பாடம் : 91
குளித்த பின் ஒருவர் தம் மனைவியை அணைத்து குளிர் காய்வது தொடர்பாக வந்துள்ளவை.
123 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் சில சமயங்களில் பெருந்துடக்கிற்காகக் குளித்து விட்டு வந்து, என்னை அணைத்துச் சூடேற்றிக்கொள்வார்கள். நானும் அவர்களை என்னோடு அணைத்து கொள்வேன். அப்போது நான் குளித்திருக்க மாட்டேன்.
(திர்மிதி: 123)باب مَا جَاءَ فِي الرَّجُلِ يَسْتَدْفِئُ بِالْمَرْأَةِ بَعْدَ الْغُسْلِ
دَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ حُرَيْثٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ
رُبَّمَا اغْتَسَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم مِنَ الْجَنَابَةِ ثُمَّ جَاءَ فَاسْتَدْفَأَ بِي فَضَمَمْتُهُ إِلَىَّ وَلَمْ أَغْتَسِلْ ”
قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ لَيْسَ بِإِسْنَادِهِ بَأْسٌ . وَهُوَ قَوْلُ غَيْرِ وَاحِدٍ مِنْ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَالتَّابِعِينَ أَنَّ الرَّجُلَ إِذَا اغْتَسَلَ فَلاَ بَأْسَ بِأَنْ يَسْتَدْفِئَ بِامْرَأَتِهِ وَيَنَامَ مَعَهَا قَبْلَ أَنْ تَغْتَسِلَ الْمَرْأَةُ . وَبِهِ يَقُولُ سُفْيَانُ الثَّوْرِيُّ وَالشَّافِعِيُّ وَأَحْمَدُ وَإِسْحَاقُ .
Tirmidhi-Tamil-114
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-123
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-.
திர்மிதீ இமாம் கூறுகிறார் :
இது, (பெரிய) குறையேதும் இல்லாத அறிவிப்பாளர்தொடரில் வந்துள்ள ஹதீஸாகும்.
நபித்தோழர்கள் மற்றும் தாபிஉகளில் பெரும்பாலான அறிஞர்களின் கூற்றும் இதுவேயாகும். ஓர் ஆண் குளித்த பின்பு, குளிக்காமலிருக்கும் தன்மனைவியைக் கட்டியணைத்துக் குளிர் காய்வதாலோ அவளுடன் படுத்து உறங்குவதாலோ எந்தக் குற்றமுமில்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.
சமீப விமர்சனங்கள்