தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-15

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்: 11

(மலஜலம் கழித்தபின்) வலக் கரத்தால் துப்புரவு செய்வது அரு வருக்கத்தக்க செயலாகும் என்பது குறித்து வந்துள்ளவை.

அபூகத்தாதா அல்அன்ஸாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், “ஒருவர் தமது வலக் கரத்தால் பிறவி உறுப்பைத் தொடக் கூடாது” எனத் தடைவிதித்தார்கள்.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப் பொருள் தொடர்பான ஹதீஸ், ஆயிஷா (ரலி), ஸல்மான் அல்ஃபாரிஸீ (ரலி), அபூஹுரைரா (ரலி), ஸஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி) ஆகியோராலும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட ஹதீஸ் “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.

அபூகத்தாதா அல்அன்ஸாரீ (ரலி) அவர்களின் இயற்பெயர் ஹாரிஸ் பின் ரிப்ஈ என்பதாகும். இந்த ஹதீஸின் அடிப்படையிலேயே செயல்பட வேண்டுமென பெரும்பாலான அறிஞர்கள் கருதுகின்றனர். மலம்ஜலம் கழித்தப்பின் வலக்கையால் துப்புரவு செய்வதை அருவருக்கத்தக்க (தடை செய்யப்பட்ட) செயல் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

(திர்மிதி: 15)

بَابٌ فِي كَرَاهَةِ الِاسْتِنْجَاءِ بِالْيَمِينِ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي عُمَرَ الْمَكِّيُّ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ مَعْمَرٍ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ، عَنْ أَبِيهِ،

«أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى أَنْ يَمَسَّ الرَّجُلُ ذَكَرَهُ بِيَمِينِهِ»

وَفِي الْبَاب عَنْ عَائِشَةَ، وَسَلْمَانَ، وَأبِي هُرَيْرَةَ، وَسَهْلِ بْنِ حُنَيْفٍ. هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ. وَأَبُو قَتَادَةَ، اسْمُهُ الْحَارِثُ بْنُ رِبْعِيٍّ، وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ: كَرِهُوا الِاسْتِنْجَاءَ بِالْيَمِينِ


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-15.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.