிவிக்கின்றனர். இதை நபி (ஸல்) அவர்களுடன் தொடர்புபடுத்தி அப்துல்கரீம் பின் அபுல்முகாரிக் என்பார் மட்டுமே அறிவிக்கிறார். இவர் நபிமொழி அறிஞர்களிடம் பலவீனமான அறிவிப்பாளர் ஆவார். இவரை அய்யூப் அஸ்ஸக்தியானீ (ரஹ்) அவர்கள், பலவீனமானவர் என்று விமர்சித்துள்ளார். உமர் (ரலி) அவர்கள், “நான் இஸ்லாத்தை ஏற்றதிலிருந்து நின்றுகொண்டு சிறுநீர் கழித்ததில்லை” என்று கூறியதாக இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்து நாஃபிஉ (ரஹ்) வழியாக உபைதுல்லாஹ் பின் உமர் பின் ஹஃப்ஸ் (ரஹ்) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

உபைதுல்லாஹ் அவர்கள் வழியாக வந்துள்ள இந்த அறிவிப்பே அப்துல்கரீம் பின் அபுல் முகாரிக் என்பாரின் (முந்தைய) அறிவிப்பைவிட ஆதாரபூர்வமானதாகும். இந்த விஷயத்தில் புரைதா (ரலி) அவர்களிடமிருந்து வந்துள்ள ஹதீஸ், வலுக்குறைந்தது (ஃகைரு மஹ்ஃபூழ் எனும் முன்னுரிமை பெறாத ஹதீஸ்) ஆகும்.

ஆக, நின்றுகொண்டு சிறுநீர் கழிப்பதற்கு வந்துள்ள விலக்கு, தடை செய் யப்பட்டது (ஹராம்) என்ற பொருளில் வந்ததன்று. மாறாக, ‘ஒழுக்க போதனை’ (தார்மிகப் பண்பு) என்ற அடிப்படையிலானதாகும். மேலும், “நீ நின்று கொண்டு சிறுநீர் கழிப்பது ஒழுங்கீனமான செயலாகும் என அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது (இங்கு நினைவு கூறத்தக்கதாகும்) 

(திர்மிதி: 12)

بَابُ النَّهْيِ عَنِ الْبَوْلِ قَائِمًا

حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ قَالَ: أَخْبَرَنَا شَرِيكٌ، عَنِ الْمِقْدَامِ بْنِ شُرَيْحٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ:

«مَنْ حَدَّثَكُمْ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَبُولُ قَائِمًا فَلَا تُصَدِّقُوهُ، مَا كَانَ يَبُولُ إِلَّا قَاعِدًا»

وَفِي الْبَابِ عَنْ عُمَرَ، وَبُرَيْدَةَ، حَدِيثُ عَائِشَةَ أَحْسَنُ شَيْءٍ فِي الْبَابِ وَأَصَحُّ، وَحَدِيثُ عُمَرَ إِنَّمَا رُوِيَ مِنْ حَدِيثِ عَبْدِ الْكَرِيمِ بْنِ أَبِي الْمُخَارِقِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنْ عُمَرَ، قَالَ: رَآنِي النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَبُولُ قَائِمًا، فَقَالَ: «يَا عُمَرُ، لَا تَبُلْ قَائِمًا»، فَمَا بُلْتُ قَائِمًا بَعْدُ. وَإِنَّمَا رَفَعَ هَذَا الْحَدِيثَ عَبْدُ الْكَرِيمِ بْنُ أَبِي الْمُخَارِقِ، وَهُوَ ضَعِيفٌ عِنْدَ أَهْلِ الْحَدِيثِ؛ ضَعَّفَهُ أَيُّوبُ السَّخْتِيَانِيُّ وَتَكَلَّمَ فِيهِ. وَرَوَى عُبَيْدُ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ عُمَرُ: «مَا بُلْتُ قَائِمًا مُنْذُ أَسْلَمْتُ»، وَهَذَا أَصَحُّ مِنْ حَدِيثِ عَبْدِ الْكَرِيمِ، وَحَدِيثُ بُرَيْدَةَ فِي هَذَا غَيْرُ مَحْفُوظٍ، وَمَعْنَى النَّهْيِ عَنِ الْبَوْلِ قَائِمًا عَلَى التَّأْدِيبِ لَا عَلَى التَّحْرِيمِ وَقَدْ رُوِيَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، قَالَ: «إِنَّ مِنَ الْجَفَاءِ أَنْ تَبُولَ وَأَنْتَ قَائِمٌ»


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-12.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.