பாடம்: 9
நின்றுகொண்டு சிறுநீர் கழிப்பதற்கு வந்துள்ள அனுமதி.
13 . ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஒரு சமூகத்தாரின் குப்பைக் குழிக்குச் சென்று அங்கு நின்றுகொண்டு சிறுநீர் கழித்தார்கள். அப்போது அங்கத் தூய்மை (உளூ) செய்வதற்கான தண்ணீரை அவர்களிடம் நான் கொண்டு சென்றேன். (அவர்கள் சிறுநீர் கழிப்பதைக் கண்டு) நான் பின் வாங்கிச் செல்லலானேன்.
அப்போது அவர்கள் என்னை (தமக்கு அருகில்) அழைத்தார்கள். நான் (சென்று) அவர்களுக்குப் பின்பக்கம் நின்றுகொண்டேன். பிறகு அவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். அப்போது தம் (கால்களைக் கழுவுவதற்குப் பதிலாக ஈரக் கையால்) தம் காலுறைகள் (மோஜா)மீது தடவி (மஸ்ஹு செய்திடலா)னார்கள்.
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
வகீஉ (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸை அஃமஷ் (ரஹ்) வழியாக அறிவித்துவிட்டு, “காலுறைகள்மீது மஸ்ஹுச் செய்வது தொடர்பாக வந்துள்ள நபிமொழி அறிவிப்புகளில் இந்த அறிவிப்பே மிகவும் ஆதாரபூர்வமானதாகும்” என்று கூறியதை நான் கேட்டேன் என ஜாரூத் (ரஹ்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்.
மேலும், இந்த ஹதீஸை வகீஉ (ரஹ்) அவர்கள் கூறியதை நான் கேட்டேன் என அபூஅம்மார் ஹுஸைன் பின் ஹூரைஸ் (ரஹ்) அவர்களும் என்னிடம் தெரிவித்தார்கள்.
இவ்வாறு ஹுதைஃபா (ரலி) அவர்கள் அறிவித்ததாக அபூவாயில் வழியாக மன்ஸூர் (ரஹ்) அவர்களும் உபைதா அள்ளப்பீ (ரஹ்) அவர்களும் அறிவித்துள்ளனர்.
இந்த ஹதீஸை, ஹம்மாத் பின் அபூஸுலைமான், ஆஸிம் பின் பஹ்தலா ஆகியோரும் அபூவாயில் அவர்களிடமிருந்து முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்களின் ஹதீஸாக அறிவித்துள்ளனர். எனினும், இந்த அறிவிப்பைவிட ஹுதைஃபா (ரலி) அவர்களிடமிருந்து அபூவாயில் (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் அறிவிப்பே மிகவும் ஆதாரபூர்வமானதாகும்.
(இந்த நபிமொழியின் அடிப்படையில்) அறிஞர்களில் ஒரு குழுவினர் நின்றுகொண்டு சிறுநீர் கழிப்பது அனுமதிக்கப்பட்டதாகும் என்று கூறியுள்ளனர்.
இந்த ஹதீஸை அபீதா பின் அம்ர் அஸ்ஸல்மானீ (ரஹ்) அவர்கள் வழியாக இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்களும் அறிவித்துள்ளார்கள்.
அபீதா பின் அம்ர் (ரஹ்) அவர்கள் மூத்த தாபிஉகளில் ஒருவராவார். அபீதா அவர்கள், “நபி (ஸல்) இறப்பதற்கு ஈராண்டுகளுக்குமுன் நான் இஸ்லாத்தைத் தழுவிவிட்டேன்” என்று கூறியதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
(ஹதீஸ் துறையில்) ‘உபைதா அள்ளப்பீ என்ற பெயரில் அறியப்படுபவர் இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்களின் மாணவர் ஆவார். (மேற்கண்ட அபீதா பின் அம்ர் என்பவர் இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்களின் ஆசிரியர் ஆவார். உபைதா அள்ளப்பீ அவர்களின் தந்தை பெயர் முஅத்திப் என்பதாகும். அபூஅப்துல்கரீம் என்பது உபைதாவின் குறிப்புப் பெயராகும்.
(திர்மிதி: 13)بَابُ مَا جَاءَ فِي الرُّخْصَةِ فِي ذَلِكَ
حَدَّثَنَا هَنَّادٌ، قال: حَدَّثَنَا وَكِيعٌ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ حُذَيْفَةَ،
«أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَى سُبَاطَةَ قَوْمٍ، فَبَالَ عَلَيْهَا قَائِمًا، فَأَتَيْتُهُ بِوَضُوءٍ، فَذَهَبْتُ لِأَتَأَخَّرَ عَنْهُ، فَدَعَانِي حَتَّى كُنْتُ عِنْدَ عَقِبَيْهِ، فَتَوَضَّأَ وَمَسَحَ عَلَى خُفَّيْهِ»
وسَمِعْت الْجَارُودَ، يَقُولُ: سَمِعْتُ وَكِيعًا يُحَدِّثُ بِهَذَا الْحَدِيثِ، عَنِ الْأَعْمَشِ، ثُمَّ قَالَ وَكِيعٌ: هَذَا أَصَحُّ حَدِيثٍ رُوِيَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْمَسْحِ، وسَمِعْت أَبَا عَمَّارٍ الْحُسَيْنَ بْنَ حُرَيْثٍ، يَقُولُ: سَمِعْتُ وَكِيعًا، فَذَكَرَ نَحْوَهُ، وَهَكَذَا رَوَى مَنْصُورٌ، وَعُبَيْدَةُ الضَّبِّيُّ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ حُذَيْفَةَ، مِثْلَ رِوَايَةِ الْأَعْمَشِ، وَرَوَى حَمَّادُ بْنُ أَبِي سُلَيْمَانَ، وَعَاصِمُ بْنُ بَهْدَلَةَ، عَنْ أَبِي وَائِلٍ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَحَدِيثُ أَبِي وَائِلٍ، عَنْ حُذَيْفَةَ أَصَحُّ. وَقَدْ رَخَّصَ قَوْمٌ مِنْ أَهْلِ الْعِلْمِ فِي الْبَوْلِ قَائِمًا
[قال أَبو عيسى: وعَبِيدة بن عَمرو السَّلْماني رَوَى عنه إبراهيم النَّخَعي, وعَبِيدة من كبار التابعين, يُرْوَى عن عَبِيدة أنه قال: أسلمتُ قَبْلَ وفاة النَّبِّي بسنتين, وعُبيدة الضَّبِّيُّ صاحبُ إبراهيم: هو عُبيدة بن مُعَتِّبٍ الضَّبِّي, ويُكنَى أبا عبد الكريم]
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-13.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-.
(குறிப்பு: இந்த செய்தியில் உபைதா அள்ளப்பீ பற்றி திர்மிதீ இமாம் அவர்கள் கூறும் தகவல் சில பிரதிகளில் இல்லை)
சமீப விமர்சனங்கள்