தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-18

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்: 14

எதைக் கொண்டு துப்புரவு செய்யலாகாது என்பது குறித்து வந்துள்ளவை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(மலஜலம் கழித்தபின்) கெட்டிச் சாணம், எலும்பு
ஆகியவற்றால் துப்புரவு செய்யாதீர்கள்.
ஏனெனில், அவை உங்கள் சகோதர (இனத்தா)ரான ஜின்களின் உணவாகும்.

இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இப்பாடப் பொருள் தொடர்பான ஹதீஸ், அபூஹுரைரா (ரலி), ஸல்மான் அல்ஃபாரிஸீ (ரலி), ஜாபிர் (ரலி), இப்னு உமர் (ரலி) ஆகியோர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், “ஜின்கள் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்த இரவில் அவர்களுடன் யாரும் இருந்தார்களா?” என்று அல்கமா (ரஹ்) அவர்கள் கேட்டார்கள்…என்று தொடங்கும் நீண்ட ஹதீஸ், ஷஅபீ (ரஹ்) அவர்களிடமிருந்து இஸ்மாயீல் பின் இப்ராஹீம் வழியாக மற்றோர் அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.

அதில், “நபி (ஸல்) அவர்கள் கெட்டிச் சாணம், எலும்பு ஆகியவற்றால் (மலஜலம் கழித்தபின்) துப்புரவு செய்யாதீர்கள். ஏனெனில் அவை, உங்கள் சகோதர (இனத்தா)ரான ஜின்களின் உணவாகும்” என்று கூறியதாக இடம் பெற்றுள்ளது.

இவ்விரு அறிவிப்புகளில் இஸ்மாயீல் அவர்கள் வழியாக வந்துள்ள (இந்த) அறிவிப்பே, ஹஃப்ஸ் பின் ஃகியாஸ் என்பார் இடம்பெற்றுள்ள (முந்தைய) அறிவிப்பாளர் தொடரைவிடமிகவும் சரியானதாகத் தெரிகிறது. இந்த ஹதீஸின் அடிப்படையிலேயே செயல்படவேண்டுமென அறிஞர்கள் கருதுகிறார்கள்.

(திர்மிதி: 18)

بَابُ كَرَاهِيَةِ مَا يُسْتَنْجَى بِهِ

حَدَّثَنَا هَنَّادٌ، قَالَ: حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنْ دَاوُدَ بْنِ أَبِي هِنْدٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«لَا تَسْتَنْجُوا بِالرَّوْثِ، وَلَا بِالْعِظَامِ، فَإِنَّهُ زَادُ إِخْوَانِكُمْ مِنَ الْجِنِّ»

وَفِي الْبَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ، وَسَلْمَانَ، وَجَابِرٍ، وَابْنِ عُمَرَ، وَقَدْ رَوَى هَذَا الْحَدِيثَ إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، وَغَيْرُهُ، عَنْ دَاوُدَ بْنِ أَبِي هِنْدٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، أَنَّهُ كَانَ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةَ الْجِنِّ، الْحَدِيثَ بِطُولِهِ، فَقَالَ الشَّعْبِيُّ: إِنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا تَسْتَنْجُوا بِالرَّوْثِ، وَلَا بِالْعِظَامِ، فَإِنَّهُ زَادُ إِخْوَانِكُمْ مِنَ الْجِنِّ» وَكَأَنَّ رِوَايَةَ إِسْمَاعِيلَ أَصَحُّ مِنْ رِوَايَةِ حَفْصِ بْنِ غِيَاثٍ، وَالْعَمَلُ عَلَى هَذَا الْحَدِيثِ عِنْدَ أَهْلِ الْعِلْمِ وَفِي الْبَابِ عَنْ جَابِرٍ، وَابْنِ عُمَرَ


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-18.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.