தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-5778

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 56

விஷம், ஆபத்தான பொருள், அசுத்தமான பொருள் ஆகியவற்றால் சிகிச்சை அளிப்பதும், விஷம் அருந்துவதும்.

 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மலையின் மீதிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொள்கிறவர் நரக நெருப்பில் (தள்ளப்பட்டு மேலிருந்து கீழே) என்றைக்கும் நிரந்தரமாக குதித்துக் கொண்டேயிருப்பார்.

விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்கிறவர் தம் விஷத்தைக் கையில் வைத்திருந்தபடி நரக நெருப்பில் என்றென்றும் நிரந்தரமாக குடித்துக் கொண்டேயிருப்பார்.

ஒரு கூரிய ஆயுதத்தால் தற்கொலை செய்து கொள்கிறவரின் கூராயுதத்தை அவர் தம் கையில் வைத்துக்கொண்டு நரக நெருப்பில் தம் வயிற்றில் தாமே என்றென்றும் நிரந்தரமாக அதனால் குத்திக் கொண்டேயிருப்பார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 76

(புகாரி: 5778)

بَابُ شُرْبِ السُّمِّ وَالدَّوَاءِ بِهِ وَبِمَا يُخَافُ مِنْهُ وَالخَبِيثِ

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الوَهَّابِ، حَدَّثَنَا خَالِدُ بْنُ الحَارِثِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سُلَيْمَانَ، قَالَ: سَمِعْتُ ذَكْوَانَ، يُحَدِّثُ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

مَنْ تَرَدَّى مِنْ جَبَلٍ فَقَتَلَ نَفْسَهُ، فَهُوَ فِي نَارِ جَهَنَّمَ يَتَرَدَّى فِيهِ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا، وَمَنْ تَحَسَّى سُمًّا فَقَتَلَ نَفْسَهُ، فَسُمُّهُ فِي يَدِهِ يَتَحَسَّاهُ فِي نَارِ جَهَنَّمَ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا، وَمَنْ قَتَلَ نَفْسَهُ بِحَدِيدَةٍ، فَحَدِيدَتُهُ فِي يَدِهِ يَجَأُ بِهَا فِي بَطْنِهِ فِي نَارِ جَهَنَّمَ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا»


Bukhari-Tamil-5778.
Bukhari-TamilMisc-5778.
Bukhari-Shamila-5778.
Bukhari-Alamiah-5333.
Bukhari-JawamiulKalim-5360.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம்

2 . அப்துல்லாஹ் பின் அப்துல்வஹ்ஹாப்

3 . காலித் பின் ஹாரிஸ்

4 . ஷுஅபா

5 . ஸுலைமான் பின் மிஹ்ரான்-அஃமஷ்

6 . அபூஸாலிஹ்-ஸம்மான்-தக்வான்

7 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி)


ஆய்வின் சுருக்கம்:

  • இந்தக் கருத்தில் வரும் செய்தியின் அடிப்படையில் தற்கொலை செய்தவருக்கு நிரந்தர நரகம் என்றும், அவருக்காக பாவமன்னிப்பு கேட்கக்கூடாது என்பதால் அவருக்கு ஜனாஸாத் தொழுகை நடத்தக் கூடாது என்றும் சிலர் கூறுகின்றனர்.
  • திர்மிதீ இமாம் போன்ற வேறு சிலர், அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் வேறுசில அறிவிப்பாளர்கள் தற்கொலை செய்தவர் நிரந்தரமாக நரகில் இருப்பார் என்ற கருத்தை அறிவிக்கவில்லை என்பதாலும்; ஏகத்துவ கொள்கையுடையவர்கள் சில பாவங்களுக்கு தண்டிக்கப்பட்டு பிறகு சொர்க்கம் செல்வார்கள் என்று பல ஹதீஸ்கள் உள்ளதாலும் மற்றொரு வகையான செய்திக்கே முன்னுரிமை தந்துள்ளனர்.

