1322/2. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீதிபதிகள் மூன்று வகைப்படுவர். இருவர் நரகத்திலும், ஒருவர் சுவர்க்கத்திலும் நுழைவர்.
- நீதியை அறிந்தும் அதன்படி தீர்ப்பளிக்காமல், தீர்ப்பில் அநீதி செய்தவர். இவர் நரகத்தில் நுழைவார்.
- உண்மையை அறியாமல் தன்னுடைய அறியாமையுடனேயே தீர்ப்பு வழங்கி மக்களின் உரிமைகளை நாசமாக்கியவர். இவர் நரகத்தில் நுழைவார்.
- நீதியை அறிந்து அதன்படி செயல்படுபவர். இவர் சுவர்க்கத்தில் நுழைவார்.
அறிவிப்பவர் : புரைதா (ரலி)
(திர்மிதி: 1322)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ قَالَ: حَدَّثَنِي الحَسَنُ بْنُ بِشْرٍ، حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ الأَعْمَشِ، عَنْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ، عَنْ ابْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
القُضَاةُ ثَلَاثَةٌ: قَاضِيَانِ فِي النَّارِ، وَقَاضٍ فِي الجَنَّةِ، رَجُلٌ قَضَى بِغَيْرِ الحَقِّ فَعَلِمَ ذَاكَ فَذَاكَ فِي النَّارِ، وَقَاضٍ لَا يَعْلَمُ فَأَهْلَكَ حُقُوقَ النَّاسِ فَهُوَ فِي النَّارِ، وَقَاضٍ قَضَى بِالحَقِّ فَذَلِكَ فِي الجَنَّةِ
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-1322/2.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-1240.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் شريك بن عبد الله بن الحارث ஷரீக் பின் அப்துல்லாஹ் நினைவாற்றல் குறையுள்ளவர்.
- தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
, நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
போன்றோர் இவர் தனித்து அறிவித்தால் அது பலமானது அல்ல என்று கூறியுள்ளனர். - இதே கருத்து வேறு அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது. எனவே அல்பானி பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள் இதை சரியான செய்தி என்று குறிப்பிட்டுள்ளார்.
صدوق يخطئ كثيرا , تغير حفظه منذ ولي القضاء بالكوفة ، وكان عادلا فاضلا عابدا شديدا على أهل البدع
تقريب التهذيب: (1 / 436)
மேலும் பார்க்க: அபூதாவூத்-3573 .
சமீப விமர்சனங்கள்