தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-2044

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரும்புக் கருவியால் தற்கொலை செய்து கொள்பவர், நரகத்தில் அதே கருவியைக் கையில் பிடித்துக்கொண்டு, அதைத் தமது வயிற்றில் குத்திக்கொண்டேயிருப்பார்; அவர் அங்கேயே என்றென்றும் தங்கியிருப்பார்.

விஷத்தைக் குடித்துத் தற்கொலை செய்து கொள்பவர், நரகத்தில் அதே விஷத்தைக் கையில் பிடித்துக்கொண்டு, அதைத் தமது வாயில் ஊற்றிக்கொண்டேயிருப்பார்; அவர் அங்கேயே என்றென்றும் தங்கியிருப்பார்.

மலையிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொள்பவர், நரகத்தில் அதேபோல் கீழே விழுந்து கொண்டேயிருப்பார்; அவர் அங்கேயே என்றென்றும் தங்கியிருப்பார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்த (அறிவிப்பாளர்தொடரில் உள்ள) ஹதீஸ் சரியானதாகும். இது இதற்குமுன் வந்துள்ள ஹதீஸை விட இது மிகச் சரியானது.

இந்த ஹதீஸை, அஃமஷ் —> அபூஸாலிஹ் —> அபூஹுரைரா (ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் பலரும் அறிவித்துள்ளனர்.


முஹம்மது பின் அஜ்லான் அவர்கள், ஸயீத் அல்மக்புரீ —> அபூஹுரைரா (ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில், “யார் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்கிறாரோ, அவர் நரக நெருப்பில் வேதனை செய்யப்படுவார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்துள்ளார். மேலும், இதில் ” தற்கொலை செய்தவர் அதில் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்” என்று வாக்கியத்தைக் குறிப்பிடவில்லை.

அபுஸ்ஸினாத் அவர்களும் இந்தக் கருத்தையே, அல்அஃரஜ் —> அபூஹுரைரா (ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார். இதுவே மிகவும் சரியானதாகும்.

ஏனெனில், ஏகத்துவவாதிகள் (அவர்களின் சில பாவங்களால்) நரகத்தில் வேதனை செய்யப்படுவார்கள். பின்னர் அதிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று தான் மற்ற (சரியான) ஹதீஸ்கள் வந்துள்ளன. அவர்கள், அதில் நிரந்தரமாக இருப்பார்கள் என்று கூறப்படவில்லை.

(திர்மிதி: 2044)

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قَالَ: حَدَّثَنَا أَبُو دَاوُدَ، عَنْ شُعْبَةَ، عَنْ الأَعْمَشِ، قَالَ: سَمِعْتُ أَبَا صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«مَنْ قَتَلَ نَفْسَهُ بِحَدِيدَةٍ فَحَدِيدَتُهُ فِي يَدِهِ يَتَوَجَّأُ بِهَا فِي بَطْنِهِ فِي نَارِ جَهَنَّمَ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا، وَمَنْ قَتَلَ نَفْسَهُ بِسُمٍّ فَسُمُّهُ فِي يَدِهِ يَتَحَسَّاهُ فِي نَارِ جَهَنَّمَ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا، وَمَنْ تَرَدَّى مِنْ جَبَلٍ فَقَتَلَ نَفْسَهُ فَهُوَ يَتَرَدَّى فِي نَارِ جَهَنَّمَ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا»

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ العَلَاءِ قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، وَأَبُو مُعَاوِيَةَ، عَنْ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، نَحْوَ حَدِيثِ شُعْبَةَ، عَنِ الأَعْمَشِ،

هَذَا حَدِيثٌ صَحِيحٌ، وَهُوَ أَصَحُّ مِنَ الحَدِيثِ الأَوَّلِ هَكَذَا رَوَى غَيْرُ وَاحِدٍ هَذَا الحَدِيثَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ،

وَرَوَى مُحَمَّدُ بْنُ عَجْلَانَ، عَنْ سَعِيدٍ المَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ قَتَلَ نَفْسَهُ بِسُمٍّ عُذِّبَ فِي نَارِ جَهَنَّمَ» وَلَمْ يَذْكُرْ فِيهِ: «خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا»، وَهَكَذَا رَوَاهُ أَبُو الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَهَذَا أَصَحُّ لِأَنَّ الرِّوَايَاتِ إِنَّمَا تَجِيءُ بِأَنَّ أَهْلَ التَّوْحِيدِ يُعَذَّبُونَ فِي النَّارِ ثُمَّ يُخْرَجُونَ مِنْهَا وَلَمْ يُذْكَرْ أَنَّهُمْ يُخَلَّدُونَ فِيهَا


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-2044.
Tirmidhi-Alamiah-1967.
Tirmidhi-JawamiulKalim-1963.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

 


மேலும் பார்க்க: புகாரி-5778.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.