(பார்க்க: திர்மிதீ-2044)


معرفة علوم الحديث للحاكم (ص53):
قَالَ الْحَاكِمُ: ‌وَقَدِ ‌اخْتَلَفَ ‌أَئِمَّةُ ‌الْحَدِيثِ ‌فِي ‌أَصَحِّ ‌الْأَسَانِيدِ، فَحَدَّثَنَا أَبُو عَبْدِ اللَّهِ مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ، قَالَ: ثَنَا مُحَمَّدُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: سَمِعْتُ مُحَمَّدَ بْنَ إِسْمَاعِيلَ الْبُخَارِيَّ يَقُولُ: «أَصَحُّ الْأَسَانِيدِ كُلِّهَا مَالِكٌ ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، وَأَصَحُّ أَسَانِيدِ أَبِي هُرَيْرَةَ أَبُو الزِّنَادِ، عَنِ الْأَعْرَجِ ، عَنْ أَبِي هُرَيْرَةَ»

(நூல்: மஃரிஃபது உலூமில் ஹதீஸ்-1/53-57)


تهذيب التهذيب (5/ 204):
وقال البخاري ‌أصح ‌أسانيد ‌أبي ‌هريرة ‌أبو ‌الزناد ‌عن ‌الأعرج ‌عن ‌أبي ‌هريرة

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-5/204)

புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள் பொதுவாக, அபுஸ்ஸினாத் —> அஃரஜ் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி)
என்ற அறிவிப்பாளர்தொடரை மிகச் சரியானது என்று கூறியுள்ளார் என்பதாலும், மேற்கூறப்பட்ட காரணங்களாலும் திர்மிதீ இமாம் இவ்வாறு கூறியுள்ளார் என்று தெரிகிறது.


  • மேலும் சிலர் மேற்கண்ட செய்தியில் வரும் “காலிதன் முகல்லதன் ஃபீஹா அபதா” என்பதற்கு “அல்லாஹ் நாடும் வரை நீண்ட காலம்” என்று பொருள் தருகின்றனர். இது கடுமையாக எச்சரிக்கை செய்வதற்காக கூறப்பட்டது என்றும் கூறுகின்றனர்.

  • நபி (ஸல்) அவர்கள், தற்கொலை செய்தவருக்கு ஜனாஸாத் தொழுகை நடத்தவில்லை என்பதால் அவருக்கு ஜனாஸாத் தொழுகை இல்லை என்று சிலர் கூறுகின்றனர்.
  • வேறு சிலர் நபி (ஸல்) அவர்கள் தொழவைக்காவிட்டாலும் நபித்தோழர்கள் தொழவைத்திருப்பார்கள் என்பதின்படியும், இவர் இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர் அல்ல என்பதாலும் இவருக்கு இமாம் அல்லாத மற்றவர்கள் ஜனாஸாத் தொழுகை நடத்தலாம் என்றும் கூறுகின்றனர்.

1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • அஃமஷ் —> அபூஸாலிஹ் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-, முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-, அஹ்மத்-7448, 10195, 10337, தாரிமீ-2407, புகாரி-5778முஸ்லிம்-109, இப்னு மாஜா-3460, அபூதாவூத்-3872, திர்மிதீ-2043, 2044, முஸ்னத் பஸ்ஸார்-, குப்ரா நஸாயீ-2103, நஸாயீ-1965, ஷரஹ் முஷ்கிலில் ஆஸார்-196, இப்னு ஹிப்பான்-5986, அல்முஃஜமுல் அவ்ஸத்-, குப்ரா பைஹகீ-,


  • அபுஸ்ஸினாத் —> அஃரஜ் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: அஹ்மத்-9618, புகாரி-1365, ஷரஹ் முஷ்கிலில் ஆஸார்-195, இப்னு ஹிப்பான்-5987, அல்முஃஜமுல் அவ்ஸத்-,


 


2 . ஸாபித் பின் ளஹ்ஹாக் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: புகாரி-1363.



இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: முஸ்லிம்-1779,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.